முன் அட்டை |
பின் அட்டை |
விரைவில் வருகிறது |
விரைவில் வருகிறது |
இது எனது 50வது பதிவு.மீண்டும் ஒரு காமிக்ஸ் பதிவு.
ஏப்ரல் மாதம் ஆரம்பித்த எனது வலைபூ பயணம் இதோ 50வது பதிவை வந்து அடைந்திருகிறது.
இதுவரை 44 நண்பர்கள் எனது வலைப்பூவை தொடருகிறார்கள் எனது வலைப்பூவின் பார்வை 12000 நெருங்கி நிற்கிறது. ஏதோ ஒரு ஆர்வத்தில் ஆரம்பித்து ஓரளவு வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது

இந்த நேரத்தில் என்னை ஆதரிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகளை சொல்லிக் கொள்கிறேன்.மற்றும் நான் வலைபூ ஆரம்பிக்க ஒரு தூண்டுகோலாக இருந்த விஜயன் சார், கிங் விஸ்வா, முத்து விசிறி, மற்றும் நம்ம சௌந்தர் ஆகியோருக்கு என் நன்றிகள்.
நான் எனது பதிவிற்கு எடுத்துகொண்டிருக்கும் கதை டெக்ஸ் வில்லரின் டிராகன் நகரம் இதற்கு பல காரணங்கள் இருகின்றன. இக்கதை லயனின் 50வது இதழாக வந்தது. மற்றும் எனது புனைப்பெயரான இரவுக்கழுகின் சாகசம். அது தவிர நமது விஜயன் சாரே எந்த ஒரு ஸ்பெசல் இதழுக்கும் டெக்ஸ் கதைகளையே தேர்வு செய்கிறார். பின்பு நான் மட்டும் ஏன் மாறுபடவேண்டும்.
கதையில் "டெக்ஸ் சை" என வரும் இடங்களில் நான் "வில்லரை" என பயன்படுதியுள்ளேன் ஆனால் கதையின் ஒரு கட்டத்திற்கு பிறகு "கில்லரை" என கூறி உள்ளேன் மற்ற இடங்களில் டெக்ஸ் என்றே கூறி உள்ளேன்.இதனை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
அங்கு நடக்கும் நிகழ்வுகளை எதிர் கட்டிடத்தில் இருந்து ஒரு கயவன் தொலைநோக்கி மூலம் காண்கிறான். வழியில் வில்லரை மடக்க அவரை பின் தொடருகிறான்.
இதற்கிடையில் டெக்ஸின் கடிதம் கிடைக்கப்பெற்ற கார்சன் அதனை மற்ற இருவருடன் பகிர்ந்து கொள்கிறார். அதில் தான் கிளம்பியபின் 15 நிமிட இடைவெளிவிட்டு தன்னை தொடர டெக்ஸ் கூறியிருந்தார். அதன் படி கிளம்பிய கார்சன், கிட் மற்றும் டைகர் வில்லரை பின் தொடரும் கயவனை பார்கின்றனர். டெக்ஸின் மதிநுட்பத்தை மூவரும் பாராடுகின்றனர்.
மாலையானதும் வழியில் டெக்ஸ் ஒரு இடத்தில தங்கினார். அதனை கண்ட அந்த கயவன் இரவானதும் வில்லரை வீழ்த்த காத்திருக்கிறான். அதனை கண்ட நண்பர்கள் குழுவும் அவனது அடுத்த செயலுக்காக காத்திருந்தனர்
இரவானது அந்த கயவன் வில்லரை வீழ்த்த தனது துப்பாக்கியை எடுத்தான் ஆனால் அதற்குள் நமது குழு அவனை மடக்கியது, அனாலும் கையில் இருந்த துப்பாக்கியை தூக்கி சுடப் பார்தான் வேறு வழி இல்லாமல் அவனை சுட்டு வீழ்த்தினர். சிறிது நேரத்தில் அங்கு வந்து குழுவுடன் சேர்ந்தார் டெக்ஸ்.
இறந்த கயவனின் உடுப்புகளை சோதித்தார். அதில் ஒரு கடிதம் இருந்தது, அது ஜிம் என்பவன் ப்ரெட் என்பவனுக்கு எழுதிருந்தது. அதன் மூலம் இறந்தவன் தான் ப்ரெட் என அறிந்துகொண்டனர். அக்கடிதத்தின் சாரம்சம் இது தான் "ரீகன் தெருவில் இருக்கும் மதுபானக்கடையை மானுவல் வாங்க தீர்மானித்திருகிறார்" என்பதே.
இருதினங்களுக்கு பின் நண்பர்கள் டெக்ஸாஸ் நகரை அடைகின்றனர். டைகர் மட்டும் நகருக்கு வெளியில் தங்கி டெக்ஸின் மறு உத்தரவுக்காக காத்திருந்தான். நண்பர்கள் அந்த லாங்க்ஹார்ன் மதுபானக்கடையை கண்டுபிடித்து நுழைந்தனர். அங்கு கடையை விலை பேசிக்கொண்டு இருந்தவனை அடித்து துரத்துகிறார் டெக்ஸ்.
ஆட்டத்தின் முதற்கட்டம்:
சண்டை முடிந்ததும் வெற்றியை கொண்டாட அங்கிருக்கும் அனைவருக்கும் இலவசமாக மது வழங்குகிறார் டெக்ஸ். இதற்கிடையில் அங்கு இருந்து ஓடிய இருவரையும் கண்ட ஷெரிப் கடைக்குள் வருகிறார். அங்கிருக்கும் வில்லரை துப்பாக்கியை காட்டி மிரட்டுகிறார்.
டெக்ஸ் கில்லர்:
சூடான விவாதத்தின் பின் மற்றும் பார்மேன் டாம் விளக்கி சொன்னபின் சமாதானம் ஆகிறார். தனது பெயர் பர்குசன் மற்றும் தனது டெபுடி பெயர் பிப் டர்பின் என அறிமுகம் செய்துகொள்கிறார். டெக்ஸ் தன்னை டெக்ஸ் கில்லர் என்றும் கார்சனை பார்சன் என்றும் மற்றும் கிட்டையும் அறிமுகம் செய்கிறார்.
