Tuesday, September 11, 2012

Mugamoodi - A Super Hero??????



வணக்கம் நண்பர்களே,

வேறு வழியே இல்லாமல் முகமூடி திரைப்படம் நானும் பார்த்துவிட்டேன்.
இருந்தாலும் மிகவும் நான் எதிர்பார்த்த படம் அதுவும் ஒரு காமிக்ஸ் ரசிகர் எடுத்த படம் இவ்வளவு மொக்கையாக ஆனது வருத்தமே.

கதை.

ஆரம்பம் ஒரு படு மொக்கை.
ஒரு வீட்டில் கொள்ளை நடக்கிறது.வில்லன் எலும்புக்கூடு முகமூடி அணிந்து வீட்டில் இருக்கும் ஒரு வயதான பாட்டியை ஓடி வந்து சுத்தியில் அடித்து கொள்கிறார்.
ஒரு பாட்டியை எதுக்குப இப்படி கொல்லனும் விட்டுருந்தா அடுத்தநாள் அதுவே செத்து போயிருக்கும்.
அப்படி ஒரு பயங்கர வில்லனாம்.

இவரை பிடிக்க சிறப்பு அதிகாரி நாசர் வருகிறார்.(பாவம்)

ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஹீரோ ஜீவா.அன்பான அம்மா,எப்பொழுதும் திட்டும் அப்பா,
வீட்டின் மாடியில் அவரது தாத்தா வழக்கம் போல அவருக்கு வழிகாட்டி.
மற்றும் ஒரு தாத்தா மாடியில் இருக்கிறார் அவர் துணிகள் மூலம் பொம்மைகள் செய்பவர்.
இப்பொழுதே தெரிந்து கொள்ளலாம் இவர் தான் நம்ம முகமூடிக்கு உடை தெய்த்து தரபோகிறார்.

நமது ஹீரோ ஒரு குங்க்பூ பிரியராம்.
அவரது ஆசிரியர் செல்வா.அவர் எல்லாரிடமும் காசு வாங்காமல் குங்க்பூ சொல்லி தருவாராம்.
அதுனால அவர் பரம ஏழையாம்.ஒரு பாடாவதி வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியலேன்னு வீடு ஓனர் வேற மிரடுராரம்.

அப்பா இப்பவே முடியல பேசாம அப்பொழுதே எழுந்து வந்திருக்க வேண்டும் விதி என்ன செய்வது 500 செலவு செய்தாகிவிட்டது முழுவதும் பார்த்துவிட்டு தான் வந்தேன்.
  
நம்ம ஏழை ஆசிரியருக்கு ஆள்  தெரடுகிறாராம்  எப்படி ஒரு மீன் மார்கெட் பொய் அங்க மீன் விகிரவங்க கூட சண்ட போட்டு அவங்கள 1000 கொடுத்து கத்துக்க சொல்கிறார்.
அப்ப நம்ம ஹீரோயின் intro வேற.

வழக்கம் போல நம்ம ஹீரோ விற்கு  ஹீரோயின்  மேல காதல் வர.
அவரை கவுக்க முகமூடி அணிந்து சென்று இதய பலூன் விடுகிறாராம்.
இதனை பார்த்த உடனே நம்ம ஹீரோயின் காதல் வய படுகிறார்.

இடை பட்ட சமயத்தில் நம்ம ஹீரோ வில்லன் களின் மற்றொரு கொள்ளையின் நடுவில் மாட்டிக்கொண்டு வில்லன்களில்  ஒருவரை போலீசிடம் மாட்டிவிடுகிறார்.

ஆகையால் நம்ம வில்லன் நம்ம ஹீரோவை ஒரு கொலை கேசில் மாட்டிவிட்டு ஒரு குற்றவாளி ஆக்குகிறான்.
இதில் இருந்து நம்ம ஹீரோ தப்பித்து வில்லனை கொன்று நம்ம ஹீரோயின் காதலை எப்படி அடைகிறார் என்பதே மீதிகதை.

இடையில் ஒரு பிளாஷ் பாக் வேற நம்ம செல்வாவும் வில்லன் நரேனும் ஒரே ஆசிரியரிடம் குங்க்பூ கற்றுக்கொண்டார்கலாம்.

