லண்டனில் காமிக்ஸ் மார்கெட்

லண்டனில் காமிக்ஸ் மார்கெட்

லண்டனும் லயன் காமிக்ஸும்

லண்டனும் லயன் காமிக்ஸும்

Memories (2013) - Malayalam Movie Review

Memories (2013) - Malayalam Movie Review

காமிக்ஸ் புதையல் XX - Rani Comics Collection

காமிக்ஸ் புதையல் XX - Rani Comics Collection

பூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு

பூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு

Tuesday, January 26, 2016

லண்டனும் லயன் காமிக்ஸும்...

வணக்கம் நண்பர்களே,

எனது ப்ளாக்கின் மீள்வரவின் முதல் காமிக்ஸ் சார்ந்த பதிவு.

போனவருடம் ஆகஸ்ட் மாதம் பணி நிமித்தமாக இங்கிலாந்து செல்ல வாய்ப்பு கிடைத்த பொழுது, மனதில் எழுந்த முதல் எண்ணம் அங்கு சென்று பழைய புத்தக கடைகளை கண்டு பிடித்து மாயாவி மற்றும் ப்ளீட்வே புத்தகங்கள் சில வாங்க முயற்சி செய்ய வேண்டும் என்பதே.

பின் இங்கிலாந்து லண்டன் மாநகரம் வந்திறங்கிய பொழுது நாம் படித்த காமிக்ஸ் ஹீரோக்கள் வாழ்ந்த ஊர் தெரிந்தது. முக்கியமாக கதைகளில் வரும் இரண்டடுக்கு பேருந்துகள் லண்டனிற்கே உரிய ஒன்று. சிவப்பு கலரில் ப்ரமிப்பாக இருந்தது.

இங்கு வந்து செட்டில் ஆகி பணி பளு சற்று குறைந்தபொழுது, கூகிளில் பழைய புத்தக கடைகள் என்று தேடிய பொழுது ஒன்றும் கிடைக்கவில்லை. பின் ப்ளீட்வே புத்தகங்கள் என்று தேடிய பொழுது ஈபே லிங்குகள் கிடைத்தன. ஒரு சில பாரகுடா (லாரன்ஸ்) கதைகள் 10 பவுன்டுகளுக்கு இருந்தது.

சற்றே விலை அதிகம் என்று தோன்றியது. அப்பொழுதுதான் லயன் வருடாந்திர புத்தகங்கள் கண்ணில் பட்டன. விலையும் பாதியாக இருந்தது.
மேலும் பலகதைகள் நிறைந்துள்ளது தெரிந்தது. சரி என ஆர்டர் செய்தேன்.

இரண்டு மூன்று நாட்களில் வந்து சேர்ந்தது. அதனை பார்த்த பொழுது தான் நமது லயன் குண்டு புத்தகங்களுக்கு அது ஒரு ஆரம்பமாக இருந்திருக்கும் என்று. புத்தகத்தை கையில் ஏந்தும் பொழுதே மனதில் ஒருவித சந்தோசமாக இருந்தது.

ஹார்ட் பவுண்ட் அட்டை, பழுப்பு நிற தரமான தாள் என அட்டகாசமாக இருந்தது. அந்த தாளில் கருப்பு வெள்ளை சித்திரங்கள் அருமையாக இருந்தது. பெரும்பாலும் சிறு சித்திரக்கதைகள், மற்றும் ஒரு சில சிறு கதைகள் என கதை கதம்பமாக இருந்தது.

ஆனால் நமது லயன் குண்டு புத்தகங்களின் சிறப்பு, அது பல முழு நீள கதைகள் நிறைந்தாக இருப்பதே. பின் நமது லயனிற்கே உரிய பாக்கெட் சைஸ். ஆனால் லயன் ஆனுவலின் A4 சைஸில் படிக்க அதுவும் ஒரு தனி அனுபவமாக இருந்தது.

ஆர்வத்தில் பார்த்த புத்தகங்கள் எல்லாம் ஆர்டர் செய்தேன். ஆறு புத்தகங்கள் வாங்கியபின் பார்த்தால் ஒரு பெட்டி நிரம்பிவிட்டது. விமானத்தில் 4 பெட்டிகள் தான் கொண்டுவர முடியும், அனுமதிக்கப்பட்ட எடை 80கிலோ தான். வரும்பொழுதே கிட்சென் சாமான்கள் சேர்த்து கஷ்டப்பட்டு தான் கொண்டு வந்தோம்

இதில் போகும்பொழுது உறவினர்களுக்கு வேறு எதாவது வாங்கி செல்லவேண்டும். எப்படி அதை செய்ய போகிறோம் எனபது தான் எனது மனைவியின் இப்பொழுதைய கேள்வி :). அதனால் இனி வேறு புத்தகங்கள் எதுவும் வாங்க முடியாது என்பதே எனது கவலை :(.

நான் வாங்கிய புத்தகங்கள் லயன் Annual  1961(அட்டை கிழிந்த நிலையில்), 1968, 1970, 1972, 1973 மற்றும் 1975. அனைத்து புத்தகங்களிலும் இருந்தது நமது இரும்பு மனிதன் ஆர்ச்சியின் கதை தான். அடுத்து துப்பறியும் ஜிப் நோலனின் இரண்டு பக்க கதைகள். பின் ஒருசில புத்தகங்களில் சிலந்தி மனிதன் ஸ்பைடர் கதைகள் இருந்தது.

ஒரு சில கதைகள் கலரில் ஆர்ட் பேப்பரில் இருந்தது.

புத்தகங்களின் அட்டை மற்றும் ஒருசில உள்ளபக்கங்களின் புகைப்படங்கள் உங்களுக்காக கீழே.








 





மேலும் சில உட்பக்கங்கள் நாளை பகல் வேலையில் அப்லோட் செய்கிறேன்.

சரி இனி குண்டு புத்தகங்கள் வேண்டாம் எதாவது சிறிய புத்தகங்கள் வாங்கலாம் என்று யோசித்தபொழுது நண்பர் மகேஷ் John Havoc புத்தகங்கள் வாங்கி வர முடியுமா என்று கேட்டார். ஆனால் நான் மேலே கூறிய எடை விஷயம் பற்றி நண்பரிடம் கூறி முயற்சி செய்கிறேன் என்று கூறினேன்.

பின்னர் சரி வாங்கி பார்க்கலாம் என்று நண்பர்குக்கு ஒரு புத்தகம் ஆர்டர் செய்தேன், புத்தகத்தை நேரில் பார்த்த பெழுது சிறிய அளவில் எடை குறைவாக இருந்தது மகிழ்ச்சி அளித்தது.

