வணக்கம் நண்பர்களே,
இந்த பதிவில் நான் என்னிடம் இருக்கும் பார்வதி சித்திர கதைகளின் தொகுப்பை அளித்துள்ளேன்.
அனைத்து கதைகளுமே அருமையாக இருக்கும்.
என்னை மிகவும் கவர்ந்த வாண்டுமாமா அவர்களின் கதைகள்.
எதனை முறை படித்தாலும் திகட்டாது.
எனது கருத்தை நீங்கள் அனைவரும் ஒத்துக்கொள்வீர்கள் என நினைக்கிறன்.
நான் இந்த முறை ஊரிற்கு சென்று புகைப்படம் எடுத்த போது எனக்கு ஒரு அதிர்ச்சி காத்து இருந்தது.
பலே பாலுவும் பாட்டில் பூதமும்,கனவா நிஜமா கழுகு மனிதன் ஜடாயு மற்றும் டயல் 100 ஆகிய புத்தகங்களை காணவில்லை.
எங்கே சென்றது என்றும் தெரியவில்லை.கனத்த இதயத்தோடு மீதம் புத்தகங்களை புகைப்படம் எடுத்து வந்தேன்.
1.பவளத் தீவு
2.ஓநாய் கோட்டை
3.மூன்று மந்திரவாதிகள்
4.சிலையை தேடி
5.நந்து சுந்து மந்து
6.அறிவின் விலை ஒரு கோடி
7.பலே பாலு
8.சிறுத்தை சிறுவன்
9.பலே பாலுவும் பாட்டில் பூதமும்
10.வீர விஜயன்
11.பூதத் தீவு
12.குஷிவாலி ஹரிஷ்
13.வீராதி வீரன்
14.திகில் தோட்டம்
15.சர்கஸ் சங்கர்
மற்றும் இடையில் கனவா நிஜமா மற்றும் டயல் 100 வேறு வரும்.
அனைத்துமே வாண்டுமாமாவின் பொக்கிஷங்கள்.
பவளத் தீவு,ஓநாய் கோட்டை,மூன்று மந்திரவாதிகள்,வீர விஜயன்,பூதத் தீவு ஆகிய 5 புத்தகங்களும் மாயாஜாலங்கள் நிறைந்த
ராஜா ராணி கதைகள்.
சிலையை தேடி,சிறுத்தை சிறுவன்,வீராதி வீரன் மூன்றும் சிறுவர்கள் செய்யும் சாகசக் கதைகள்.என்னை மிகவும் கவர்ந்த கதைகள்.
அறிவின் விலை ஒரு கோடி - கௌசிகன் பெயரில் அவர் எழுதிய சமூகக் கதை.
பலே பாலு,பலே பாலுவும் பாட்டில் பூதமும்,குஷிவாலி ஹரிஷ்,சர்கஸ் சங்கர் இவை அனைத்தும் சிறுவர் செய்யும் குறும்புக் கதைகள்.
இவை தவிர அவர் பூந்தளிரில் எழுதிய பலே பாலுவும் பறக்கும் டிராயரும்,தருமு வளர்த்த தவளை,மல்லன் மாரப்பன் ஆகிய கதைகள் என்னை மிகவும் ஈர்த்தவை.
நான் மிகவும் ரசித்த நந்து சுந்து மந்து நான் முன்பு ஒருமுறை படித்ததற்கு பிறகு படிக்க முடியாமல் போனது.நான் அந்த கதைக்காக மிகவும் ஏங்குகிறேன்.
டயல் 100 அருமையான துப்பறியும் கதைகள் நிறைந்தவை.
பின் இறுதியில் பூந்தளிரில் வந்த சிறு கதைகளின் தொகுப்புகளை வெளியிட ஆரம்பித்தனர்.வாண்டுமாமா வின் புகழை பயன்படுத்தி பாண்டுமாமாவின் கதை வேறு வந்தது.
இவை தவிர சமதுச் சாரு,அழுக்கு
அண்ணாசாமி போன்ற கதாபாத்திரங்களையும் அவர் அறிமுகபடுதியுள்ளார்.