(இந்த இடத்தில் எனக்கு ஒரு சந்தேகம் டெக்ஸ் வேண்டும் என்றே தனது பெயரை மாற்றி சொல்கிறாரா அல்லது இக்கதையில் அவர் பெயரே அதுதானா? நண்பர்கள் தெரிந்தால் சொல்லலாம்.)
டெக்ஸ் ஜிம்மை ஏன் கைது செய்யவில்லை என்பதற்கு அவன் ராட்சத பர்சக்கரத்தின் ஒரு பல் எனவும், அந்த சக்கரம் கில்லரை நோக்கி சுழலாம் எனவும் எச்சரிக்கை செய்கிறார், மேலும் ஒரு சுடுகாட்டிற்கு அழைத்து சென்று இறந்த ஷெரிப்கள் மற்றும் ரேஞ்சர்கள் சமாதியை காட்டுகிறார். பின் அங்கிருந்து கிளம்புகிறார்.
இதற்கிடையில் ஜிம் பாரடைஸில் மானுவலை சந்தித்து விவரம் கூறுகிறான்.
அவனை திட்டும் மானுவல் அவன் தான் கில்லரை கொல்லவேண்டும் இல்லையேல் மீண்டும் அங்கு வரவேண்டாம் என கூறிவிடுகிறான். இதற்கிடையில் டைகரை சந்திக்கும் நண்பர்கள் அவரை நகருக்கு வெளியில் தங்கிக்கொள்ளவும் விழிப்போடு இருக்கவும் கூறுகிறார். ஏதாவது தகவல் இருந்தால் லாங்க்ஹார்னில் டாமிடம் கேட்டுகொள்ளசொல்லுகிறார். அன்றிரவு பட்டாசு வேடிக்கை நடக்கலாம் என எச்சரிக்கை செய்கிறார்.
பட்டாசு இரவு:
அன்றிரவு ப்ளாட்டர் உணவு விடுதியில் நண்பர்கள் இருந்தார்கள். அந்த செய்தியை நெட்டிடம் இருந்து அறிந்த ஜிம் கில்லரை கொல்ல தனித்து வருகிறான். கடையை அடைந்த ஜிம் ஒரு ஜன்னலோரத்தில் இருந்து கில்லரை குறி வைத்தான். ஆனால் அதனை மறைந்து இருந்து பார்த்த டைகர் அவனை நோக்கி சுட அது தவறி ஜன்னல் கண்ணாடியை உடைத்துவிடுகிறது. அதனால் சூதாரித்துக்கொண்ட நண்பர்கள் ஜன்னலை நோக்கி சரமாரியாக சுடுகின்றனர்.
அந்த குண்டுகள் பட்டு ஜிம் இறந்துவிடுகிறான். டைகர் அங்கிருந்து மறைந்து விடுகிறார்.
அப்பொழுது அங்கு டெபுடி பிப் வருகிறார். அவரிடம் தங்கள் தற்காப்புக்காகதான் சுட்டோம் என விளக்கம் கொடுகிறார்கள். அங்கு நடந்ததை கண்ட ஒரு கயவன் பாரடைஸ் சென்று நெட்டிடம் ஜிம் இறந்ததை கூறுகிறான். உடனே நெட் அந்த செய்தியை மானுவலிடம் சென்று கூறிகிறான் அதனை கேட்ட மானுவல் ஒரு கடிதம் எழுதி நெட்டிடம் கொடுத்து டெக்ஸிடம் சென்று கொடுக்க சொல்லுகிறான். அதனை எடுத்து சென்ற நெட் ப்ளாட்டர் உணவு விடுதியில் இருந்த கில்லரை கண்டு கொடுக்கிறான்.
கடிதத்தில் மானுவல் தன்னை பாரடைஸ் வரச்சொல்லி அழைப்பு விடுத்துள்ளதை நண்பர்களிடம் கூறுகிறார் டெக்ஸ். அந்த கடிதத்திற்கு அவருடைய பதிலை கேட்ட நெட்டிடம் தான் ஏற்றுக்கொண்டதாக கூறுகிறார். இடம் கேட்ட டெக்ஸிடம் பாரடைஸ் வரச்சொல்கிறான். தான் 15 நிமிடத்தில் வருவதாக சொல்லி அவனை அனுப்புகிறார்.
பின் அனைவரும் கிளம்பி பாரடைஸ் வந்தடைகிறார்கள். அங்கு ஒரு மடையன் கில்லரை சீண்ட அவனை அடித்து துவைக்கிறார். அப்பொழுது அங்கு வரும் நெட் அவர்தான் ஜிம்மை பரலோகம் அனுப்பிவைத்தவர் எனகூறி கில்லரை மானுவலிடம் அழைத்து செல்கிறான். மேலே செல்லும் டெக்ஸ் மானுவலிடம் தன்னை டெக்ஸ் கில்லர் என அறிமுகம் செய்துகொள்கிறார்.
டிராகனின் முத்திரை:
இருவருக்கும் இடையில் மிகவும் சூடான விவாதம் நடக்கிறது. லாங்க்ஹார்னை தன்னிடம் விற்று விட சொல்கிறான்.
மற்றும் தான் மற்றும் தனது கூட்டாளிகள் சேர்ந்து இந்த பிரேதேசத்தில் உள்ள அனைத்து மதுபானகடைகளையும் வாங்கியுள்ளதாகவும், இது மட்டுமே மீதம் உள்ளதாகவும், அதனையும் தனக்கு விற்று விட்டு தங்களிடம் வேலைக்கு சேர்ந்து கொள்ள சொல்கிறான். தங்களது கடைகள் அனைத்தின் பாதுகாப்பை பார்த்துக்கொள்ளும் வேலையை செய்ய சொல்கிறான். இதற்கு நல்ல சம்பளமும் லாபத்தில் பங்கும் தருவதாக கூறுகிறான்.