உடனே நண்பருக்காக மீண்டும் ஒரு புத்தகமும் எனக்கு இரண்டு புத்தங்களும் வாங்கிக்கொண்டேன். அதன் அட்டை படங்கள் உங்களுக்காக.







புத்தகங்களை படித்துவிட்டு ஒரு சில கதைகளின் பதிவுகள் இட முயற்சி செய்கிறேன்.

அவ்வளவுதான் நண்பர்களே, மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வே










Monday, January 18, 2016

Samsung and Micromax Mobiles : MY Thoughts

வணக்கம் நண்பர்களே,

மிக நீண்ட உறக்கத்திலிருந்து மீண்டும் வந்திருக்கும் எனது ப்ளாக்.
பல காரணங்கள் இருந்தாலும் அதில் முதல் காரணம் எனது சோம்பேறித்தனம் தான்.

அதனால் எனது Domain renew செய்வதற்கு மறந்துவிட்டேன். மீண்டும் வாங்க பணம் அதிகம் கேட்டார்கள் புது Domain வாங்கிவிட்டேன்.

சரி புது Domain னுடன் சேர்த்து புதிதாக என்ன சேர்ப்பது என்று யோசித்தேன்.
காமிக்ஸ் மற்றும் சினிமா போல எனது மற்றொரு பையித்தியம் கேட்ஜட்டுகள் மீதே.

தினம் அவ்வகையில் என்ன என்ன புதிய நடப்புகள் புதிய கருவிகள் வந்துள்ளது என்று பார்பதில் தான் எனது காலை ஆரம்பமே.

ஆகையால் இனி அதனை பற்றியும் எனது தளத்தில் எழுதலாம் என முடிவு செய்துள்ளேன்.

இன்றைய காலத்தில் ஸ்மார்ட் போன்கள் இல்லாத நபர்களே இல்லை. அனைவருமே சோசியல் மீடியாவில் இருக்கிறார்கள் தங்களது கருத்துகளை எவ்வித பயமும் இல்லாமல் கோவமாகவோ கிண்டலாகவோ கூறலாம்.

அந்த ஸ்மார்ட்போன்களில் இந்தியாவில் மிக அதிகமாக விற்பனை ஆவது சாம்சங் மற்றும் மைக்ரோமெக்ஸ் ஆகிய இரண்டு கம்பனிகளின் போன்களே.



ஆனால் அவை இரண்டு கம்பனிகளையுமே எனக்கு பிடிக்கவில்லை. அவை இரண்டுமே மக்களை  ஏமாற்றுகிறார்கள் எனபது எனது கருத்து.

காரணம் வாங்கும் காசிற்கு ஏற்ப போன்களில் விஷயம் இருப்பதில்லை.
போன்களில் முக்கியமானவை

1. Processor & Gpu
போனின் மிகமுக்கியமான பாகங்கள், போனின் பலம் இவைகளை  பொறுத்தே இருக்கும்.என்னதான் நல்ல கேமரா டிஸ்ப்ளே என இருந்தாலும் அனைத்தையும் இயக்குவது இவைகளே.

Processor தயாரிபவர்களில் முதன்மையானவர்கள் Qualcomm கம்பெனியே அவர்களது Snapdragon processor கள் பலம் வாய்ந்தவை. இன்றைய காலகட்டத்தில் பெரும்பான்மையான போன்களில் இவர்களுடைய தயாரிப்புகளே இருக்கின்றன.

அடுத்து வருவது சீன தயாரிப்பான Mediatek கம்பெனியின் processor கள்.
அவர்களது தயாரிப்புகள் பெரும்பாலும் சீனாவில் தயாராகும் விலை குறைவான போன்களில் பயன்படுத்தபடுகின்றன.

அடுத்து சாம்சங் சொந்த தயாரிப்பான Exynos processor கள். அவர்களது போன்களில் மட்டுமே பயன்படுதபடிகின்றன (சமீபமாக Meizu நிறுவனம் தனது தயாரிப்புகளில் பயன்படுத்த ஆரம்பிதுள்ளர்கள்.)

சாம்சங் அவர்களது சொந்த தயாரிப்பான Exynos 1.2 Ghz Quadcore Processor களையே 8இல் இருந்து 25 ஆயிரம் வரையிலான போன்களில் பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள்.

 மைக்ரோமெக்ஸ் நிறுவனம் Mediatek நிறுவனத்தின் 1.4 Ghz Quadcore Processor களை 8 முதல் 12 ஆயிரம் வரையிலான போன்களுக்கும் 2Ghz Octocore processor களை சற்றே விலை அதிகமான போன்களுக்கும் பயன்படுத்துகிறார்கள்.

விளம்பரத்தில் மட்டும் Quadcore மற்றும் Octocore Processor என்று கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள். இவை Snapdragon processor கள் போல பலம் வாய்ந்தவைகள் கிடையாது.

சாம்சங் அவர்களது விலை உயர்ந்த Galaxy S மற்றும் Note Series போன்களை அமெரிக்காவில் விற்கும் பொழுது Snapdragon Processor 800 Series பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதே போன்கள் இந்தியாவில் விற்கும் பொழுது அவர்களது சொந்த தயாரிப்பை பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் அங்கே விற்பதை விட இங்கே விலை அதிகம்.( அதற்கு Tax ஒரு வகையில் காரணமாக இருந்தாலும் விலை அதிகமே)  

2. Ram
எவ்வளவு அதிகமான Ram இருக்கிறதோ அதனை பொறுத்து பெரிய கேம்கள் விளையாடுவது மற்றும் பல Apps ஒரே நேரத்தில் open செய்து வைப்பதற்கு பயன்படும்.

சாம்சங் அவர்களது 25 ஆயிரம் வரையிலான போன்களில் அதிகபட்சம் அளிப்பது 1.5GB மட்டுமே, இவை இன்று ஆரம்ப விலையிலான போன்களில் கூட 2GB RAM இருக்கிறது.


3. Display
இப்பொழுது பெரும்பாலும் போன்கள் HD(720p), Full HD(1080p) மற்றும் Quad HD(2440p) ரெசல்யுசனுடன் வருகிறது.

அதிகமான ரெசல்யுசன் என்றால் திரையில் எழுத்துக்கள் தெளிவாக இருக்கும். படங்கள் பார்க்க நன்றாக இருக்கும்.