நண்பர்களே இனி வரும் நாட்களில் இக்கதைகளின் தனி பதிவுகளையும் மற்றும் பூந்தளிர் புத்தகங்களின் தனிபதிவுகளையும் இட இருக்கிறேன்.
என்னுடன் சேர்ந்து உங்களையும் ஒரு கற்பனை உலகத்திற்கு அழைத்துச் செல்ல உள்ளேன்.
அடுத்தபதிவில் உங்களை எல்லாம் ஒரு மாய உலகதிக்கு அழைத்து செல்ல போகிறேன் நண்பர்களே.
அவ்வளவு தான் நண்பர்களே.
மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வெ
முதன் முறையாக நான் உங்கள் பதிவில் ME THE FIRST :)
ReplyDeleteவழக்கம் போல் சூப்பர் collection நண்பா.
பிளாஸ்டிக் கவர் மின்னுகிறதே :) நானும் பின்பற்ற முயற்சிக்கிறேன் :)
வருகைக்கு நன்றி நண்பா.
Deleteஒரு நாள் முழுவதும்(வீட்டில் திட்டு வாங்கிக்கொண்டு) நான் செய்த வேலை.
பெண்டு கழண்டுவிட்டது.
//புத்தகங்களை காணவில்லை.
ReplyDeleteஎங்கே சென்றது என்றும் தெரியவில்லை. கனத்த இதயத்தோடு மீதம் புத்தகங்களை புகைப்படம் எடுத்து வந்தேன்.// VERY BAD NEWS.
//அடுத்தபதிவில் உங்களை எல்லாம் ஒரு மாய உலகதிக்கு அழைத்து செல்ல போகிறேன் நண்பர்களே. //EGERLY WAITING FOR THE POST...
இன்னும் அந்த வேதனையில் இருந்து மீள முடியவில்லை நண்பா.
DeletePlease, please please..i want moondru mandhiravaadhigsl, thangam pandhu and silayai thedi. You have taken me bk to 1970ss.pl tell me how to get the copies.
DeleteVandumama books are published in Kavitha pubulisher
DeleteThanks for the info. will chk
Deleteஅட! இன்னொரு பதிவு! :) அருமையான சேகரிப்பு! இப்போதெல்லாம் பிளாஸ்டிக்கை பயன்படுத்தக்கூடாது என்றுதான் எங்கும் பேச்சாக இருக்கிறது! ஆனால் புத்தகங்களை காக்க பயன்படுத்தலாம், தவறில்லை! :)
ReplyDeleteஅப்படியே புத்தக அறை / அலமாரிக்கு ஒரு பூட்டையும் போட்டு விடுங்கள்! ;)
Deleteகண்டிப்பாக.விரைவில் அடுத்த பதிவையும் எதிர்பாருங்கள்.
Deleteஆம் நண்பரே பூட்டு ஒன்றுதான் வழி
Deleteஅற்புதமான புதையல்கள் நண்பரே.................லயன் கூட தரமான மறு பதிப்பில் காணவிருக்கிறோம்......இவற்றை தங்களை போன்ற நண்பர்கள் காட்டினால்தான் உண்டு ............அந்த மாய உலகிற்காக காத்திருக்கிறேன்...................என்னை மிகவும் கவர்ந்த கதை பலே பாலு ..............எப்போது படித்தாலும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் அற்புதமான ,உண்மையான நகைச்சுவை சிறு கதை கொத்து,இதனை படிக்காதவர்கள் போன பிறவியில் கண்டிப்பாக ஏதோ பாவம் செய்திருக்க வேண்டும்,இது தற்போது திருவரசு புத்தக நிலையத்தால் மறு பதிப்பில் கிடைக்கிறது,உங்கள் பாவத்தை இதை வாங்கி கழுவி விடுங்கள் நண்பர்களே,படிக்காத நண்பர்கள்,படித்து பாருங்ககள் அப்போது உணருவீர்கள் வாண்டு மாமாவின் நகைச்சுவை தன்மையை ..............அந்த மாய ஜாலங்களும் நம்மை மயக்கும் ஜாலங்களே,உங்கள் எழுத்து நடையில் தரிசிக்க காத்திருக்கிறோம் ,சௌந்தர் நீங்களும் பதிவிடுங்கள் ,இருவரின் எழுத்து நடைக்காகவும் காத்திருக்கும் ..........................