ஆனால் அனைத்தையும் மறுத்த டெக்ஸ் தான் விற்கப்போவதில்லை என்றும் மதுபானக்கடை ஒன்றுதான் பணம் சம்பாதிக்க நல்ல வழி என்றும் மேலும் இங்கு இருக்கும் ஷெரிப் கையாலாகாதவர், ஆகையால் தான் ஒரு ஒரு சூதாட்ட அரங்கை தனது கடையில் நிறுவப்போவதாகவும், அதில் தொழில் முறை சூதாடிகளிடம் லாபத்தில் பங்கு வாங்கப் போவதாகவும் கூறுகிறார். மானுவல் தனது வழியில் குறுக்கிடவேண்டாம் என்றும் எச்சரிக்கை செய்கிறார். பின் இறுதியில் தனது மறுப்பை கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார்.
அவர் சென்றதும் ஒரு ரகசிய வாசல் வழியாக வாங் என்னும் சீனாக்காரன் வருகிறான். அவனிடம் டெக்ஸ் பற்றி அபிப்ராயம் கேட்கிறான். அதற்கு வாங் டெக்ஸ் உயிருடன் இருந்தால் தங்களுக்கு ஆபத்து என்றும் அவரை தான் பார்த்துக்கொள்வதாகவும் கூறுகிறான். பின் ஜன்னலோரம் சென்று கீழே காத்திருக்கும் தனது ஆட்களுக்கு டெக்ஸ் குழுவினரை கொல்ல சொல்லி மரண சைகை காண்பிக்கிறான். அதனை கண்ட அவன் ஆட்களில் ஒருவன் தான் அவர்களை பின் தொடர்ந்து சென்று வழியில் குறிகள் இட்டு செல்வதாகவும் தங்களது ஆட்கள் அனைவரையும் கூட்டிக்கொண்டு அதனை தொடர்ந்து வரச்சொல்லி மற்றவனை அனுப்புகிறான்.
பின் டெக்ஸ் குழுவினரை தொடர்கிறான். வழியில் அவன் ஆட்களுக்காக டிராகன் படம் வரைந்து கொண்டே செல்கிறான். ஆனால் அவனை டைகர் பார்த்து விடுகிறார். டெக்ஸ் குழுவினர் லாங்க்ஹார்ன் சென்றடைகின்றனர்.
அவர்களை பின் தொடர்ந்து வந்த சீனன் மற்றவர்களுக்காக காத்திருக்கிறான்.
சிறிது நேரத்தில் மேலும் 9 சீனர்கள் வந்து அவனுடன் சேர்ந்து கொண்டனர். அதனை கண்ட டைகர் அவர்களை கடந்து கடைக்குள் நுழைந்து டெக்ஸ் இருக்கும் மேஜையை நோக்கி செல்கிறார்.
வாண வேடிக்கை:
தீப்பெட்டி கேட்பதை போல குனிந்து தெருவின் எதிரில் 10 சீனர்கள் காத்திருப்பதை தெரிவிக்கிறார். பின் அங்கிருந்து வெளியேறி தாக்குதலுக்கு ஏற்ற ஒரு மறைவான இடத்தில் ஏறி அமர்ந்து கொள்கிறார். தாக்குதலுக்கான திட்டத்தை டெக்ஸ் விவரிக்கிறார். தான் வெளியேறி எதிர்புறம் செல்வதாகவும் கார்சன் கதவின் வெளியே இடப்பக்கமுள்ள தடுப்பின் பின் நிற்கவும் கிட் வாசலில் நிற்கவும் கூறுகிறார். பின்னர் டெக்ஸ் தனியே வெளியே செல்கிறார். அவர் வெளியே வந்ததும் அவர் மேல் கத்தி வீச இருந்த சீனனை டைகரின் தோட்டா பலி கொள்கிறது. பின் நால்வரும் சேர்ந்து அவர்களை தாக்குகின்றனர் அவர்களிடம் கத்தி மட்டும் தான் இருக்கிறது.
தங்களது தாக்குதலை எதிரிகள் அறிந்து கொண்டதால் சீனர்கள் பின் வாங்க பார்த்தனர். ஆனால் நண்பர்களின் தாக்குதலில் இருந்து தப்ப முடியவில்லை. இறுதில் 3 சீனர்கள் மட்டும் தப்பி சென்று விடுகின்றனர். இறந்தவர்களை ஆராய்ந்த பொழுது அனைவரும் கழுத்தில் ஒரு கருப்பு டிராகன் படம் போட்ட பதக்கம் அணிந்து இருந்தனர். டெக்ஸ் அந்த பதக்கங்களை எடுத்து மானுவலுக்கு ஒரு செய்தியுடன் அனுப்புகிறார். பின் அங்கிருப்போரிடம் இருந்து அந்த சீனர்கள் கால்வஸ்டன் துறைமுகத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என அறிகின்றார்.
பின்னர் பாரடைஸில் டெக்ஸின் கடிதத்தை வாங்கும் மானுவல் அதனை படிக்கிறான். அதனுடன் வந்த பதக்கங்களை கண்டு அதிர்ச்சி அடைகிறான்.
அக்கடிதத்தில் இருந்த " அடுத்த தடவை இன்னும் கூடுதலாக ஆட்கள் அனுப்பு " என்ற செய்தியை கண்டு கோவம் அடைகிறான்.
லாங்க்ஹார்னில் டெபுடி பிப்பிடம் நடந்ததை விளக்கி கூறினர். அவர்கள் தான் முதலில் தாக்கப்பட்டதாக மற்றவர்கள் கூறினார்கள் எனக்கூறி அவர்களை தூங்க சொல்லி செல்கிறான் பிப். அவர்கள் தூங்கினால்தான் மேலும் விவகாரங்கள் வராது எனவும் கூறுகிறான்.
அதே நேரத்தில் மானுவல் தனது குதிரை வண்டியோட்டியிடம் கால்வஸ்டனுக்கு வண்டியை விரைவாக விட சொல்கிறான். துறைமுகத்தை அடைந்த உடன் மானுவல் வண்டியில் இருந்து இறங்கி அந்த தெருவில் இருந்த ஒரு வீட்டின் கதவின் முன் நின்று தட்டினான்.