இன்னும் சாம்சங் மற்றும் மைக்ரோமெக்ஸ் நிறுவன போன்கள் qHD ரெசல்யுசனுடன் விலை 10ஆயிரம - 12ஆயிரம் விலையில் வருகின்றன.

4. Camera
பெரும்பாலும் சோனி தயாரிப்புகளே போன்களில் பயன்படுத்த படுகின்றன.
அவை தான் நல்ல தரத்துடன் இருக்கின்றன. போட்டோ தெளிவாக இருக்க கேமரா மட்டுமே போதாது கேமரா App உம் முக்கியம்.

அவ்வகையில் சாம்சங் போன் கேமரா நன்றாக இருக்கும்.
ஆனால் மைக்ரோமெக்ஸ் நிறுவனம் மட்டமானது.

5. Rom
குறைந்த பட்சம் 16GB தேவை படும் மற்றும் SD போட வசதி.
சாம்சங் 10 ஆயிரம் விலையிலான போனில் இருக்கும் Rom 8GB .

சாம்சங் மற்றும் மைக்ரோமெக்ஸ் இரண்டுமே SD வசதி கொடுத்து தப்பித்துக் கொள்கின்றன.

6. Software
என்னை பொருத்தவரை போன்கள் நன்றாக இயங்க மிக முக்கியமான தேவை அதனை இயக்கம் Software தான்.

பெரும்பான்மையான கம்பெனிகள் Android Open Source Project யினை ஆதாரமாக வைத்து அதன் மீது மாற்றம் செய்து அவர்கள் போன்களில் பயன்படுத்துகிறார்கள்.

சாம்சங் மற்றும் மைக்ரோமெக்ஸ் போன்கள் மிகவும் பின் தங்கி உள்ளது இந்த விசயத்தில் தான்.

கூகிள் நிறுவனம் Phone,Message,Mail என அனைத்து தேவைகளுக்கும் App அளித்துள்ளது ஆனால் அவை அனைத்துக்குமே மற்றொரு App செய்து அதனை அவர்களது போன்களில் சேர்த்துள்ளனர். அவைகளை நாம் பயன்படுத்த போவதில்லை ஆனாலும் அதனை நீக்கவும் முடியாது.

வெறும் இடத்தை அடைத்துக்கொண்டு இருக்கும் இதனால் அதன் செயல்திறனும் பாதிக்கப்படும்.

அடுத்து Software Update கூகிள் ஒவ்வொரு வருடமும் புது Android Version வெளியிடுகிறார்கள். அதில் பல புதிய செயல்பாடுகள் இருக்கும்.

ஆனால் சாம்சங் அதன் மிக விலை உயர்ந்த போன்களுக்கு மட்டுமே  Software Update கொடுக்கும் அதுவும் பல மாதங்களிற்கு பிறகே. 10 முதல் 25 ஆயிரம் விலையிலான போன்கள் வாங்கும் பொழுது என்ன Version இருந்ததோ அவ்வளவுதான் அதன் பின்பு எதுவும் எதிர்பார்க்க கூடாது.

மைக்ரோமெக்ஸ் இன்னும் மோசம் Software Update என்றால் என்ன என்று கேட்பார்கள்.

இவை இரண்டின் பெரும் பலமே கடைகள் மற்றும் ஷோரூம்களில் கிடைப்பது தான். விவரம் தெரியாத மக்கள் சென்று ஏமாந்து விடுகிறார்கள்.

 இப்பொழுது நிலை சற்றே மாறி உள்ளது பல சீன நிறுவனகளின் கண்கள் இந்தியா மேல் விழுந்துள்ளது. அவர்கள் தங்களது நேரடி விற்பனைகளை  Online Retailer களான Flipkart, Amazon, Snapdeal ஆகியோருடன்  கூட்டு சேர்ந்து விற்கிறார்கள்.

இந்த பதிவு உங்களுக்கு சற்றே உபயோகமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன், இதுபோல அவ்வபொழுது புதிய நிகழ்வுகள் மற்றும் புதிய போன்கள் பற்றிய பதிவுகள் இட முயற்சி செய்கிறேன்.


அவ்வளவுதான் நண்பர்களே, மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வே.







Wednesday, January 1, 2014

Memories (2013) - Malayalam Movie Review




 வணக்கம் நண்பர்களே,

பொதுவாக நான் தமிழ் அல்லாது ஆங்கிலம்,மலையாளம்,தெலுங்கு,ஹிந்தி மற்றும் நம்ம கருந்தேள் பரிந்துரைக்கும் கொரிய படங்கள் பார்ப்பேன். (கண்டிப்பாக சப் டைட்டில் கொண்டு தான்).

எனக்கு மலையாளத்தில் பிடித்த ஹீரோ ப்ருத்விராஜ். அவர் கனா கண்டேன் திரைபடத்தில் நடித்த வித்தியாசமான வில்லன் கதாபாத்திரத்தை பார்த்தத்தில் இருந்து பிடிக்கும். உண்மையில் அக்கதையின் ஆண்ட்டி ஹீரோ அவர்  தான் நம்ம ஸ்ரீகாந்த் கெஸ்ட் ரோல் பண்ணிருப்பார் :D.

மலையாளத்தில் வரும் த்ரில்லர் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும், அந்த காலத்தில் வந்த சிபிஐ டைரிக்குறிப்பு, உண்மை முதல் போன வருடம் வந்த மசாலா 20 20 வரை நன்றாக இருக்கும்.

அதிலும் இவ்வருடம் வந்த மும்பை போலீஸ் மற்றும் மெமரீஸ் திரைப்படங்கள் மலையாள படங்களின் அடுத்த பரிமாணம் என்று கூறலாம்.

அதிலும் மும்பை போலீஸ் படத்தில் இமேஜ் பார்க்காமல் நடித்த ப்ரித்விராஜை கண்டிப்பாக பாராட்டவேண்டும். நான் ஏன் இப்படி கூறுகிறேன் என்பதை படத்தை பார்த்தால் உங்களுக்கு புரியும்.

இப்பதிவில் சமீபத்தில் நான் பார்த்த மெமரீஸ் திரைபடத்தை பற்றிய எனது கருத்தே.

படம் ஆரம்பிக்கும் பொழுது பாண்ட் படங்களில் வருவது போல ஆங்கில பாடல் ஒன்று பாட அதிரடி படை ஒன்று தீவிரவாதிகள் பிடித்து வைத்திருக்கும் நபரை சண்டையிட்டு காப்பாற்றுகிறது. அதில் ஒரு அதிகாரி சாம் அலெக்ஸ் நம்ம ப்ரித்விராஜ். பிடித்து வைத்திருந்த நபரை காப்பாற்றி அழைத்து போகும்பொழுது ஒரு தீவிரவாதி மட்டும் இறக்காமல் அவரை அடையாளம் பார்த்துவிடுகிறான்.

