Friday, July 20, 2012

The DARK KNIGHT RISES - An Epic END




வணக்கம் நண்பர்களே,

இதோ காலை 11.20 மணிக்காட்சி படம் பார்த்து விட்டு வந்து விட்டேன்..

உண்மையிலேயே இது ஒரு epic end  தான்.The Film is spectacular in its own way.

பொதுவாகவே தொடர் பாகங்களாக வரும் திரைப்படங்கள் முந்தைய பாகங்கள் அளவுக்கு இருபதில்லை.ஆனால் இப்படம் இதன் முந்தய பாகமான தி டார்க் knight இற்கு எந்தவிதத்திலும் குறைந்ததில்லை.

நாம் avengers படம் பார்த்து ரசித்தோம் ,அது ஒரு வகையான entertainment .
ஆனால் இந்த திரைப்படம் நோலனுக்கே உரித்தான வகையில் நம்மை entertain செய்கிறது.

படம் ஆரம்பிக்கும் முன்பே மற்றும் ஒரு விருந்து Man  of  Steel திரைபடத்தின் trailer.Superheroes  படங்களை ஒரு fantasy movie களாகவே பார்த்த நமக்கு இது ஒரு வரவேற்க தக்க மாற்றம் என்பேன்.இதுவரை நாம் பார்க்காத சூப்பர் man நாம் பார்கபோகிரோம் எனபதற்கான ஒரு அருமையான முன்னோட்டமாக உள்ளது.

இனி Batman இற்கு வருவோம்.படத்தின் ஆரம்பமே அதிரடியாக உள்ளது.
கண்டிப்பாக பலரும் youtube இல் உள்ள முதல் preview இல்  பார்த்த விமானக்கடத்தல் தான் ஆரம்பம்.

 அட்டகாசமாக உள்ளது.சிறிய விமானத்தை ஒரு பெரிய விமானம் கொண்டு நிர்மூலமாக்கி sceintist கடத்துகிறார்கள்.

படத்தில் வரும் அனைத்து வசனங்களும் அருமையாக உள்ளன.

கதை அனைவரும் தெரிந்ததே கோதம் இப்பொழுது அமைதிப்பூங்காவாக உள்ளது.ஹார்வே டென்ட் இறந்து 8 வருடங்கள் ஆகின்றன.batman பழி ஏற்துக்கொண்டு மறைந்து போகிறார்.கமிசனர் gordan நகரில் உள்ள அனைத்து தீயவர்களையும் சிறையில் அடைத்து விட்டார்.

அப்பொழுது ஒரு புது எதிராளி முளைகிறான் அவன் தான் Bane.

அவனிடம் ஒரு nuclear bomb.நகரையே நிர்மூலமாகுகிறான்.அவனிடம் இருந்து எப்படி தனது உயிரையும் துச்சமாக மதித்து காப்பாற்றுகிறார் என்பதே கதை.

படத்தில் ஆக்சன்,ஹுமர்,சென்டிமென்ட் அனைத்துமே உள்ளது.

நான் அமைதியாக பார்க்க வேண்டும்  என்று தான் போனேன் ஆனால் batman introduction scenirkku வந்த விசில்களில் நானும் மூழ்கி பின் வந்த பல காட்சிகளுக்கு நானும் கூவு கூவென்று  கூவினேன்.தவிக்க முடியவில்லை.

Batman இன் அறிமுக காட்சி.


படத்தின் வில்லன் bane என தெரிந்த உடனே மிகவும் எதிர்பார்கபட்ட bane batman இன் முதுகை உடைக்கும் காட்சி படத்தில் உள்ளது.

Bane batman இன் இடுப்பை உடைக்கும் காட்சி.








ஆனால் படத்தில் வரும் bane பற்றிய கதை காமிக்ஸில் வருவது போலதான் இருக்கிறதா என தெரியவில்லை.நண்பர்களுக்கு தெரிந்தால் கூறுங்கள் படம் பார்த்துவிட்டு.

படத்தின் இறுதியில் வரும் திருப்பம் நாம் எதிர்பார்காததாக உள்ளது.
படத்தில் ராபின் பற்றிய துணுக்குகளும் உண்டு.நோலன் இதனை இறுதிப்படம் என்று கூறினாலும் கிளைமாக்ஸ் அவருக்கு வேண்டும் என்றால் தொடர்வது போலவே அமைந்தஊள்ளது.