சுவர்கதிற்கொரு பாலம்:
அந்த வீட்டினுள் சென்று ஒரு ரகசிய கதவின் வழியாக சென்று வாங்கை சந்திக்கிறான். அங்கு வாங் ஒரு விசித்திர முகமூடி அணிந்து தப்பி வந்த 3 பேரை விசாரணை செய்கிறான். அவர்கள் தான் டெக்ஸிடம் இருந்து தப்பிவந்தவர்கள். அவர்களுக்கு மரண தண்டனை கொடுத்து ஒரு பாதாளத்தில் தள்ளி விடுகிறான்.
பின் மற்றொரு அறைக்கு வந்து முகமூடியை நீக்கி விட்டு மானுவலுடன் உரையாடுகிறான். அங்கிருந்த ஒரு பெண்ணிடம் கஞ்சா புகைக்க கொண்டு வர சொல்கிறான். பின்னர் மானுவலிடம் இருந்த கடிதத்தையும் பதக்கங்களும் வாங்கி பார்கிறான்.
அப்பொழுது அந்த பெண் கஞ்சாவுடன் வருகிறாள். அவள் பார்வையில் படும்படி ஒரு பதக்கத்தை வைக்கிறான் வாங். அதனை கண்ட அந்த பெண் தனது சகோதரனுக்கு என்ன ஆனது என கேட்கிறாள் அதற்கு வாங் கில்லர் எனபவனால் அவன் கொல்லப்பட்டான் என கூறுகிறான்.
அவனை பழிவாங்க தான் செல்வதாக மின் லி என்ற அந்த பெண் கூறுகிறாள். அவளுக்கு விஷம் தடவிய கத்தி ஒன்றை கொடுத்து அனுப்புகிறான். பின்னர் மானுவலிடம் இனி கவலை இல்லாமல் போய் வா என கூறுகிறான். அங்கிருந்து கிளம்பிய மானுவல் தனது குதிரை வண்டியில் டெக்ஸாஸ் வந்து சேருகிறான்.
பதிவு மிக நீளமாக சென்று கொண்டிருப்பதால் இதனை இரண்டு பாகமாக கொடுக்க முடிவு செய்துள்ளேன். ஆகையால் நண்பர்கள் சற்றே பொறுமை காக்க வேண்டும்.
இக்கதையை நான் ஓரளவு கூறி இருந்தாலும் வசனங்களின் தாக்கம் இப்புத்தகத்தை படித்தால் தான் உணரமுடியும். வசனங்கள் அவ்வளவு அருமையாக இருக்கும் மற்றும் கதை முழுவது சண்டை காட்சிகள் நிறைந்துள்ளன. அதனையும் படிக்கும் போதே உணரமுடியும்.என்னை பொருத்தவரை இக்கதை டெக்ஸ் கதைகளிலேயே முதல் இடத்தை பிடிக்கிறது.
அவ்வளவு தான் நண்பர்களே.ஒரு வாரத்தில் மீண்டும் இரண்டாம் பாகத்துடன் சந்திப்போம் .
கிருஷ்ணா வ வெ.
நான் எனது பதிவிற்கு எடுத்துகொண்டிருக்கும் கதை டெக்ஸ் வில்லரின் டிராகன் நகரம் இதற்கு பல காரணங்கள் இருகின்றன. இக்கதை லயனின் 50வது இதழாக வந்தது. மற்றும் எனது புனைப்பெயரான இரவுக்கழுகின் சாகசம். அது தவிர நமது விஜயன் சாரே எந்த ஒரு ஸ்பெசல் இதழுக்கும் டெக்ஸ் கதைகளையே தேர்வு செய்கிறார். பின்பு நான் மட்டும் ஏன் மாறுபடவேண்டும்.
எனது சமீப பதிவுகளின் நீளம் மிக குறைவாக இருக்கிறது என நண்பர்கள் பலர் கருத்து சொன்னார்கள் அவர்களுக்காகவும் இதோ மீண்டும் ஒரு நீளமான பதிவு.
கதையில் "டெக்ஸ் சை" என வரும் இடங்களில் நான் "வில்லரை" என பயன்படுதியுள்ளேன் ஆனால் கதையின் ஒரு கட்டத்திற்கு பிறகு "கில்லரை" என கூறி உள்ளேன் மற்ற இடங்களில் டெக்ஸ் என்றே கூறி உள்ளேன்.இதனை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
இதோ உங்களுக்காக டிராகன் நகரம்.நேரே கதைக்கு செல்வோம்.
கதை:
இடம் : ஆஸ்டனில் உள்ள ரேஞ்சர் களின் தலைமையகம்.
டெக்ஸாஸ் நகரில் அட்டூழியம் புரிந்துவரும் கொடியவர்களை அழிக்க டெக்ஸிடம் கேட்கிறார் ரேஞ்சர்களின் தலைவர். இங்கிருக்கும் அனைத்து ரேஞ்சர்களையும் அங்கு இருக்கும் கயவர்களுக்கு தெரிந்ததால் அவர்களை கொன்று விடுகிறார்கள். ஆகையால் இந்த பகுதியை சேராத வில்லரை அழைத்ததாக கூறுகிறார். தனக்கு துப்பாக்கியை பயன்படுத்த முழு அதிகாரம் இருந்தால் மட்டுமே தான் இதில் ஈடுபடுவதாக கூறுகிறார் டெக்ஸ். தான் ரேஞ்சர் என்பதை வெளிபடுத்த போவதில்லை என்று டெக்ஸ் உறுதி அளித்தபின் அதற்கு சம்மதிக்கிறார் ரேஞ்சர்களின் தலைவர் கர்னல். பின் அங்கிருந்து ஹோட்டலில் இருக்கும் தனது குழுவிற்கு ஒரு கடிதம் அனுப்பிவிட்டு டெக்ஸாஸ் நோக்கி ஹூஸ்ட்ன் சாலையில் புறப்படுகிறார்.
அங்கு நடக்கும் நிகழ்வுகளை எதிர் கட்டிடத்தில் இருந்து ஒரு கயவன் தொலைநோக்கி மூலம் காண்கிறான். வழியில் வில்லரை மடக்க அவரை பின் தொடருகிறான்.