இறுதிகாட்சியில் நம்ம ஹீரோ சாய்க்கும் வில்லன்கள் எண்ணிகையை விட அவரது ஷெர்லோக் தாத்தா அடித்துபோடும் ஆட்கள் அதிகம்.(என்ன கொடுமை சார் இது)   

பாடல்கள் எதுவுமே எனக்கு பிடிக்கவில்லை.
நம்ம மிஸ்கினிடம் இருந்து இப்படி ஒரு திரைப்படம் எதிர்பார்கவில்லை.

எனது எண்ணங்கள்:
ஒரு சூப்பர் ஹீரோ படம் என்றால் ஒரு அழுத்தமான வில்லன் வேண்டும்.
ஆனால் இங்கு சாதாரண நகை கொள்ளையடிக்கும் வில்லன்.
அதுவும் அவரால் வயதானவர்கள் மட்டுமே கொல்லபடுகிறார்கள்.
இது ஒரு மிக பெரிய மைனஸ்.

காதல் காட்சிகள் எதுவுமே அழுத்தமாக இல்லை.
அவருக்கு ஏன் முகமூடி மேல் காதல் வருகிறது என்பதற்கு ஒரு அழுத்தமான காரணம் இல்லை.

இறுதியில் நம்ம ஹீரோ முகமூடி அணிவதற்கு நல்ல காரணம் இல்லை.
சும்மா ஹீரோயினிடம் முகம் காட்டக்கூடாது என்றால் அவரை வெளிபடுதிக்கொள்ளாமலே வேறு ஏதாவது செய்திருக்கலாம்.

சண்டை காட்சிகள் சில நன்றாக இருந்தாலும் அவை வீணாக்க பட்டிருகின்றன.

நான் எதிர்பார்க்கும் மாற்றங்கள்:

ஹீரோ தனது குங்க்பூ திறமையை வெளிபடுத்த ஒரு நல்ல அறிமுக காட்சி வைத்திருக்கலாம்.
ஒரு மொக்கையான மீன் மார்கெட் சண்டைக்கு பதில்,அவரது நல்ல மனதை காண்பிக்க எதாவது ஒரு கடத்தல் அல்லது ஒரு விபத்து அதில் இருந்து அவர் காப்பாற்றுகிறார்.
(க்ரிஷ் படத்தில் வரும் சர்கஸ் தீ விபத்து போல)

அடுத்து நம்ம வில்லன் சாதாரண நகை கொள்ளையனாக இல்லாமல் வேறு பெரிதாக ஏதாவது வைத்திருக்கலாம்.
பல தொடர்பே இல்லாத பல குற்றங்களை இறுதில் ஒன்றாக்கி ஒரு suspense வைத்து வேறு ஏதாவது பெரிய காரணம் சொல்லி இருக்கலாம்.

ஹீரோ ஹீரோயின் காதலை இன்னும் சற்று நல்ல காட்சி அமைப்புடன் கூறி இருக்கலாம்.

பார்க்கலாம் இந்த மாற்றங்களை தனது இரண்டாம் பாகத்தில் கொண்டு வருவாரா என்று.

அவ்வளவு தான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வெ.

22 comments:

  1. மிஷ்கின் இந்த முறை ஏமாற்றி விட்டார்...சறுக்கி விட்டார் என்றே நான் சொல்வேன்..அடுத்த படத்தில் மீண்டு வருவார் என்று நம்புவோமாக...
    இந்த படத்துக்கு செலவு 500 rs...ரொம்ப அதிகம் பாஸ்... :)

    ReplyDelete
    Replies
    1. என்ன பாஸ் பண்றது சத்யம்ல டிக்கெட் 300 மற்றும் இதர செலவுகள் 200

      Delete
  2. //ஒரு பாட்டியை எதுக்குப இப்படி கொல்லனும் விட்டுருந்தா அடுத்தநாள் அதுவே செத்து போயிருக்கும்.//
    :) :) :)

    //500 செலவு செய்தாகிவிட்டது//
    சிங்கிள் ஸ்க்ரீன்ல பாத்திருக்கலாமே! :)

    ReplyDelete
    Replies
    1. வரவுக்கு நன்றி கார்த்திக்.
      இதுதான் பக்கத்தில் இருந்தது.மற்றும் சத்யத்தில் cold காபி நன்றாக இருக்கும்.

      Delete
  3. படத்தின் ரிசல்ட் காமிக்ஸ் உலகிற்கு கொஞ்சம் ஏமாற்றத்தை அளிக்கிறது.