இது நடந்து சில மாதங்களுக்கு பிறகு, கொச்சியில் ஒரு கஸ்டம்ஸ் அதிகாரி தனது மனைவியுடன் அங்காடியில் பொருட்கள் வாங்கிகொண்டு வரும் பொழுது கார் பார்கிங்கில் வைத்து கடத்தபடுகிறார்.பின் 3 நாட்கள் கழித்து ஒரு சாலையோரத்தில் உயரமான மரத்தில் தொங்கவிட்டு கிடைக்கபடுகிறார். அவரது மார்பில்  வேற்றைய மொழியில் எழுதப்பட்டு இருக்கிறது.

அக்கொலையை விசாரிக்கும் S P வினோத் கிருஷ்ணா அக்கொலைக்கு காரணம் கொலையானவரின் மனைவியின் இளவயது காதலன் தான் என்று அவனை கைது செய்து முடித்துவிடுகிறார்.

இது நடந்து 5 மாதங்கள் கழித்து மற்றொரு அதிகாரி தனது மனைவி குடும்பத்துடன் காரில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வருகிறார். மனைவி உள்ளே செல்ல மகனை சிறுநீர் கழிக்க அழைத்து செல்கிறார். சிறிது நேரம் கழித்து வெளியே வரும் மனைவி தனது கணவன் கடத்தப்பட்டு இருப்பதை அறிகிறார்.

மேலும் 3 நாட்கள் கழித்து ஒரு ஓடையின் பாலத்தில் கைகள் பாலத்தில் கட்டப்பட்டு தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கபடுகிறார். இப்பொழுது போலீஸ் மீது பத்திரிகைகளால் குற்றம் கூறப்படுகிறது. மேலிடத்தில் இருந்து யாராவது திறமையான அதிகாரியிடம் கேஸை ஒப்படைக்க கூறப்படுகிறது.

இப்பொழுது நாம் மீண்டும் சாம் அலெக்சை பார்க்கிறோம்.முகமெல்லாம் தாடியுடன் மிகுந்த குடிபோதையுடன் இருக்கிறார். பிளாஷ்பாக்கில் நாம் முதல் காட்சில் பார்த்த தப்பித்த தீவிரவாதியினால் அவருடைய மனைவியும் மகளும் அவரது கண்முன்னால் கொலைசெய்யபட்டதை அறிகிறோம்.

அந்த நிகழ்ச்சியின் சோகத்தில் இருந்து வெளிவரமுடியாமல் முழு நேர குடிகாரராக இருக்கிறார். அவரை காணும் அவரது உயர் அதிகாரி இந்த சீரியல் கொலைகள் கேஸை பார்க்க சொல்கிறார். முதலில் மறுக்கும் சாம் பின் தனது தாயின் வற்புறுத்தலினால் சம்மதிக்கிறார்.

இடையில் அவரது குடிப்பழக்கத்தால் தனது தம்பி மற்றும் சமூகத்தில் அவலநிலைக்கு ஆளாகிறார். அவரது தம்பி தனது கல்யாணத்திற்கு கூட வரவேண்டாம் என்று அவரை கூறிவிடுகிறான்.

புலனாய்வு செய்யும் சாம் கொலையானவர்களின் மார்பில் எழுதி உள்ளது அரபு என்றும் அது பைபிளின் வாசகத்தை குறிகின்றது என்றும் கண்டுபிடிக்கிறார்.

கொலையாளி பைபிள் மீது ஈடுபாடு கொண்டவன் என்றும் ஆகையால் தான் கடத்தி 3 நாட்கள் கழித்து ஜீசஸ் போலவே கைகள் கட்டப்பட்டு தொங்கவிடுகிறான் என்றும் கண்டுபிடிக்கிறார். மற்றும் ஜீசஸ் மற்றவர்கள் பாவங்களுக்கு தான் தண்டனை அனுபவித்து போல இறந்தவர்களும் அவர்களது மனைவிகள் செய்த பாவத்திற்கு தண்டனை அனுபவிக்கின்றனர் என்றும் கண்டுபிடிக்கிறார்.

கொலையானவர்களின் மனைவிகளை விசாரிக்கும் பொழுது பல தகவல்கள் வெளிவருகின்றன. அதனை வைத்து எப்படி குற்றவாளியை கண்டுபிடிக்கிறார் மற்றும் தனது குடிப்பழக்கத்தில் இருந்து மீள்கிறார் என்பதே மீதிக்கதை.

படம் நன்றாக இருக்கிறது என்ன சப் டைட்டில் தான் கிடைக்கவில்லை, இருந்தும் புரிந்து கொள்வதில் மிகுந்த சிரமம் இருக்க வில்லை.

அவ்வளவு தான் நண்பர்களே. மீண்டும் சந்திப்போம்.

கிருஷ்ணா வ வெ.





Wednesday, December 25, 2013

Briyani vs Endrendrum Punnagai - திரைவிமர்சனம்

வணக்கம் நண்பர்களே,

சமீபமாக தியேட்டருக்கு சென்று படம் பார்க்கவே முடிவதில்லை. சென்ற மாதம் முழுவதும் அனைத்து வாரங்களும் பிரயாணம் செல்ல வேண்டி இருந்தது.

பின் அப்பாடா என்று Gravity படம் புக் செய்தால் ஆபிசில் ஒரு பிரச்சனை வந்து வார இறுதியை அங்கேயே கழிக்க வேண்டி ஆகிவிட்டது.

இப்படி நான் தவற விட்ட படங்கள் பல. இறுதியில் ஒரு வழியாக தியேட்டருக்கு சென்று பார்த்துவிட்டேன்.அதுவும் ஒன்றல்ல இரண்டு படங்கள்.நேற்று இரவு என்றென்றும் புன்னகை இன்று மதியம் பிரியாணி.அதிஷ்டவசமாக இரண்டு படங்களுமே ஏமாற்றவில்லை.

நான் பொதுவாக படங்களின் விமர்சனங்களை Sify வலைப்பூவில் பார்ப்பது வழக்கம்.படம் வெளியான அன்றே பிரியாணி படம் படு மொக்கை என்ற அளவு விமர்சித்திருந்தனர்.அதுவும் இல்லாமல் நான் கேள்விபட்ட  செய்தி வேறு நினைவுக்கு வந்தது.