இதற்கிடையில் டெக்ஸின் கடிதம் கிடைக்கப்பெற்ற கார்சன் அதனை மற்ற இருவருடன் பகிர்ந்து கொள்கிறார். அதில் தான் கிளம்பியபின் 15 நிமிட இடைவெளிவிட்டு தன்னை தொடர டெக்ஸ் கூறியிருந்தார். அதன் படி கிளம்பிய கார்சன், கிட் மற்றும் டைகர் வில்லரை பின் தொடரும் கயவனை பார்கின்றனர். டெக்ஸின் மதிநுட்பத்தை மூவரும் பாராடுகின்றனர்.
மாலையானதும் வழியில் டெக்ஸ் ஒரு இடத்தில தங்கினார். அதனை கண்ட அந்த கயவன் இரவானதும் வில்லரை வீழ்த்த காத்திருக்கிறான். அதனை கண்ட நண்பர்கள் குழுவும் அவனது அடுத்த செயலுக்காக காத்திருந்தனர்
இரவானது அந்த கயவன் வில்லரை வீழ்த்த தனது துப்பாக்கியை எடுத்தான் ஆனால் அதற்குள் நமது குழு அவனை மடக்கியது, அனாலும் கையில் இருந்த துப்பாக்கியை தூக்கி சுடப் பார்தான் வேறு வழி இல்லாமல் அவனை சுட்டு வீழ்த்தினர். சிறிது நேரத்தில் அங்கு வந்து குழுவுடன் சேர்ந்தார் டெக்ஸ்.
இறந்த கயவனின் உடுப்புகளை சோதித்தார். அதில் ஒரு கடிதம் இருந்தது, அது ஜிம் என்பவன் ப்ரெட் என்பவனுக்கு எழுதிருந்தது. அதன் மூலம் இறந்தவன் தான் ப்ரெட் என அறிந்துகொண்டனர். அக்கடிதத்தின் சாரம்சம் இது தான் "ரீகன் தெருவில் இருக்கும் மதுபானக்கடையை மானுவல் வாங்க தீர்மானித்திருகிறார்" என்பதே.
இருதினங்களுக்கு பின் நண்பர்கள் டெக்ஸாஸ் நகரை அடைகின்றனர். டைகர் மட்டும் நகருக்கு வெளியில் தங்கி டெக்ஸின் மறு உத்தரவுக்காக காத்திருந்தான். நண்பர்கள் அந்த லாங்க்ஹார்ன் மதுபானக்கடையை கண்டுபிடித்து நுழைந்தனர். அங்கு கடையை விலை பேசிக்கொண்டு இருந்தவனை அடித்து துரத்துகிறார் டெக்ஸ்.
ஆட்டத்தின் முதற்கட்டம்:
அதனால் பயந்த அந்த கடையின் பார்மேன் அவர்களை அங்கிருந்து உடனே கிளம்ப சொல்லுகிறான் அல்லது அவர்கள் அடித்த ஜிம் அவன் ஆட்களுடன் வந்து அவர்களையும் கடையையும் நாசம் செய்துவிடுவான் என கூறுகிறார். அதற்கு டெக்ஸ் அந்த கடையை 2000 டாலர்களுக்கு தான் வாங்கி கொள்வதாகவும், ஆபத்திலும் பங்கு தருவதாகவும் கூற பார்மேன் டாம் சந்தோசத்துடன் சம்மதிக்கிறான்.
இதற்கிடையில் பாரடைஸ் மதுபானக்கடையில் இருக்கும் தன் நண்பர்களை அழைத்துக்கொண்டு போக்கர் ஜிம் டெக்ஸ் குழுவினரை வீழ்த்த மீண்டும் வருகிறான். ஆனால் அவர்கள் அனைவரையும் சுட்டு வீழ்த்தி விடுகின்றனர் நமது வீரர்கள். போக்கர் ஜிம் மற்றும் நெட் கார்னெல் மட்டும் தப்பி விடுகின்றனர்.
இந்த ஆக்சன் காட்சியை நான் விவரிப்பதை விட நீங்கள் படங்களில் காண்பதே முழு திருப்தி அளிக்கும்.
இதற்கிடையில் பாரடைஸ் மதுபானக்கடையில் இருக்கும் தன் நண்பர்களை அழைத்துக்கொண்டு போக்கர் ஜிம் டெக்ஸ் குழுவினரை வீழ்த்த மீண்டும் வருகிறான். ஆனால் அவர்கள் அனைவரையும் சுட்டு வீழ்த்தி விடுகின்றனர் நமது வீரர்கள். போக்கர் ஜிம் மற்றும் நெட் கார்னெல் மட்டும் தப்பி விடுகின்றனர்.
இந்த ஆக்சன் காட்சியை நான் விவரிப்பதை விட நீங்கள் படங்களில் காண்பதே முழு திருப்தி அளிக்கும்.
சண்டை முடிந்ததும் வெற்றியை கொண்டாட அங்கிருக்கும் அனைவருக்கும் இலவசமாக மது வழங்குகிறார் டெக்ஸ். இதற்கிடையில் அங்கு இருந்து ஓடிய இருவரையும் கண்ட ஷெரிப் கடைக்குள் வருகிறார். அங்கிருக்கும் வில்லரை துப்பாக்கியை காட்டி மிரட்டுகிறார்.
டெக்ஸ் கில்லர்:
சூடான விவாதத்தின் பின் மற்றும் பார்மேன் டாம் விளக்கி சொன்னபின் சமாதானம் ஆகிறார். தனது பெயர் பர்குசன் மற்றும் தனது டெபுடி பெயர் பிப் டர்பின் என அறிமுகம் செய்துகொள்கிறார். டெக்ஸ் தன்னை டெக்ஸ் கில்லர் என்றும் கார்சனை பார்சன் என்றும் மற்றும் கிட்டையும் அறிமுகம் செய்கிறார்.
(இந்த இடத்தில் எனக்கு ஒரு சந்தேகம் டெக்ஸ் வேண்டும் என்றே தனது பெயரை மாற்றி சொல்கிறாரா அல்லது இக்கதையில் அவர் பெயரே அதுதானா? நண்பர்கள் தெரிந்தால் சொல்லலாம்.)