    நண்பர் கிருஷ்ணாவின்  கடுப்பு அவர் பதிவிட்டிருக்கும் விதத்திலேயே தெரிகிறது. பின்னே, ஒரு கோல்டு காஃபிக்கு 500ரூபாய் என்றால் சும்மாவா?!




    ReplyDelete
    Replies
    1. எனது மனதை கச்சிதமாக புரிந்து கொண்டீர்கள் நண்பரே.

      Delete
  4. மிஷ்கின்: டிங்..டாங்.. (கிருஷ்ணா வீட்டு டோர் பெல்) (டிங்..டாங்.. டோன்தானே கிருஷ்ணா)

    கிருஷ்ணா: யாருங்க வேணும்?

    மிஷ்கின்: என் பெயர் மிஷ்கின், முகமூடி பட டைரக்டர். அவரை பார்க்க வந்திருக்கிறேன். Mr. கிருஷ்ணா இருக்கிறாரா?

    கிருஷ்ணா: நான்தான் கிருஷ்ணா, நைஸ் டு மீட் யூ! வாங்க உள்ளே. (இவர் ராத்திரியில் கூட கூலிங் க்ளாஸை கழட்ட மாட்டாரோ!?)

    மிஷ்கின்: கிருஷ்ணா, உங்க வலை பதிவில் முகமூடி படத்தை விமர்சித்து நீங்கள் எழுதியதை படித்தேன்.

    கிருஷ்ணா: விமர்சனத்தில் தாக்கியதனால் கடுப்பாகி, பதிலுக்கு என்னை தாக்க நீங்களூம் உங்கள் வில்லன் நரேனைப்போல் சுத்தியை தூக்கிக் கொண்டு வந்து விட்டீர்களா என்ன? சுத்தியே தேவையில்லை, நேற்று படம் பார்த்த எஃபெக்டே ஆயிரம் சுத்தியாலால் அடித்தது போல உள்ளது. நீங்கள் ஆனியே பிடுங்கி இருக்கவேண்டாம் என்பதை படம் பார்க்க வந்தவர்களுக்கு சொல்வதற்காக சிம்பாலிக்காக வில்லன் கையில் சுத்தியலை ஆயுதமாக கொடுத்தீர்களா?

    மிஷ்கின்: மன்னிக்க வேண்டும் கிருஷ்ணா, Kung Fu Hustle-னு ஒரு ஹாங்கங் படம், அதில் Axe Gang-னு ஒரு கேடி மாபியா கும்பல் வரும், அந்த கும்பலின் தலைவன் முதல் அனைத்து உறுப்பினர்களும் கையில் கோடாலியைத்தான் ஆயுதமாக வைத்திருப்பார்கள். மைக்கேல் ஜாக்சன் த்ரில்லர் பாடலில் எப்படி குரூப் டான்ஸ் ஆடுவாரோ அதுபோல குங்ஃபு ஹஸ்சில் படத்திலும் கும்பலாக கோடாலியோடு வில்லன் குரூப் டான்ஸ் ஆடுவான். அந்த இன்ஸ்பிரேஷனில்தான் சுத்தியல். கோடாலியைத்தான் முதலில் நரேன் கையில் கொடுத்தேன், ஆனால், utv படக் கம்பெனிக்கும், நியூலைன் சினிமா கம்பெனிக்கும், தெய்வத்திருமகள் படக் கதையின் காப்பிரைட் பிரச்சனையால், அதிக பண செலவு பிடித்ததால், கோடாலியை மாற்ற சொல்லி விட்டார்கள். நானும், கோடாலி நமது கடவுள் பரசுராமரின் ஆயுதம் என்று சொல்லிவிடலாம் என்று எவ்வளவோ கன்வின்ஸ் செய்து பார்த்தேன், UTV சம்மதிக்க வில்லை. நல்ல கலைஞர்களின் கற்பனைக்கு முட்டுக்கட்டை போடுவதே தயாரிப்பாளர்களின் வேலை. என்னை இன்னும் சுதந்திரமாக செயல்பட விட்டிருந்தால் முகமூடி இன்னும் சிறப்பாக வந்திருக்கும்.
    என் சோக கதையை விடுங்கள் நான் வந்த விஷயத்தை சொல்லி விடுகிறேன். முகமூடி இரண்டாம் பாகம் எடுக்கப் போகிறேன். உங்கள் விமர்சனத்தில் அடுத்த படத்தை எப்படி எடுப்பது என்று நல்ல ஐடியாக்களை சொல்லி இருந்தீர்கள். அதனால் உங்களை என் அசிஸ்டன் டைரக்டராக செலக்ட் செய்திருக்கிறேன். அடுத்த படத்தை எடுக்கும் போது நீங்கள் என்னுடன் பணியாற்றினால் நன்றாக இருக்கும். இந்தாருங்கள் இதுதான் காண்ட்ராக்ட் பத்திரம். இதில் மட்டும் நீங்கள் கையெழுத்து போட்டுவிடுங்கள் போதும். மற்றதை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். அப்படியே இந்த 1000/- ரூபாயை பிடியுங்கள். 500/- ரூபாய் நீங்கள் படத்துக்காக செலவு செய்தது, மீதம் 500/- ரூபாய் படத்தை முழுதும் பார்த்ததற்கு.