தீபாவளி சமயத்தில் வெளிவந்த ஆல் இன் ஆல் அழகுராஜா மற்றும் கடந்த வாரம் வெளிவந்த பிரியாணி இரண்டுமே ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் திரைப்படங்கள். தீபாவளிக்கு முன்பே இரண்டு படங்களுமே தயாறகிவிட்டன என்றும் திரைப்படங்களை போட்டு பார்த்துவிட்டு இரண்டில் அழகுராஜா நன்றாக இருக்கிறது என்று முடிவு செய்து தீபாவளிக்கு தலையின் ஆரம்பம் படத்தின் போட்டியாக வெளியிட்டனர் என்றும் கேள்விப்பட்டேன்.

அழகுராஜாவின் முடிவு அனைவரும் அறிந்ததே, இரண்டில் நன்றாக உள்ளது என்று தேர்வு செய்த படத்தின் நிலையே அப்படி என்றால் நிராகரிக்கப்பட்ட படம் எப்படி இருக்கும் என்ற பயம் இருந்தது.அதற்கு தகுந்தது போலவே Sify வலைப்பூவின் விமர்சனமும் இருந்தது.

இந்த நிலையில் நம்பிக்கையூட்டும் விதமாக வந்தது நண்பர் ராஜின் இந்த பதிவு. அது தான் பிரியாணி நன்றாக இருக்கிறது என்று முதலில் எனக்கு கூறியது.

இனி இரண்டு படங்களை பற்றிய எனது கருத்து.

என்றென்றும் புன்னகை :




கதை :


தனது தாய் சிறுவயதில் வேறு ஒருவருடன் சென்றதை அடுத்து பெண்கள் என்றாலே ஒரு வெறுப்புடன் வளரும் ஜீவா.அதனை மறக்க தந்தை நாசருடன் சென்னை வரும் ஜீவாவிற்கு பள்ளியில் வினய் மற்றும் சந்தானம் அறிமுகமாகிறார்கள்.

அதில் இருந்து மூவரும் ஒன்றாகவே வளருகிறார்கள்.தூங்குவது தண்ணி அடிப்பது சண்டை போடுவது எல்லாமே ஜீவாவின் வீட்டில் தான்.



இதற்கிடையில் ஒரு காரணத்திற்காக ஜீவா தனது தந்தையுடன் 15 வருடங்களாக பேசாமல் இருக்கிறார்.

மூவரின் ஒரே கொள்கை வாழ்வில் மூவருமே கல்யாணம் செய்துகொள்ளாமல் இருப்பது எனபது தான், சந்தானத்தின் வார்த்தையில் மூவரும் மொட்டை பசங்களாக இருக்க முடிவு செய்கிறார்கள்.

மூவரும் சேர்ந்து ஒரு விளமபர நிறுவனம் நடத்துகிறார்கள்.அப்பொழுது மற்றொரு நிறவனத்தின் மூலம் இவர்களுக்கு அறிமுகமாகிறார் திரிஷா.சும்மா சொல்ல கூடாது இப்படத்தில் அழகாகவே இருக்கிறார்.

அவர்களது விளம்பரத்தில் நடிக்க வரும் மாடல் ஆண்ட்ரியா ஜீவா மேல் மோகம் கொள்கிறார்.அவரை அடித்து அவமானப் படுத்துகிறார் ஜீவா.

இந்த இடத்தில் ஆன்டிரியா வினயை மயக்கி கல்யாணம் செய்து நண்பர்களை பிரிப்பார் என்று நினைத்த எனது நினைப்பில் டைரெக்டர் மண்ணை அள்ளிப்போட்டு விட்டார்.

அடுத்து திடீரென நண்பர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டு ஜீவாவை தனிமை படுத்திவிடுகின்றனர்.

இடைப்பட்ட நேரத்தில் திரிசாவுடனான நட்பு வளருகிறது.அது காதலாக மலரும் நேரத்தில் தனது ஈகோ வினால் காதலை இழந்துவிடுகிறார்.



இறுதியில் தனது ஈகோ வை விட்டு தனது தந்தை நண்பர்கள் மற்றும் காதலியுடன் சேர்ந்தாரா எனபது இறுதிக்கதை.

படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது :


தேவையில்லாத திருப்பங்கள் எதுவும் இல்லாமல் ஒரு தெளிந்த நீரோடை போல செல்கின்றது.

தேவையில்லாத சண்டைகள் இல்லாதது.

பாடல்கள் ஓகே ரகம் இடைவெளிக்கு பின்பு வந்த இரண்டு பாடல்கள் மிகவும் நன்றாக இருந்தது.

கேமரா மிகவும் அருமை, எடுக்கப்பட்ட லொகேசன்களும் கண்ணுக்கு குளிர்ச்சியாக நன்றாக இருக்க படத்திற்கே ஒரு ரிச் பீலிங் வந்துவிடுகிறது.

படத்தில் நடித்தவர்கள் அனைவரின் நடிப்பு. முக்கிய மற்றும் துணை நடிகர்கள் அனைவருமே நன்றாக நடித்துள்ளனர்.ஜீவா,வினய் மற்றும் சந்தானம் ஆகிய மூவரின் நட்புமே ரியலாக தெரிந்தது படத்தின் பெரிய பிளஸ்.

காமெடி நன்றாகவே இருந்தது.முதல் பாதி முழுவதுமே படத்தை தூக்கி நிறுத்துவது சந்தானத்தின் கவுன்டர்கள் தான்.

இனி பிடிக்காதது :


அதிகம் இல்லை இருந்தாலும் ஒரு சில மட்டும்.

ஒரு பீல் குட் பிலிம் ஆக  இருந்தாலும் சந்தானத்தின் காமெடியில் அதிக இரட்டை அர்த்த வசனங்கள் இருந்ததை தவிர்த்து இருக்கலாம்.

படத்தின் இறுதிக்காட்சிகள் அழத்தம் இல்லாதது போல தோன்றியது.
அதுவும் ஜீவா நண்பரின் முன்னால் திரிஷாவை தெரியாது என்பதற்கு போதிய காரணம் இல்லை தாராளமாக எனது நிறுவனத்தில் வேலை பார்கிறார்கள் என்று கூறி இருக்கலாம்.அதுவும் முத்தம் கொடுக்கும் அளவிற்கு போன பின்பு.





அடுத்து தனது அப்பா புற்றுநோயால் இறக்க போகிறார் என்று தெரிந்து வெளியே வந்து நின்றுகொண்டு வினயிடம் பேசும் இடத்தில நடிப்பே வரவில்லை.