டெக்ஸ் ஜிம்மை ஏன் கைது செய்யவில்லை என்பதற்கு அவன் ராட்சத பர்சக்கரத்தின் ஒரு பல் எனவும், அந்த சக்கரம் கில்லரை நோக்கி சுழலாம் எனவும் எச்சரிக்கை செய்கிறார், மேலும் ஒரு சுடுகாட்டிற்கு அழைத்து சென்று இறந்த ஷெரிப்கள் மற்றும் ரேஞ்சர்கள் சமாதியை காட்டுகிறார். பின் அங்கிருந்து கிளம்புகிறார்.
இதற்கிடையில் ஜிம் பாரடைஸில் மானுவலை சந்தித்து விவரம் கூறுகிறான்.
அவனை திட்டும் மானுவல் அவன் தான் கில்லரை கொல்லவேண்டும் இல்லையேல் மீண்டும் அங்கு வரவேண்டாம் என கூறிவிடுகிறான். இதற்கிடையில் டைகரை சந்திக்கும் நண்பர்கள் அவரை நகருக்கு வெளியில் தங்கிக்கொள்ளவும் விழிப்போடு இருக்கவும் கூறுகிறார். ஏதாவது தகவல் இருந்தால் லாங்க்ஹார்னில் டாமிடம் கேட்டுகொள்ளசொல்லுகிறார். அன்றிரவு பட்டாசு வேடிக்கை நடக்கலாம் என எச்சரிக்கை செய்கிறார்.
பட்டாசு இரவு:
அன்றிரவு ப்ளாட்டர் உணவு விடுதியில் நண்பர்கள் இருந்தார்கள். அந்த செய்தியை நெட்டிடம் இருந்து அறிந்த ஜிம் கில்லரை கொல்ல தனித்து வருகிறான். கடையை அடைந்த ஜிம் ஒரு ஜன்னலோரத்தில் இருந்து கில்லரை குறி வைத்தான். ஆனால் அதனை மறைந்து இருந்து பார்த்த டைகர் அவனை நோக்கி சுட அது தவறி ஜன்னல் கண்ணாடியை உடைத்துவிடுகிறது. அதனால் சூதாரித்துக்கொண்ட நண்பர்கள் ஜன்னலை நோக்கி சரமாரியாக சுடுகின்றனர்.
அந்த குண்டுகள் பட்டு ஜிம் இறந்துவிடுகிறான். டைகர் அங்கிருந்து மறைந்து விடுகிறார்.
அப்பொழுது அங்கு டெபுடி பிப் வருகிறார். அவரிடம் தங்கள் தற்காப்புக்காகதான் சுட்டோம் என விளக்கம் கொடுகிறார்கள். அங்கு நடந்ததை கண்ட ஒரு கயவன் பாரடைஸ் சென்று நெட்டிடம் ஜிம் இறந்ததை கூறுகிறான். உடனே நெட் அந்த செய்தியை மானுவலிடம் சென்று கூறிகிறான் அதனை கேட்ட மானுவல் ஒரு கடிதம் எழுதி நெட்டிடம் கொடுத்து டெக்ஸிடம் சென்று கொடுக்க சொல்லுகிறான். அதனை எடுத்து சென்ற நெட் ப்ளாட்டர் உணவு விடுதியில் இருந்த கில்லரை கண்டு கொடுக்கிறான்.
கடிதத்தில் மானுவல் தன்னை பாரடைஸ் வரச்சொல்லி அழைப்பு விடுத்துள்ளதை நண்பர்களிடம் கூறுகிறார் டெக்ஸ். அந்த கடிதத்திற்கு அவருடைய பதிலை கேட்ட நெட்டிடம் தான் ஏற்றுக்கொண்டதாக கூறுகிறார். இடம் கேட்ட டெக்ஸிடம் பாரடைஸ் வரச்சொல்கிறான். தான் 15 நிமிடத்தில் வருவதாக சொல்லி அவனை அனுப்புகிறார்.
பின் அனைவரும் கிளம்பி பாரடைஸ் வந்தடைகிறார்கள். அங்கு ஒரு மடையன் கில்லரை சீண்ட அவனை அடித்து துவைக்கிறார். அப்பொழுது அங்கு வரும் நெட் அவர்தான் ஜிம்மை பரலோகம் அனுப்பிவைத்தவர் எனகூறி கில்லரை மானுவலிடம் அழைத்து செல்கிறான். மேலே செல்லும் டெக்ஸ் மானுவலிடம் தன்னை டெக்ஸ் கில்லர் என அறிமுகம் செய்துகொள்கிறார்.
டிராகனின் முத்திரை:
இருவருக்கும் இடையில் மிகவும் சூடான விவாதம் நடக்கிறது. லாங்க்ஹார்னை தன்னிடம் விற்று விட சொல்கிறான்.
மற்றும் தான் மற்றும் தனது கூட்டாளிகள் சேர்ந்து இந்த பிரேதேசத்தில் உள்ள அனைத்து மதுபானகடைகளையும் வாங்கியுள்ளதாகவும், இது மட்டுமே மீதம் உள்ளதாகவும், அதனையும் தனக்கு விற்று விட்டு தங்களிடம் வேலைக்கு சேர்ந்து கொள்ள சொல்கிறான். தங்களது கடைகள் அனைத்தின் பாதுகாப்பை பார்த்துக்கொள்ளும் வேலையை செய்ய சொல்கிறான். இதற்கு நல்ல சம்பளமும் லாபத்தில் பங்கும் தருவதாக கூறுகிறான்.
ஆனால் அனைத்தையும் மறுத்த டெக்ஸ் தான் விற்கப்போவதில்லை என்றும் மதுபானக்கடை ஒன்றுதான் பணம் சம்பாதிக்க நல்ல வழி என்றும் மேலும் இங்கு இருக்கும் ஷெரிப் கையாலாகாதவர், ஆகையால் தான் ஒரு ஒரு சூதாட்ட அரங்கை தனது கடையில் நிறுவப்போவதாகவும், அதில் தொழில் முறை சூதாடிகளிடம் லாபத்தில் பங்கு வாங்கப் போவதாகவும் கூறுகிறார். மானுவல் தனது வழியில் குறுக்கிடவேண்டாம் என்றும் எச்சரிக்கை செய்கிறார். பின் இறுதியில் தனது மறுப்பை கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார்.