    கிருஷ்ணா:!!!!!!!!!!!!!!!!!!!....

    ReplyDelete
    Replies
    1. நல்லவேளை மிஷ்கின் இந்த விமர்சனத்தை பார்கவில்லை.
      அவர் பார்த்திருந்தால் ஆகும் விளைவை உங்கள் பின்னுட்டத்தில் இருந்து தெரிந்து கொண்டேன்.
      அப்பா ஒரு பின்னுடதிற்கே நீங்கள் இவ்வளவு யோசிகிரீர்கள் அப்போ ஒரு பதிவிற்கு உங்களது உழைப்பை யோசிக்கும் போது.
      முடியல.....
      எல்லாத்தையும் விட அந்த 1000 ரூபாய் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

      Delete
    2. உங்கள் வீட்டு கதவை தட்டிய மிஷ்கின், பாட்டியை எப்படி சுலபமாக கொல்வது என்ற என்னுடைய ஆலோசனையினால் கவரப்பட்டு, சுத்தியல் இல்லாமல், வெறுங்கையுடன் என் வீட்டு கதவை மிஷ்கின்,தட்டினார் என்றால் உங்களுக்கு அந்த 1000-ம் ரூபாவை மீண்டும் தரும்படி அவரிடம் முறையிடுகிறேன். (அவரது கருப்பு கண்ணாடியை கழட்டி அவர் என்னை முறைக்காமல் இருக்க வேண்டும்).

      நீங்கள் பாரட்டும்படி ஒரு பின்னூட்டம் இடும்படி ஒரு படம் எடுத்த மிஷ்கினுக்கும், அதற்கு விமர்சனம் எழுதிய உங்களுக்கும் மிகவும் நன்றி.

      Delete
  5. //ஒரு பாட்டியை எதுக்கு இப்படி கொல்லனும் விட்டுருந்தா அடுத்தநாள் அதுவே செத்து போயிருக்கும்.//

    கதவுக்கு பின்னால் மறைந்திருந்த்து, “பே” என்ற சத்தத்தோடு பயமுறுத்தியிருந்தாலோ அல்லது ஒரு பேப்பரில் அதே “பே” என்ற வார்த்தயையோ அல்லது ”சுத்தியலால் அடிப்பேன்” என்று எழுதி பாட்டியின் கையில் கொடுத்திருந்தாலோ பாட்டி பொட்டென்று போயிருக்கும், நமக்கும் ஒரு காமடி சீன் கிடைத்திருக்கும்.

    ஒரு மொக்கையான படத்திற்கு, நல்ல பதிவிட்டிருக்கிறீர்கள். உங்கள் பதிவின் முழுமை திருப்தியளிக்கிறது. வாழ்த்துக்கள். மிஷ்கின் உங்களை அழைக்கிறார். ஆல் தி பெஸ்ட்.

    ReplyDelete
    Replies
    1. உங்களது யோசனையும் நன்றாக உள்ளது.
      என்ன செய்வது இது எதனையும் அவர் வைக்கவில்லையே.

      Delete
    2. Balaji sundar:

      உங்க ஹியூமர் சென்சும் பட்டையை கிளப்புது! ஜாலியான பின்னூட்டத்திலும்கூட சில முக்கியத் தகவல்களை அள்ளித் தெளிக்கும் உங்களது பொது அறிவும், அதற்கான தேடலும் கிருஷ்ணாவைப் போலவே என்னயும் வியக்க வைக்கிறது.

      தூள்கிளப்புங்க!