மற்றும் இறுதிக்காட்சியில் இப்படி ஒரு மொக்கையாக I Love You சொல்லி  நான் எந்தப்படத்திலும் பார்த்ததில்லை ,அதிலும் கொடுமை அந்த மொக்கை லவ் யூ வை கேட்டு திரிஷா மயங்குவது.

இறுதியாக நம்ம அபினவ் வை வழக்கம் போல தியாக செம்மலாக பயன்படுத்தியது.அதுதான்பா ஹீரோயின் ஹீரோவை காதலிப்பது தெரிந்தும் அவரை காதலிப்பது ஹீரோ ஹீரோயினிர்க்கு இடையில் சண்டை வரும்பொழுது வந்து அவளை கல்யாணம் செய்து கொள்ள ஒப்புக்கொள்வது இறுதியில் மீண்டும் அவர்கள் சேரும் பொழுது விட்டுக்கொடுத்துவிடுவது.

இதனை தவிர்த்திருக்கலாம்.மொத்தத்தில் படம் கண்டிப்பாக பார்க்கலாம் நன்றாக இருக்கிறது.

பிரியாணி :




கதை :


நாம் பல திரைப்படங்களில் பார்த்த கரு தான்.இரவில் மப்பாகி காலையில் எழும் பொழுது இரவில் நடந்தது எதுவும் தெரியாமல் ஒரு பெரிய பிரச்னையில் மாட்டிக்கொள்வது.பின் அதில் இருந்து தப்பிப்பது. படத்தில் ஒரு காட்சியில் பிரேம்ஜி ஹாங்கோவர் படத்தை கிண்டல் செய்வார். இப்படத்தின் கருவும் அத்திரைப்படங்களில் இருந்து எடுத்ததே.

கார்த்திக்கும் பிரேம்ஜியும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள். பிரேம்ஜி ஆசைபடும் பெண்கள் அனைவரையும் தனக்கு கணக்கு செய்து கொள்ளும் அளவிற்கு இருவரும் மிக நண்பர்கள்.

கார்த்தியின் காதலி ஹன்ஷிகா திரைப்படங்களின் வழக்கமான காதலி, ஹீரோ செய்யும் தவறுகளை எல்லாம் மன்னித்து அவரையே காதல் செய்யும் காதலி.

இனி வரும் காலங்களிலாவது ஹீரோயின் ப்ளே கேர்ள் ஆகவும் அவளை மட்டுமே காதலிக்கும் ஹீரோவும் இருக்குமாறு ஒரு படம் வேண்டும்.அப்பொழுதுதான் நம்ம நாடு வல்லரசு ஆகும்.



நண்பர்கள் இருவரும் மகிந்திரா ட்ராக்டர்கள் ஷோரூமில் வேலை செய்கிறார்கள்.அதன் மேனேஜர் சுப்புவிற்கு தனது அக்காவை கல்யாணம் செய்து கொடுக்க கார்த்தி முடிவு செய்கிறார்.அக்கா கதாபாத்திரத்தில் நம்ம மதுமிதா (அதற்குள்ளாகவே அக்கா கதாபத்திரத்தில் நடிக்க வந்துவிட்டார் பாவம்).

அவர்களின் புது ஷோரூம் ஆம்பூரில் திறக்க முடிவுசெய்கிறார்கள். அதனை திறந்து வைக்க பிரபல தொழிலதிபர் நாசரை கூப்பிடுகிறார்கள். அவரது மருமகன் நம்ம ராம்கி. அவர்களது குடும்ப நண்பர் ஜெயப்ரகாஷ் Asst கமிஷ்னர்.

ராம்கிக்கு தனது மாமா நாசரின் இடத்திற்கு வர ஆசை. நமக்கும் பார்த்தவுடன் இவர் தான் வில்லனாக இருக்கும் என்று தோன்றுகிறது.

இதன் திறப்புவிழாவிற்கு வரும்பொழுது நண்பர்கள் இருவரும் தப்பி செல்லும் காதல் ஜோடியை தடுத்து பெண்ணை காப்பாற்றுகிறார்கள்.

திறப்புவிழாவில் கார்த்தியின் பேச்சு நாசருக்கு பிடித்துவிடுகிறது. அவருக்கு தனது இரண்டாவது பெண்ணை கொடுக்கும் அளவிற்கு நாசர் முடிவுசெய்கிறார். இது ராம்கிக்கு பிடிக்கவில்லை.

திறப்புவிழா முடிந்து நண்பர்கள் இருவரும் சென்னை திரும்பும்வழியில் பிரியாணி சாப்பிட ஒருகடையில் நிறுத்துகிறார்கள்.அங்கு வரும் Mandy Takharஐ பார்கிறார்கள்.




அவள் இவர்களை தனது ஹோட்டலிற்கு கூப்பிட்டு வந்து தண்ணி கொடுத்து ஒரு ஆட்டம் போட்டு காண்பிக்கிறார். அப்பொழுது அங்கு நாசர் வருகிறார். அத்துடன் நண்பர்கள் மப்பில் மயக்கம் அடைகிறார்கள்.



காலையில் எழுந்ததும் தான் நாசர் காணாமல் போக இவர்களை போலீஸ் தேடுவது தெரிகிறது. இதற்கிடையில் நாசரை ஒரு குற்றவிசாரணைக்கு கைது செய்ய வரும் சிபிஐ அதிகாரியாக சம்பத்.

இப்படியாக ஜெயப்ரகாஷ் போலீஸ் கூட்டம் ஒருப்பக்கமும் சம்பத் மூலம் அவரது நண்பர் பிரேம் போலீஸ் கூட்டம் ஒரு பக்கமும் அவர்களை துரத்துகிறது.

கடைசியில் எப்படி தப்பித்து உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்கிறார்கள் எனபது மீதிக்கதை.

எனக்கு பிடித்தது :


ஒரு சஸ்பென்ஸ் திரைப்படத்தின் வெற்றி அதன் இறுதிக்காட்சி திருப்புமுனையில் தான் இருக்கிறது, அந்த வகையில் இப்படம் வெகுவாக ஸ்கோர் செய்கிறது. அவ்வகையான காட்சி வைப்பதில் வெங்கட் திறமைசாலிதான்.

ஒரு ப்ளே பாய் கதையாக இருந்தாலும்  Mandy Takhar வரும் காட்சி தவிர வேறு காட்சிகளில் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை.

கண்டிப்பாக வெங்கட்டின் திரைக்கதை. எந்த ஒரு இடத்திலும் போர் அடிக்காமல் கொண்டு செல்கிறார்.