அவர் சென்றதும் ஒரு ரகசிய வாசல் வழியாக வாங் என்னும் சீனாக்காரன் வருகிறான். அவனிடம் டெக்ஸ் பற்றி அபிப்ராயம் கேட்கிறான். அதற்கு வாங் டெக்ஸ் உயிருடன் இருந்தால் தங்களுக்கு ஆபத்து என்றும் அவரை தான் பார்த்துக்கொள்வதாகவும் கூறுகிறான். பின் ஜன்னலோரம் சென்று கீழே காத்திருக்கும் தனது ஆட்களுக்கு டெக்ஸ் குழுவினரை கொல்ல சொல்லி மரண சைகை காண்பிக்கிறான். அதனை கண்ட அவன் ஆட்களில் ஒருவன் தான் அவர்களை பின் தொடர்ந்து சென்று வழியில் குறிகள் இட்டு செல்வதாகவும் தங்களது ஆட்கள் அனைவரையும் கூட்டிக்கொண்டு அதனை தொடர்ந்து வரச்சொல்லி மற்றவனை அனுப்புகிறான்.
பின் டெக்ஸ் குழுவினரை தொடர்கிறான். வழியில் அவன் ஆட்களுக்காக டிராகன் படம் வரைந்து கொண்டே செல்கிறான். ஆனால் அவனை டைகர் பார்த்து விடுகிறார். டெக்ஸ் குழுவினர் லாங்க்ஹார்ன் சென்றடைகின்றனர்.
அவர்களை பின் தொடர்ந்து வந்த சீனன் மற்றவர்களுக்காக காத்திருக்கிறான்.
சிறிது நேரத்தில் மேலும் 9 சீனர்கள் வந்து அவனுடன் சேர்ந்து கொண்டனர். அதனை கண்ட டைகர் அவர்களை கடந்து கடைக்குள் நுழைந்து டெக்ஸ் இருக்கும் மேஜையை நோக்கி செல்கிறார்.
வாண வேடிக்கை:
தீப்பெட்டி கேட்பதை போல குனிந்து தெருவின் எதிரில் 10 சீனர்கள் காத்திருப்பதை தெரிவிக்கிறார். பின் அங்கிருந்து வெளியேறி தாக்குதலுக்கு ஏற்ற ஒரு மறைவான இடத்தில் ஏறி அமர்ந்து கொள்கிறார். தாக்குதலுக்கான திட்டத்தை டெக்ஸ் விவரிக்கிறார். தான் வெளியேறி எதிர்புறம் செல்வதாகவும் கார்சன் கதவின் வெளியே இடப்பக்கமுள்ள தடுப்பின் பின் நிற்கவும் கிட் வாசலில் நிற்கவும் கூறுகிறார். பின்னர் டெக்ஸ் தனியே வெளியே செல்கிறார். அவர் வெளியே வந்ததும் அவர் மேல் கத்தி வீச இருந்த சீனனை டைகரின் தோட்டா பலி கொள்கிறது. பின் நால்வரும் சேர்ந்து அவர்களை தாக்குகின்றனர் அவர்களிடம் கத்தி மட்டும் தான் இருக்கிறது.
தங்களது தாக்குதலை எதிரிகள் அறிந்து கொண்டதால் சீனர்கள் பின் வாங்க பார்த்தனர். ஆனால் நண்பர்களின் தாக்குதலில் இருந்து தப்ப முடியவில்லை. இறுதில் 3 சீனர்கள் மட்டும் தப்பி சென்று விடுகின்றனர். இறந்தவர்களை ஆராய்ந்த பொழுது அனைவரும் கழுத்தில் ஒரு கருப்பு டிராகன் படம் போட்ட பதக்கம் அணிந்து இருந்தனர். டெக்ஸ் அந்த பதக்கங்களை எடுத்து மானுவலுக்கு ஒரு செய்தியுடன் அனுப்புகிறார். பின் அங்கிருப்போரிடம் இருந்து அந்த சீனர்கள் கால்வஸ்டன் துறைமுகத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என அறிகின்றார்.
பின்னர் பாரடைஸில் டெக்ஸின் கடிதத்தை வாங்கும் மானுவல் அதனை படிக்கிறான். அதனுடன் வந்த பதக்கங்களை கண்டு அதிர்ச்சி அடைகிறான்.
அக்கடிதத்தில் இருந்த " அடுத்த தடவை இன்னும் கூடுதலாக ஆட்கள் அனுப்பு " என்ற செய்தியை கண்டு கோவம் அடைகிறான்.
லாங்க்ஹார்னில் டெபுடி பிப்பிடம் நடந்ததை விளக்கி கூறினர். அவர்கள் தான் முதலில் தாக்கப்பட்டதாக மற்றவர்கள் கூறினார்கள் எனக்கூறி அவர்களை தூங்க சொல்லி செல்கிறான் பிப். அவர்கள் தூங்கினால்தான் மேலும் விவகாரங்கள் வராது எனவும் கூறுகிறான்.
அதே நேரத்தில் மானுவல் தனது குதிரை வண்டியோட்டியிடம் கால்வஸ்டனுக்கு வண்டியை விரைவாக விட சொல்கிறான். துறைமுகத்தை அடைந்த உடன் மானுவல் வண்டியில் இருந்து இறங்கி அந்த தெருவில் இருந்த ஒரு வீட்டின் கதவின் முன் நின்று தட்டினான்.
சுவர்கதிற்கொரு பாலம்:
அந்த வீட்டினுள் சென்று ஒரு ரகசிய கதவின் வழியாக சென்று வாங்கை சந்திக்கிறான். அங்கு வாங் ஒரு விசித்திர முகமூடி அணிந்து தப்பி வந்த 3 பேரை விசாரணை செய்கிறான். அவர்கள் தான் டெக்ஸிடம் இருந்து தப்பிவந்தவர்கள். அவர்களுக்கு மரண தண்டனை கொடுத்து ஒரு பாதாளத்தில் தள்ளி விடுகிறான்.