      Delete
    3. ஜேசன் ஸ்டேட்ஹம் நடித்த BLITS படத்திலும் ஒரு சுத்தியல் கொலை வரும் அது கூட இன்ஸ்பிரேஷனாக இருக்கலாம்.

      Delete
  6. Nice Review Nanbaa.

    //அப்பா இப்பவே முடியல பேசாம அப்பொழுதே எழுந்து வந்திருக்க வேண்டும் விதி என்ன செய்வது 500 செலவு செய்தாகிவிட்டது // Ticket 500 ??????? Aniyaayam. Ingellaam 100 roopaai thaandinaale athisayam.

    //எப்படி ஒரு மீன் மார்கெட் பொய் அங்க மீன் விகிரவங்க கூட சண்ட போட்டு அவங்கள 1000 கொடுத்து கத்துக்க சொல்கிறார்.// Intha katchiyai parthen. Mudiyala :)

    //அடுத்து நம்ம வில்லன் சாதாரண நகை கொள்ளையனாக இல்லாமல் வேறு பெரிதாக ஏதாவது வைத்திருக்கலாம்.// Same Feeling.

    Ithil irandaavathu paagam veraa??? Athilaavathu Muthu comics peyarai izhukkaaamal irukka sollungal. Sila paadaavathigal padam varum mun kodutha over Build Up thangamudiyala :)

    ReplyDelete
  7. காமிக்ஸ் ரசிகர்களை அதிகம் எதிர்பார்கக வைத்த படம் . நான் இன்னும் பார்க்கவில்லை. (ஒருவேளை தப்பித்துகொண்டேனோ?).


    கவலைப்படாதீர்கள் பாசு எப்படியும் உங்கள் பணம் திரும்ப வர ஏற்பாடு செய்துவிடுவார். :)

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக தப்பித்துக்கொண்டீர்கள்.
      எனக்கு பணம் கிடைக்க நீங்களும் கொஞ்சம் சிபாரிசு பண்ணுங்கள் நண்பரே.

      Delete
    2. லேட்டஸ்ட் நியூஸ்:
      மார்வெல் காமிக்ஸ் கம்பெனி, முகமூடி படத்தின் மேல் கேஸ் போட போகிறார்களாம்.
      முகமூடி படத்தில் நரேன் சுத்தியலோடு வருவது, அவர்களது THOR காமிக்ஸ், மற்றும் படத்தைப் பார்த்து மிஷ்கின் காப்பி அடித்துவிட்டாராம். அதனால் காப்பிரைட்டுக்கு UTV தர வேண்டிய பணத்தை வசூலிக்க ASGUARD-ல் இருந்து THOR-ஐ அனுப்புவதைவிட, நம் உள்நாட்டில் இருக்கும் கல்கட்டாவில் வசிக்கும் HULK-ஐ அனுப்பலாம் என்று முடிவு செய்திருக்கிறார்களாம். ஏற்கெனவே இரவுக்கழுகார் மிஷ்கினை நன்கு துவைத்து காயப்போட்டுவிட்டார். இப்போது ஹல்க் வருகிறார் என்றால் லோகியின் நிலைதானோ மிஷ்கினுக்கு. பாவம்.

      Delete
    3. ஹ ஹ ஹ பாவம் UTV ஏற்கனவே தெய்வதிருமகள் இற்காக பணம் கட்டி நொந்தனர்.
      இப்பொழுது இதற்காகவும் என்றால் கழுத்தில் துண்டை போட்டுக்கொண்டு போக வேண்டியது தான்.

      Delete
  8. அந்த ஆடை வடிவமைப்பு நன்றாக இருந்தது நண்பா. தவிர மென் பாடல்கள் நன்று. தங்கள் விமர்சனமும் அவரை இன்னும் தூண்டி விடும். மறுமுறை நல்லா படம் எடுப்பார்.

    ReplyDelete
    Replies
    1. அதே எதிர்பார்புகளுடன் தான் நானும் இருக்கிறேன் நண்பரே.
      கண்டிப்பாக ஒரு சூப்பர் ஹீரோ ஜெயிக்கவேண்டும்.
      நமது காமிக்ஸ் புகழ் வளரவேண்டும்.

      Delete
  9. unmayana comic piriyargal andha padathai paarkave koodadhu,, sariyana mokkai padam,,, waste director,,, comics book vadivathil miga arumai ,, adhadi padamaaka adhiga selavu pidikum ,, ivanunga panamaatanga , indha maadhiri mokka padam dan edupanga ,,

    ReplyDelete