நகைச்சுவை காட்சிகள் பரவாயில்லை, ஓரளவு சிரிப்பை வரவழைக்கின்றன.

உமா ரியாஸின் சிறு கதாபாத்திரத்தில் நன்றாக இருக்கிறது. அவருக்கு பல சண்டை காட்சிகள், பாவம் நம்ம சாம் ஆண்டெர்சனுக்கு தான் சண்டை காட்சி இல்லை.

வெங்கட்டின் மற்றொரு பிளஸ் அவரது சென்னை 28 டீமை நன்றாக பயன்படுத்துவது. இதிலும் தலை பெயரை சரியான இடத்தில் அவர்களை வைத்து பயன்படுத்தி இருப்பார்.

இறுதியில் பெயர்போடும் சமயத்திலும் நம்மை உட்கார வைக்கும் வெங்கட்டின் கட் சாட்டுகள் அருமை.

பிடிக்காதது :


யுவனின் இசை பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.அதுவும் 100வது படம்.Better Luck Next  Time யுவன்.

இறுதிக்காட்சியில் வரும் நீண்ட சண்டை காட்சிகள், கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

அதிகமான லாஜிக் மீறல்கள்,24 மணிநேரமும் ரெகார்ட் செய்யும் CCTV யில் பிரேம் delete செய்த பதிவுகளை தேடாதது.பல நாள் பிரேதமாக இருந்த நாசரை இறுதியில் தான் இறந்ததாக போலீஸ் நம்புவது.

கார்த்தி கொஞ்சம் டான்ஸ் ஆட கற்றுக்கொள்ள வேண்டும்.

மொத்தத்தில் தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வந்த கார்த்திக்கு கிடைத்த சிறு வெற்றி.

கார்த்தி எல்லா படங்களிலும் ஒரே மாதிரி வருவது சற்றே போர் அடிக்கிறது.கொஞ்சம் எதாவது வித்தியாசமாக முயர்சி செய்யலாம்.

இரண்டு படங்களுமே வெவ்வேறு வகையை சேர்ந்தது, இரண்டுமே நன்றாக இருக்கிறது. நண்பர்கள் தையிரியமாக சென்று பார்க்கலாம்.

அவ்வளவு தான் நண்பர்களே. மீண்டும் சந்திப்போம்.

கிருஷ்ணா வ வெ.

Friday, October 18, 2013

காமிக்ஸ் புதையல் XX - Rani Comics Collection - Part 4


வணக்கம் நண்பர்களே,

நெடுநாட்களாக எனது டிராப்டில் இருந்த பதிவிற்கு உயிர் கொடுத்துள்ளேன்.

முன்பு  போல அதிக பதிவுகள் இட முடிவதில்லை.

காரணங்கள் பல...பணி இடத்தில் மாற்றம்,திருமண வாழ்வின் மாற்றம், மற்றும் காமிக்ஸ் பதிவுகள் இட சற்றே சோம்பேறித்தனம்..என பல.

நண்பர்கள் மற்றும் ஆசிரியரின் பதிவுகளுக்கு ஒரு பதில் இடுவதே கடினமாக உள்ளது.

ஆகையால் இந்த சிறிய பதிவு, காமிக்ஸ் புதையல் வரிசையில் 20 ஆவது பதிவு.

நெடுங்காலமாக ருபாய் இரண்டாக இருந்த ராணி காமிக்ஸ் சிறிது காலம் 2.50 ஆகவும் பிறகு 3 ரூபாயாக வும் மாறியது.

வழக்கம் போல மாயாவியை பெரிதும் சார்ந்திருந்தது. சில மறுபதிப்புகள் கூட வந்தன - ரத்தக்காட்டேரி.

இக்கால கட்டத்தின் முடிவில் பல இந்திய தயாரிப்புகளும் வந்தன.

கதைகள் அவ்வளவாக நினைவில் இல்லை.

இரும்புக்கை மனிதன் - முதன் முதலில் 2.50 ஆக வந்த புத்தகம்.

கொலைகாரன் பேட்டை : ஒரு மொட்டை வில்லனின் கூட்டம் இருக்கும் கோட்டைக்கு சென்று துவம்சம் செய்வார் மாயாவி.

தீயில் எறியும் பெண் : சற்றே வித்தியாசமான கதை. ஒரு பழமையான கூட்டம் மாயவிக்கே தெரியாமல் இருக்கும்.அதன் தலைவர் ஒரு அரசி என நினைக்கிறேன் 

மர்ம கடிதம் : பெங்காலியா முதல்வரிர் க்கு வரும் மிரட்டல் சம்பந்தப்பட்ட கதை என நினைவு.

மர்ம கும்பல் : ஒரு போதை மருந்து கடத்தல் கும்பலை மாயாவி அழிப்பார்.






ஒரு போலி குரங்கின் கொட்டத்தை அடக்குவார் மாயாவி இன் கொலைகார குரங்கு.

எனக்கு கரும்புலியின் கதைகள் பிடிக்கும்.

நான் சிறு வயதில் ஒரு ஆங்கில நாடகம் பார்த்த நினைவு ஒரு மனிதன் கரும்புலியாக மாறும் சக்தி படைத்தவனாக இருப்பான் .

எதில் பார்த்தேன் என்று தெரியவில்லை.


புலி பெண் மறுபதிப்பு , தில்லானின் நாயை தேடி.

தொர்கலின் வீரச்சிறுவன்.

இந்திய தயாரிப்பு ஜடாயுவின் கழுகு மனிதன் .


இந்திய தயாரிப்பு ரீட்டா வின் வெடி குண்டு கும்பல்.

முதல் முறையாக மாயாவியால் பழக்க முடியாத கருஞ்சிறுத்தை கதை.ரத்தம் குடிக்கும் சிறுத்தை.

இதுவரை கதை என்னவென்றே புரியாத ரகசிய சாவி.



ஒரு குழந்தை வாரிசை அதனை கொல்ல வருபவர்களுடம் இருந்து காப்பாற்றுவார் மாயாவி. - யார் அந்த சிறுவன்.

கோவிலை கொள்ளை அடிபவர்களை துவம்சம் செய்யும் கரும்புலி.




comanche யின் கில்லாடி வீரன்.



ரத்தக் காட்டேரி எனக்கு மிகவும் பிடித்த கதை கடைசி வரை ஒரு சஸ்பென்ஸ் இருக்கும்.