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteபலே பாலு,குஷி வாலி ஹரிஷ் என இரண்டுமே நன்றாக இருக்கும்.
Deleteஅப்புத்தகத்தை போன சென்னை புதகன்காட்சியில் வாங்கினேன் நண்பரே.
பலே பாலு ஒரு அறிவில் நடக்கும் சிறு பிள்ளைகள் விளையாட்டை பற்றி கூறும்,
குஷி வாலி ஹரிஷ் ஒரு கான்வென்ட் பள்ளியில் எப்படி கூத்துகள் நடக்கும் என காண்பிப்பார்.
விரைவிலேயே மாயாஜால உலகை காண்பீர்கள் நண்பரே.
சரியாக சொன்னீர்கள் நண்பரே....
Deleteஉண்மையில் சிறுவயதில் இம்மாதிரியான சித்திரக்கதைகளை படிக்காதவர்களை பாக்கியம் இழந்தவர்கள் எனத்தான் சொல்ல
வேண்டும்.
அந்த வயதுகளில் இம்மாதிரியான சித்திரக்கதைகளை படிப்பதற்கு வீட்டில் எத்தனை தடைகள்,எத்தனை திட்டு அடிகள் (என்னேரமும் சித்திரக்கதைகளில் மூழ்கி இருப்பதனால்.
அதை இப்போது நினைத்தாலும் மனம்
குதூகலமாக உள்ளது.
ஆனால் தற்போது நான் வெளிநாட்டு வாசியாக இருப்பதால் இப்புத்தகத்தை வாசிக்க முடியாத துர்பாக்கிய நிலை.
வலைதளத்தில் தேடினால் விபரங்கள் கிடைக்குமே தவிர சித்திரக்கதைகளாக
படிக்க முடியவில்லை.
PDF ஃபைல்களாக இவைகளை பெறமுடியுமா...?
எப்படி பெறுவது.விபரம் தாருங்கள் நண்பரே.
நன்றி
வீராதி வீரன் வங்க தேச விடுதலை போராட்டம் என நினைக்கிறேன் ,அற்புதமான வீர சாகசம் நிறைந்த சிறு வயதில் நம்மையும் அது போல நினைக்க வைத்த,உற்ச்சாக படுத்திய ,சிறுவர்களும் சாதிக்கலாம் என என்ன வைத்த கதை ..........இதனை ஏதோ தொடரின் தொகுப்பாக எனது பள்ளி நூலகத்தில் இரு வண்ணத்தில் படித்ததாக படித்த நியாபகம் (நான் ஏழாவது படித்த போது ),பின்னர் பார்வதியிலும் கருப்பு வெள்ளையில் பல வருடங்களுக்கு பின் .......சரியா ............எனது நினைவுகளை ..........நன்றி நண்பரே
ReplyDeleteஅக்கதை என்னை மிகவும் கவர்ந்த்தது.
Deleteவிரைவில் அக்கதை பற்றிய விரிவான பதிவு இடுவேன் நண்பரே.
அருமையான பதிவு, சிறப்பான கலெக்ஷன். இந்த காமிக்ஸ் புத்தங்களை உங்கள் பதிவில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன்.
ReplyDeleteதிட்டு வாங்கிக் கொண்டு ஒரு நாள் முழுதும் செய்த வேலை என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். உண்மையிலேயே அந்த திட்டுக்கள் அனைத்தும் பாராட்டுக்களே. சிறுவயதில் விளையாட்டு, அது சொப்பு எனப்படும் விளையாட்டுப் பொருட்களை வைத்து விளையாடுவதென்றாலும், அல்லது வேறு விளையாட்டை விளையாடுவதென்றாலும் இன்னொரு தோழரோ அல்லது சகோதரரோ வேண்டும். அது போல இந்த காமிக்ஸ்களை விரும்பும், ரசிக்கும் இன்னொரு நபர் உங்கள் குடும்பத்தில் இருந்தால், உங்களது இந்த படம் எடுக்கும் வேலையில் துணையாகத்தான் இருந்திருப்பார். காமிக்ஸ் விரும்பும் ஒரு நபர் என்பவர், One of a Rare Kind. அதனால் வீட்டில் திட்டுவது என்பது நமக்கு பாராட்டுக்கள்தான்.
