Tuesday, July 17, 2012

நான் ஈ - ஒரு ஜனரஞ்சகமான திரைப்படம்.

வணக்கம் நண்பர்களே,

இப்பதிவில் நான் பார்த்த நான் ஈ திரைப்படம் பற்றிய எனது கருத்தை கூற உள்ளேன்.
படம் வந்து ஹிட்டும் ஆயிருச்சு நிறைய விமர்சனங்களும் வந்தாச்சு.
இருந்தாலும் நல்ல விசயத்தை யார் வேண்டும என்றாலும் எத்தனை  முறை வேண்டும என்றாலும் கூறலாம் என்பதன் அடிபடையில் இந்த பதிவு.

நண்பர் யுவகிருஷ்ணா இப்படத்தின் டைரக்டர் ராஜமௌலி பற்றி விரிவாக கூறியுள்ளார்.
படிக்காத நண்பர்கள் கீழே உள்ள சுட்டியில் படித்துக்கொள்ளவும்.


மற்றும் நண்பர் கார்த்திக் வேறு படம் மிகவும் நன்றாக உள்ளது என்று எனது ஆர்வத்தை கூட்டினார்.
ஒரு வழியாக கடந்த வெள்ளி அன்று இரவு இந்த திரைப்படத்தை பார்த்தேன்.

படம் அருமையாக இருந்தது.ஏன் இதனை ஒரு ஜனரஞ்சகமான திரைப்படம் என்று கூறுகிறேன் என்றால் நான் படம் பார்த்த போது என்னுடன் அனைத்து வயதை சார்ந்தவர்களும் பார்த்தார்கள் அனைவரும் ரசித்து சிரித்தார்கள்.
எத்தனை படங்கள் இன்றைய கால கட்டத்தில் இப்படி வருகின்றது?
அந்த முறையில் ராஜமௌலிக்கு ஒரு salute.

ஒரு படத்தின் trailer மிகவும் நன்றாக இருக்கும் ஆனால் படம் அந்த அளவிற்கு இருக்காது.
ஆனால் இப்படத்தின் trailer எந்த அளவிர்க்கு மக்களை கவர்ந்ததோ அதே அளவிற்கு படமும் இருந்தது.

கதை நாம் அனைவரும் trailer இல் இருந்து அறிந்ததே.

இரு காதலர்கள்.
காதலியை அடையநினைக்கும் வில்லன் 
அதற்காக இறக்கும் ஹீரோ,
மீண்டும் ஒரு ஈ ஆக வந்து பழி வாங்குவதே கதை.

அனால் படத்தின் screenplay  இல் மனுஷன் புகுந்து விளையாடி இருக்கிறார்,
படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் அருமையாக உள்ளன.

படத்தின் ஹீரோ நானி எனக்கு பிடித்தமான ஒருவர்.அவரது அனைத்து படங்களையும் நான் பார்த்துள்ளேன்.
இப்படத்தில் சிறுது நேரமே வந்தாலும் நன்றாக உள்ளார்.
காதல் காட்சிகள் நன்றாக இருந்தது.

படத்தின் ஹீரோயின் சமந்தா சற்றே மெலிந்து காணபடுகிறார்.ஆனாலும் சற்றே பூசினாற்போல விண்ணை தாண்டி வருவாயா வில் வந்தவரையே எனக்கு பிடித்திருகிறது.அவரும் நன்றாகவே நடித்துள்ளார்.

Screenirkku பின்னால் score செய்தவர் ராஜமௌலி என்றல் screenil score செய்தவர் நிச்சயம் வில்லனாக வரும் சுதீப்.அருமையான தேர்ந்த நடிப்பு.அவர் இல்லாத ஒரு ஈயிடம் மாட்டிக்கொண்டது போல அவர் நடிக்கும் காட்சிகள் நன்றாக ரசிக்கும் படி உள்ளன,
அந்த காட்சிகளை என்னுடன் பார்த்துக்கொண்டு இருந்த குழந்தைகள் அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர்.