நாமும் அவர் தொடர வேண்டும் என்றே ஆசைபடுவோம்.

இறுதி சண்டை காட்சி.


படத்தில் அனைவரும் நன்றாகவே நடித்துள்ளனர்.
படத்தின் சண்டை காட்சிகளும் அருமையாக உள்ளன.
இறுதில் catwon மற்றும் batman சேர்ந்து செய்யும் chasing காட்சி நன்றாக உள்ளது.

மொத்தத்தில் அனைவரும் கண்டிப்பாக பார்த்து ரசிக்க வேண்டிய படம்.
படத்தின் சுவாரஸ்யம் பார்க்கும் உங்களுக்கு குறையக்கூடாது என்பதற்காக நான் பல காட்சிகளை விவரிக்க வில்லை.நீங்களாகவே பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்த நேரத்தில் கார்த்திக்கின் பதிவை பார்த்தேன் மிகவும் வருத்தமாக இருந்தது.

அடுத்த பதிவாக என்னிடம் உள்ள மாடஸ்டி காமிக்ஸ் தொகுப்பை வெளியிட உள்ளேன்.

அவ்வளவுதான் நண்பர்களே.
மீண்டும் சந்திப்போம்,

கிருஷ்ணா வே வெ .

19 comments:

  1. கொஞ்சம் நீளம் என்றாலும் படம் நன்றாக இருந்தது நண்பரே!

    ReplyDelete
  2. உண்மை நண்பரே படம் போக போக அருமையாக இருந்தது.

    ReplyDelete
  3. நீங்களே சொன்னதுக்கு அப்புறமும் பாக்காம இருப்போமா ?
    கண்டிப்பாக பாத்துடுவோம்
    நாங்க பாட்மேன் ரசிகராச்சே :))
    .

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக நண்பரே,இது சம்பந்தமான காமிக்ஸ் படிக்காமல் பார்த்தால் நிச்சயம் நன்றாக இருக்கும்.

      Delete
  4. // அடுத்த பதிவாக என்னிடம் உள்ள மாடஸ்டி காமிக்ஸ் தொகுப்பை வெளியிட உள்ளேன். //

    ஆவலுடன் காத்திருக்கிறோம் நண்பரே :))
    .

    ReplyDelete
    Replies
    1. மாடஸ்டி சம்பந்தமான புகைப்படங்கள் இருப்பதாய் நான் கவனிக்க வில்லை நண்பரே.

      Delete
  5. முதல் நாளே பார்த்துவிட்டீர்கள். பாராட்டுக்கள்.

    பல நண்பர்களுடைய வலைத்தளங்களில் டார்க் க்னைட் ரைசஸ் படத்தின் விமர்சனக்களைப் பார்த்தேன். அனைத்தும் மிக்ஸட் ரெஸ்பான்ஸ்.

    இன்னும் சொல்ல வேண்டும் என்றால் இங்கங்கெனாதபடி, தீபாவளி நாளின், இரவுபோழுதின் வானத்தில் நடக்கும் வானவேடிக்கைகள் போல, வலையுலகமே டார்க் க்னைட் ரைஸஸ் பற்றிய செய்திகாளால் நிறைந்திருக்கிறது. இது எதைக் காட்டுகிறது என்றால், இதற்கு முந்தய படமான டார்க் க்னைட் படத்தின் வெற்றி, உலகம் முழுக்க உள்ள நோலன் மற்றும் பேட்மேன் ரசிகர்களிடையே ஒரு மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி விட்டதுதான் காரணம்.

    எதிர்பார்ப்பு எப்போது வருகிறதோ அப்போது ஏமாற்றம் நிச்சயம்.

    கிரிஸ்டபர் நோலனாலேயே டர்க் க்னைட் படத்தைப்போல மீண்டும் ஒரு படத்தை எடுப்பது மிகவும் கஷ்டம் என்பதுதான் முற்றிலும் உண்மை. நான் இப்படிச் சொல்வதால், நோலனின் திறமையை குறைகூறுவதாகக் கொள்ளக் கூடாது. நோலன் இன்னும் பல சிறந்த படங்களைக் கொடுப்பார். ஏன் பேட்மேனின் இன்னுமொரு படம் கூட அவர் டைரக்ட் செய்யலாம். பேட்மேனின் காமிக்ஸில் கதைக்கும் பஞ்சம் இல்லை, வில்லன்களுக்கும் பஞ்சம் இல்லை. இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