சில காமிக்ஸ்களை காணவில்லை என்று சொல்லியிருக்கின்றீர்கள். ஒரு வேளை அது காமிக்ஸ் வேட்டையர்களின் கைங்கர்யமாக இருக்குமோ? JUST JOKING.
காணாமல் போன புத்தகங்கள், மற்ற காமிக்ஸ்களுடன் கலந்து, மற்ற பேக்குக்குள் இருக்கலாம். நேரம் கிடைக்கும் போது தேடிப் பாருங்கள். ஒரு நோட்டுப் புத்தகம் போட்டு, எந்த பையில் என்ன புத்தகம் இருக்கிறது என்று நேரம் கிடைக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக எழுதிவிடுங்கள்.
இதைத் தொடர்ந்த உங்களது விவரமான அடுத்த பதிவுகளை படிக்க ஆவலுடன் காத்திருக்கின்றேன்.
கண்டிப்பாக நண்பரே.
Deleteவீட்டில் ஒரே பையன்.
எனது சிறு வயதில் எனது ஒரே துணை காமிக்ஸ் புத்தகங்கள் தான்.
ஆகையால் தான் எனக்கு உதவ யாரும் இல்லை.
இப்பொழுது யோசித்தால் தான் மற்ற்றொரு ஷீலாவை காணோம் புத்தகத்தையும் காணவில்லை.
அனைத்தும் விலை மதிப்பில்லாதவை.
மீண்டும் கிடைத்தால் மகிழ்வேன்.
மீண்டும் தேடிபார்க்க வேண்டும் நண்பரே.
கதையுடன் என்னை மிகவும் கவர்தது செல்லம் அவர்களின் சித்திரங்களே.
அப்படியே நிகழ்வுகளை நம் கண் முன்னே நிறுத்தும்.
யோசிக்க யோசிக்க வருத்தம் அதிகரிக்கிறது.
அட்டகாசமான பதிவு நண்பா உங்க மாதிரி அட்டை போட முயல்கிறேன். முன்னாடி எல்லாம் வந்த பார்சல் கவர் பயன்படுத்தி அட்டை போட்டு இருக்கேன்.
ReplyDeleteவருகைக்கு நன்றி நண்பரே.
Deleteநான் கூறியது போல முயற்சி செய்தீர்களா?
இன்னும் உங்களது வலை பூவில் சேர்க்கவில்லையே.
மிக மிக அருமை இரவுக்கழுகார்
ReplyDeleteமிக சரியாக த்தான் பெயர் வைத்துள்ளீர்கள் ( காமிக்ஸ் புதையல் )
பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே :))
.
வருகைக்கு நன்றி நண்பரே.
DeleteHi,
ReplyDelete"ஓநாய் கோட்டை புத்தகம் எங்கே கிடைக்கும் ?"
I'm looking for this book long long time..
- Kiri
Thanks for visiting my blog.
DeleteSorry Kiri,I am not sure whether we get those books even in Old Book Shops.
மிக்க நன்றி நண்பரே! ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
ReplyDeleteநீங்கள் தொலைத்தவற்றில் 'கனவா நிஜமா?', 'கழுகு மனிதன் ஜடாயு', 'டயல் 100' ஆகியவை என்னிடம் உள்ளன. முடிந்தால் அவற்றை ஸ்கேன் செய்து உங்களுக்கு அனுப்புகிறேன்.
ReplyDeleteநன்றி நண்பரே.சமீபத்தில் மற்றொரு நண்பரின் உதவியால் அதன் ஸ்கேன் கள் கிடைத்தன.