ஆனால் மாயாவியின் போலிக்கடிதம்,ரவுடி ராஜா ஆகிய கதைகள் மாயாவியின் சித்திரத்துக்காகவே பிடிக்காது.

மாயாவி என்றாலே கம்பீரத்துடன் தோன்றுவது தான் பிடிக்கும்.

தங்கள் நினைவில் தோன்றுவதையும் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே.

ராணி காமிக்ஸ் பற்றிய எனது முந்தய பதிவுகளை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.

அவ்வளவு தான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.

கிருஷ்ணா வ வெ.


Sunday, August 4, 2013

பூந்தளிர் கதைகள் : 3 - சார்லி மாமா & தபால்கார பரமு


வணக்கம் நண்பர்களே,

மீண்டும் ஒரு பூந்தளிர் கதைகளின் தொகுப்புகளுடன் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி.

நண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்.

இப்புத்தகமும் நமது வாண்டுமாமா அவர்கள் ஆசிரியராக இருந்த பொழுது வந்ததே.

இப்புத்தகம் எனக்கு மிகவும் விருப்பமான கதைகளை கொண்டு உள்ளது.

இப்புத்தகம் கிறிஸ்மஸ் இதழாக வந்ததால் இயேசு குறித்து அவரது உரை கீழே.



பூந்தளிர் கதாபாத்திரங்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் சார்லி மாமா.
இவர் indianised vesrion of சார்லி சாப்ளின்.ஐவரும் கோட் போட்டிருப்பார் ஆனால் கீழே பஞ்சகட்சம் வைத்து வேஷ்டி கட்டிருப்பார்.

இக்கதையில் காசுகொடுத்து  பறவைகளை வாங்கி திறந்து விடுகிறார். அவைகளில் ஒரு   கிளிக்கு மட்டும் பறக்க முடியவில்லை ஒரு முரடனிடம்  சிக்கி கொள்கிறது.அதனை அவனிடம் இருந்து எப்படி காப்பாற்றுகிறார் என்பதே கதை.





வாண்டுமாமாவின் படைப்புகள் அனைத்துமே சிறப்பானவை தான். அதில் எனக்கு மிகவும் பிடித்தது பாலு கதாபாத்திரமும், குஷிவாலி ஹரிஷும் தான்.

பாலுவை வைத்து பல கதைகள் அமைத்துள்ளார் பலே பாலு,பாலுவும் பாட்டில் பூதமும், மர்மமாளிகையில் பாலு மற்றும் பாலுவும் பறக்கும் டிராயரும் ஆகியவை.

எனக்கு வாண்டுமாமா மற்றும் செல்லம் ஆகியோரின் கூட்டணி  பிடிக்கும்
அதே போல செல்லத்தின் சித்திரங்களிலும் ஈர்ப்பு உண்டு.

இவர்களில் கூட்டணியில் வந்த பாலுவும் பறக்கும் டிராயரும் பூந்தளிரில் தொடர்கதையாக வந்தது.அதில் ஒரு அத்தியாயம் கீழே.

மனித பிரமிட் செய்வதற்கு பள்ளி விளையாட்டு ஆசிரியர் பயிற்சி அளித்துகொண்டிருக்க, பாலுவின் மனமோ அந்தகாலத்தில் பிரமிட் கட்டிய எகிப்தியர்களை பற்றி நினைக்க அவனது மந்திர டிராயர் அவனை அக்காலத்திற்கு தூக்கி செல்கிறது.

அங்கு அடிமைப்பட்டு பிரமிட் கட்ட கஷ்டப்படுபவர்களுடன் அவனும் மாட்டிக்கொள்கிறான். அங்கிருந்து சாகசம் செய்து அவர்களை காப்பாற்றுகிறான்.







பூந்தளிர் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு குணாதீசியம் உண்டு.
அவர்கள் அனைவரும் வருமாறு ஒரு கதை புனைவது பல நட்சத்திரங்களை கொண்டு எடுக்கும் MultiStarer மூவி போன்றது.

கதையில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் இருக்கவேண்டும் அதேபோல அவர்களது இயல்பும் வெளிப்பட வேண்டும்.

அவ்வாறு சில கதைகள் சிறப்பு இதழ்களில் வந்துள்ளன அவ்வாறு வந்த கதைகளில் ஒன்றை தான் கீழே பார்க்கிறீர்கள்.

வேறு கிரகத்தில் இருந்து நமது பூமியை பிடிக்க வருகிறது ஒரு கூட்டம் முதலில் இங்கு வாழ்பவர்களை பிடித்து ஆராய்ந்து விட்டு அதன் படி நடக்க முயற்சி செய்கின்றனர்.

அவர்களிடமிருந்து பூமியை எப்படி நமது கதாபாத்திரங்கள் காப்பாற்றினார்கள் என்பதை படித்து பாருங்கள்.

இக்கதையில் எனக்கு மிகவும் பிடித்த சிரிப்பை வரவழைக்கும் ஒரு காட்சி சுப்பாண்டியையும் முயல் கீச்சுவையும் பிடித்து மூளை தரிசனி மூலம் சோதனை செய்யும் பொழுது முயலுக்கு சுப்பண்டியை விட மூளை அதிகம் என்று கண்டுபிடிப்பார்கள்.














அடுத்தது மற்றும் ஒரு எதார்த்தமான அப்பாவி பரமு என்ற கிராமத்து கதாபாத்திரம். இக்கதாபாத்திரம் எனக்கு பிடித்ததற்கு மேலும் ஒரு காரணம்
அவர்கள வாழ்வதாக கூறப்படும் தாராபுரம் என்ற கிராமம் பழனிக்கு மிக அருகில் இருக்கும் ஊர் மேலும் அந்த கிராமத்தின் அருகே தான் எனது பெரியம்மா வீடு வேறு இருக்கும். ஆகையால் இக்கதை படிக்கும் பொழுது ஏதோ எங்கள் ஊரை பற்றி படிப்பதை போன்ற ஒரு உணர்வு வரும்.

எப்படி நமது பரமு தபால்காரர் ஆகி காண்டாமிருகத்திற்கு மணி கட்டிய வீரர் ஆகிறார் என்று படித்து பாருங்கள்.








பொறுமையாக படித்தற்கு நன்றி.உங்கள் கருத்துக்களை கீழே உள்ள பெட்டியில் தெரியப்படுத்துங்கள்.

இதற்கு முன் வந்த முதல் மற்றும் இரண்டாவது பூந்தளிர் கதைகளை படிக்க க்ளிக் செய்யவும்.

அவ்வளவுதான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம் .

கிருஷ்ணா வ வெ.