    டார்க் க்னைட் வரிசை கதைகளில் சூப்பர் ஹீரோ பேட்மெனை, சராசரி மனிதனாக மாற்றி உலவச் செய்ததற்குக் காரணம், ஓவியர் ப்ராங் மில்லர் செய்த மாற்றங்களே. சிறு வயதில் மில்லர் ஒரு குழந்தையாக ரசித்த பேட்மேன் கதைகளை, அதே மில்லர் ஒரு இளைஞனாக மீண்டும் பார்த்த போது எந்த விஷயங்கள் எல்லாம், எந்த திறன்கள் எல்லாம் எக்ஸாகரேட் செய்யப்பட்டிருந்ததோ அவைகளை எல்லாம் ட்ரிம் செய்த பின் மிதம் இருந்த பேட்மேனே டார்க் க்னைட்.

    சூப்பர் ஹீரோவை உருவாக்குபவனாக இல்லாமல், ஒரு ரசிகனாக மில்லர் செய்த கரக்‌ஷனே டர்க் க்னைட் காமிக்ஸின் வெற்றிக்கு காரணம் என்பது எனது உள்ளத்தின் கருத்து.

    மேலும் ப்ரூஸ் வெய்ன், பேட்மேன் என்ற உடை அணிந்துவிட்டால், அவர் உடலின் வெளியே தெரியும் ஒரே பாகம் அவரது தாடை மட்டும் தான். அதைத்தவிர முழுக்க கவசமே மூடியிருக்கும். ஆதலால் நடிப்பை வெளிப்படுத்தும் வாய்ப்பு ப்ரூஸ் வெயினுக்கே இருக்கிறதே அன்றி பேட்மேனுக்கு இல்லை. ப்ரூஸ் வெய்ன் பேட்மேன் உடைக்குள் நுழைந்துவிட்டல், அங்கு நடிப்புக்கே இடமில்லை. ஒன்லி ஆக்‌ஷன் தான்.

    ஆனால் முகம் முழுக்க விபூதியும், வாயில் சிகப்பு திரிசூரணமும் (லிப்ஸ்டிக்/சிகப்பு வண்ணம்) பூசியிருந்தாலும் நடிக்கும் வாய்ப்பு ஜோக்கராக நடித்த ஹீத் லெட்ஜருக்கே.

    Two Face-ஐ விட (பாதி முகத்தில் பயமுறுத்தவே முடியும்) ஜோக்கருக்கே நடிக்க அதிக வாய்ப்பு. இதுவரை எந்த நடிகரும் பேட்மேன் படங்களில் ஜோக்கராக நடித்து வெளிப்படுத்தாத நடிப்பை ஹீத் லெட்ஜர் வெளிப்படுத்தினார்.

    என்னைப் பொறுத்தவரியில் டார்க் க்னைட் படம் பேட்மேன் படம் என்பதைவிட, ஜோக்கரின் படம் என்பதே சரி.

    அதனால் தான் இந்தப் படத்தில் நடிக்கும் வில்லன் எவ்வளவுதான் பாடுபட்டு நடித்தாலும் அந்த நடிப்பு, ஹீத் லெட்ஜருடைய நடிப்புக்கு ஈடாகாது என்று தெரிந்துதான், நோலன் இந்த முறை பேட்மேனுடன் மோதும் வில்லனாக, முகத்தின் பெரும்பாதி மறைந்திருக்கும் கேரக்டரரான ஃபேனை தேர்ந்த்தெடுத்திருக்கிறார் என்று நினைக்கின்றேன்.

    இந்தப் படத்தைப் பார்க்க இன்னும் 15 நாட்களுக்கு மேலாவது ஆகும் என்று நினைக்கின்றேன். தவறாது பார்த்துவிடுகிறேன்.

    அன்புடன்,
    பாலாஜி சுந்தர்.
    www.picturesanimated.blogspot.com

    ReplyDelete
  6. தங்களது விளக்கங்களுக்கு நன்றி நண்பரே.

    Mixed Reactions க்கு நான் காரணம் என்று நினைப்பது தி Dark knight ஏற்படுத்திய தாக்கமே.
    தி Dark knight பெரிய ஹிட் ஆனதுமே,ரசிகர்கள் அனைவரும் பிரான்க் மில்ளீர் இன் அனைத்து காமிக்ஸ் படித்து விட்டார்கள்.