படத்தின் மிகப்பெரிய பலம் என நான் நினைப்பது கூடிய மட்டும் லாஜிக் இருபதாக காட்டியது தான்.
ஒரு ஈயினால் என்ன செய்யமுடியுமோ அந்த அளவே செய்து இருபது.
காதிற்கு அருகில் வந்து சத்தம செய்வது.ஒரு ஈயின் பார்வையில் நாம் பார்க்கும் பொது எப்படி தெரியும் என காட்டியது.
நாம் சாதாரணமாக ஒரு ஈயை பார்க்கும் போது அது எப்படி அடிகடி தன முன்னங்கால்களை தூக்கி உரசிக்கொண்டே இருக்குமோ அது போலவே காட்டியது என பல கூறலாம்.
கதாபத்திரங்களின் அமைப்பும் கதைக்கு தேவையானபடி புத்திசாலித்தனமாக அமைத்துள்ளார் டைரக்டர்.

படத்தின் பாடல்கள் சுமாராக இருந்தாலும் பின்னணி இசை நன்றாக  உள்ளது.

படத்தின் இறுதில் வந்தாலும் சந்தானம் தான் தற்போதைய வின்னிங் காமடியன் என நிரூபிக்கிறார்.
மொத்தத்தில் அனைவராலும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
இது வரை பார்க்காத நண்பர்கள் தயவுதெய்து குடும்பம் குட்டியுடன்(குழந்தைகளுடன்) சென்று பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அவ்வளவுதான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வெ.

10 comments:

 1. நண்பரே, லேட் ஆ விமர்சனம் பண்ணாலும் லேட்டஸ்ட் ஆ வந்துயிருக்கீங்க. என்ன ஒரு குறை என்றால் உங்கள் பதிவோட ஈ படத்தோட சில ஸ்டில்ஸ் சேர்த்து இருக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. அடுத்த பதிவில் அக்குறையை தீர்த்து விடலாம் நண்பரே.

   Delete
 2. //நாம் சாதாரணமாக ஒரு ஈயை பார்க்கும் போது அது எப்படி அடிகடி தன முன்னங்கால்களை தூக்கி உரசிக்கொண்டே இருக்குமோ அது போலவே காட்டியது//
  true! :)

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் கிருஷ்ணா, காமிக்ஸை தாண்டிய புது முயற்சிக்கு.

  நண்பர் ஒருவரிடம் ஏதோ ஒரு படம் பார்த்தீர்களா, எப்படி இருக்கின்றது என்று கேட்டால், அவர் சொன்னார், பார்க்கலாம் ஆனா தியேட்டரின் டிக்கட் கவுண்டர் கிட்ட போகும் போது குனிந்து போங்க என்றார், ஏன் என்று கேட்டதற்கு, அவர் சொன்ன பதில், ஒரு பெரிய குச்சியை வைத்து ஈ ஓட்டிகிட்டு இருக்காங்க, குனியாம போனா தலையில அடிபடும் என்று சொல்லி சிரித்தார்.

  வழக்கமா படம் ஓடலைன்னா நாம சொல்வது “ஈ ஓட்டிட்டிகிட்டு இருக்காங்க தியேட்டரிலே” அப்படி என்று சொல்வோம். ஆனா ராஜ மௌலி, ஈயை வைத்தே படத்தை எடுத்து, ஈ ஓட்டாம, தியேட்டர நிறைச்சுட்டார். இனிமே தியேட்டர்களில் ஈ படத்தை ப்ரேம் போட்டு மாட்டப் போறாங்க.
  அன்புடன்,
  பாலாஜி சுந்தர்.

  ReplyDelete
 4. வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 5. //நண்பர்கள் தயவுதெய்து குடும்பம் குட்டியுடன்(குழந்தைகளுடன்) சென்று பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.//

  அப்படித்தான் செய்தேன் நண்பரே !
  நன்றாகவுள்ளது- ஈ மட்டுமல்ல பதிவும்தான்

  ReplyDelete
 6. பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே பார்க்க முயற்சிக்கிறோம் ( தியேட்டரில் அல்ல ) ;-)
  .
  நம்ம ஸ்டாலின் அண்ணன் போல நாம போக முடியுமா ஹ்ம்ம்ம் :))
  .

  ReplyDelete
  Replies
  1. பின்னுடதிர்க்கு நன்றி நண்பரே

   Delete
  2. Cibiசிபி: //நம்ம ஸ்டாலின் அண்ணன் போல நாம போக முடியுமா ஹ்ம்ம்ம் //
   உங்களுக்கு இன்னும் கல்யாணமே அகலேன்னு இமாலய பொய்ய மட்டும் சொல்லிடாதீங்க ......

   Delete