Delete'கழுகு மனிதன் ஜடாயு' வானதி பதிப்பகத்தில் முழுச் சித்திரக்கதையாக இப்பொழுதும் கிடைக்கிறது. வேண்டுமானால் சொல்லுங்கள் முகவரியும், பேசி எண்ணும் தருகிறேன். 'கழுகு மனிதன் ஜடாயு' மட்டுமில்லை, வாண்டுமாமாவின் இன்னும் பல நூல்கள் இன்றும் அங்கு கிடைக்கின்றன.
ReplyDeleteநானும் அவைகளை வாங்கிவிட்டேன் நண்பரே.
Deleteஎனது முந்தய பதிவில் அதனை பற்றி கூறி இருந்தேன்.
http://www.kittz.info/2012/05/blog-post_24.html
thangalidam ulla comics putthagangalai scan cheithu share cheiyalame. anaivarum padikka udhavum
ReplyDeleteஅருமை என்னிடம் சில புத்தகம் உள்ளது
ReplyDeleteKrishna,
ReplyDeleteVery nice collection. These books were my absolute favourite as a kid. I had these books collected but they went missing somehow. Is it possible to find all these books anywhere in physical or digital form at least even if they cost a lot of money?
Thank you very much,
Arun
There are friends sharing these books in PDF, please search in FB groups
Deleteஅருமையான கலெக்ஷன் ஸார்.பலே பாலுவும் பாட்டில் பூதமும்,மந்து சுந்து நந்து,பூந்தளிரில் ஜாம் ஜிம் ஜாக், காக்கை காளி, குட்டிக் குரங்கு கபீஸ், போன்ற கதைகள் இன்னும் நெஞ்சை விட்டு அகலாதவை.
ReplyDeleteமீண்டும் வாசிக்க அளவிலா ஆசை....
ஆனால் தற்போது வெளிநாட்டுவாசியாக
இருப்பதனால் எப்படி வாசிப்பது என தெரியவில்லை.
PDF கோப்புகளாக இக்கதைகள் கிடைக்குமா சார்.வாய்ப்பு இருந்தால் அதன் "லின்க்"களை பதிவிடுங்கள் சார்.
உங்களுக்கு நன்மையாக இருக்கும் ஸார்.
அருமையான கலெக்ஷன் ஸார்.பலே பாலுவும் பாட்டில் பூதமும்,மந்து சுந்து நந்து,பூந்தளிரில் ஜாம் ஜிம் ஜாக், காக்கை காளி, குட்டிக் குரங்கு கபீஸ், போன்ற கதைகள் இன்னும் நெஞ்சை விட்டு அகலாதவை.
ReplyDeleteமீண்டும் வாசிக்க அளவிலா ஆசை....
ஆனால் தற்போது வெளிநாட்டுவாசியாக
இருப்பதனால் எப்படி வாசிப்பது என தெரியவில்லை.
PDF கோப்புகளாக இக்கதைகள் கிடைக்குமா சார்.வாய்ப்பு இருந்தால் அதன் "லின்க்"களை பதிவிடுங்கள் சார்.
உங்களுக்கு நன்மையாக இருக்கும் ஸார்.
sir is it possible to send me the
ReplyDeleteKushivali harish
and Veera vijayan
NAndhu Sundhu Mandhu
Bale Balu
to my mail id rameleo23@gmail.com
My kid is very fond of listening Vandumama stories,I had all collection but due to some reason I lost it all. I want her to read it. Pls help
hi i will try to scan and send harish and balu books , if you have any other vaandu maama comics please share me too
Deletesir is it possible to send me the
ReplyDeleteKushivali harish
and Veera vijayan
to my mail id rameleo23@gmail.com My kid is very fond of listening stories, I want her to read it. Pls help
Any possibility of getting silayai thedi in any readable format. I would love to read it!!
ReplyDeletemy e mail id is siva_vasanth98@yahoo.com.
DeletePls help me to get all the books of vandumama
ReplyDeleteIan big fan of vandumama kindly tell where to get all these comics
ReplyDelete