    Bane தான் வில்லன் என தெரிந்த உடனே அவனை பற்றியும் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்து விட்டனர்.
    பின்னர் சென்று படம் பார்த்த போது அவர்களுக்கு அனைத்தையுமே முன்பே யூகித்து போல இருந்திரிகிறது.

    நோலன் என்ன புது கதையா எடுக்க முடியும் இருக்கின்ற கதையை அவர் எப்படி அளித்திருகிறார் என்பதே முக்கியம்.
    உதாரணமாக நமது கருதேளாரின் விமர்சனத்தை எடுத்துக்கொள்ளலாம்.அவர் படம் வெளிவருவதற்கு முன்பே அனைத்தையும் படித்து பதிவாக இட்டு விட்டார்.பின்பு அவர் சென்று படம் பார்த்த போது அவருக்கு ஏமாற்றமாக இருந்துள்ளது.இதற்க்கு யாரை குற்றம் சொல்வது.

    ReplyDelete
  7. அந்த நகரத்தின் அனைத்து பாதைகளையும் ஒரே நேரத்தில் வெடி வைத்து தகர்க்கும் காட்சி மிக நன்றாக இருந்தது. பூனை பெண் அட்டகாசமான அழகி ஹி ஹி

    ReplyDelete
  8. மாடஸ்டிக்கு காத்திருக்கிறோம் நண்பா விரைவில் பதிவிடுங்க

    ReplyDelete
  9. நண்பரே..முதல் முறையாக உங்கள் வலைப்பூ வருகிறேன்....
    உங்கள் TDKR பார்வை தான் எனதும்.....நோலன் சிறந்த படத்தை குடுத்து உள்ளார்...இனி மேல் அவர் கண்டிப்பாய் பேட்மேன் சீரீஸ் எடுக்க மாட்டார்...
    சூப்பர் மேன் படைத்திருக்கு கூட அவர் கதை மட்டுமே எழுதி உள்ளார்...டைரக்ட் செய்ய வில்லை...
    அப்புறம் நண்பரே...உங்க அறிமுகம் கிடைச்சது ரொம்ப சந்தோஷம்...நானும் தீவிர காமிக்ஸ் ரசிகன்.....முத்து காமிக்ஸ் தேடி தேடி படித்து கொண்டு இருந்தேன்...
    முகமுடி வீரர் மாயாவி தான் என்னுடைய ஆஸ்தான காமிக்ஸ் ஹீரோ...

    ReplyDelete
    Replies
    1. உங்களுடைய வருகைக்கும் பின்னுடதிர்க்கும் நன்றி நண்பரே.
      நம்ம கார்த்திக் வலைபூ லதான் உங்க வலைபூ பற்றி பார்த்தேன்.நன்றாக இருந்தது.
      உங்களுடைய அறிமுகம் கிடைத்ததில் எனக்கும் மகிழ்ச்சி நண்பரே.
      மற்றும் ஒரு காமிக்ஸ் நண்பர் கிடைத்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி.
      நம்ம லயன் வலை பூ பக்கம் உங்கள காணோமே.

      Delete
    2. நன்றி நண்பரே...எனக்கு இணைய காமிக்ஸ் உலகம் பற்றி அவ்வளவு அறிமுகம் கிடையாது...... :(
      லையன் காமிக்ஸ் லிங்க் இருந்தால் தயவு செய்து குடுங்கள்...

      Delete
  10. இன்று மதியம் சன் டிவி யில் வவ்வாள் படம் பார்த்த பொழுது ஏதோ மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் எடுத்த படம்போல இருந்தது. இதுவும் அப்படித்தானா?

    ReplyDelete
    Replies
    1. வவ்வாள் நாலே இரவு வருவது தான் நண்பரே.
      அப்படி தான் இருக்கும்.

      ஒரு சில காட்சிகள் அப்படி இருக்கும் நண்பரே.
      மற்றபடி நன்றாக வே இருக்கும்.

      Delete
  11. //மொத்தத்தில் அனைவரும் கண்டிப்பாக பார்த்து ரசிக்க வேண்டிய படம்.//பரிந்துரைக்கு நன்றி நண்பா. விமர்சனம் நன்றாக இருக்கிறது.

    சீக்கிரமே பார்க்க முயற்ச்சிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக நண்பரே.தியேட்டரில் பார்க்கவும்.
      அப்பொழுதான் அதன் பிரமாண்டத்தை உணர முடியும்.

      Delete