பின் மற்றொரு அறைக்கு வந்து முகமூடியை நீக்கி விட்டு மானுவலுடன் உரையாடுகிறான். அங்கிருந்த ஒரு பெண்ணிடம் கஞ்சா புகைக்க கொண்டு வர சொல்கிறான். பின்னர் மானுவலிடம் இருந்த கடிதத்தையும் பதக்கங்களும் வாங்கி பார்கிறான்.
அப்பொழுது அந்த பெண் கஞ்சாவுடன் வருகிறாள். அவள் பார்வையில் படும்படி ஒரு பதக்கத்தை வைக்கிறான் வாங். அதனை கண்ட அந்த பெண் தனது சகோதரனுக்கு என்ன ஆனது என கேட்கிறாள் அதற்கு வாங் கில்லர் எனபவனால் அவன் கொல்லப்பட்டான் என கூறுகிறான்.
அவனை பழிவாங்க தான் செல்வதாக மின் லி என்ற அந்த பெண் கூறுகிறாள். அவளுக்கு விஷம் தடவிய கத்தி ஒன்றை கொடுத்து அனுப்புகிறான். பின்னர் மானுவலிடம் இனி கவலை இல்லாமல் போய் வா என கூறுகிறான். அங்கிருந்து கிளம்பிய மானுவல் தனது குதிரை வண்டியில் டெக்ஸாஸ் வந்து சேருகிறான்.
பாகம் ஒன்று முடிவுற்றது.
இக்கதையை நான் ஓரளவு கூறி இருந்தாலும் வசனங்களின் தாக்கம் இப்புத்தகத்தை படித்தால் தான் உணரமுடியும். வசனங்கள் அவ்வளவு அருமையாக இருக்கும் மற்றும் கதை முழுவது சண்டை காட்சிகள் நிறைந்துள்ளன. அதனையும் படிக்கும் போதே உணரமுடியும்.என்னை பொருத்தவரை இக்கதை டெக்ஸ் கதைகளிலேயே முதல் இடத்தை பிடிக்கிறது.
அவ்வளவு தான் நண்பர்களே.ஒரு வாரத்தில் மீண்டும் இரண்டாம் பாகத்துடன் சந்திப்போம் .
கிருஷ்ணா வ வெ.
50, 100, 150 என்று பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.
ReplyDeleteமுதல் பதிவை போலவே எனது 50வது பதிவிற்கும் முதல் பின்னுட்டமிட்டு என்னை ஊக்குவித்ததற்கு நன்றி நண்பரே.
Deleteஇதற்க்கு கூடவா நன்றி?
Deleteஅப்போ நானும் சொல்றேன்: நீங்க நன்றி சொன்னதற்கு என்னுடைய நன்றி.
BTW, உங்களுடைய பதிவுகள் சூப்பர்
ஸ்கான்னர் இல்லாமலேயே போட்டோக்களை வைத்துக்கொண்டு ஐம்பது பதிவுகள் என்பது ஒரு சாதனையே.
செல்பேசியில் எடுக்கும் படங்களின் தரங்கள் குறைந்து இருந்தாலும் ஏதோ என்னால் முடிந்தளவு அதில் best கொடுக்க முயற்சி செய்கிறேன்.
Deleteஇதில் நண்பர்கள் தான் பாவம் இதனை கொண்டு அவர்கள் திருப்தி அடைய வேண்டும்.
சிலர் scanner வச்சு பக்காவா scan பண்ணியிருந்தாலும் பகிர்ந்துகொள்ள முன்வருவதில்லை
ReplyDeleteநீங்கள் scanner இல்லாமலே கலக்குறீங்க
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பா.
Deleteஇதில் ஏன் பங்கை விட குறை இருந்தாலும் அதனை ஏற்றுக்கொண்ட நண்பர்கள் பங்குதான் மிகுதி.
அவர்களுக்கு ஏன் நன்றிகள்.
50 பதிவுகள் என்பது நிச்சயம் ஒரு மைல்கல்தான்!
ReplyDeleteபெருகட்டும் பல மைல்கற்கள்! வாழ்த்துக்கள் நண்பரே!
(இன்னும் பதிவைப் படிக்கலை. ஹி ஹி!)
விஜய் உங்களுடைய Suggestions Implement பண்ணிருக்கேன், படித்துவிட்டு கருத்துக்கள் சொல்லுங்கள்.
Deleteசூப்பர் பதிவு நண்பரே உங்களுக்கு என்ன ஸ்கேன் வேண்டுமோ சொல்லுங்கள் மெயில் அனுப்புகிறேன் மேலும் நன்றாக இருக்கும்...
ReplyDeleteஎது எண்ணுதோ அது உன்னுது எது உன்தோ அது என்னுது.....
Lets share... Super post Super like for a nice post..
Shriram
வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே.
Deleteதங்களுடைய உதவும் மனப்பான்மைக்கு எனது நன்றிகள்.
கண்டிப்பாக எனது பாகம் இரண்டிற்கு உங்களிடம் இருந்து ஸ்கேன்கள் பெற்றுக்கொள்கிறேன்.
50 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள். டிராகன் நகரம் எனக்கு மிகவும் பிடித்தமான கதை அதை 50 ஆவது பதிவாக செய்தது அருமை. தொடருங்கள் உங்கள் பணியை.
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே.
Delete50 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பா.
ReplyDeleteஉங்களின் சிறப்பான பதிவுகள் தொடர வாழ்த்துகிறேன்.
50 வது பதிவிற்கு அமர்க்களமான கதை தேர்வு நண்பா :-)
பதிவு முழுவதையும் படித்துவிட்டேன். சீக்கிரமே பாகம் 2-ஐ எதிர்பார்க்கிறேன்.
//(இந்த இடத்தில் எனக்கு ஒரு சந்தேகம் டெக்ஸ் வேண்டும் என்றே தனது பெயரை மாற்றி சொல்கிறாரா அல்லது இக்கதையில் அவர் பெயரே அதுதானா? நண்பர்கள் தெரிந்தால் சொல்லலாம்.)// டெக்ஸ் தான் ரேஞ்சர் என்பதை வெளிபடுத்த போவதில்லை என்று உறுதியளித்துள்ளதால் தன் பெயரை மாற்றி கூறியிருக்கலாம். (ஏனெனில் பலகதைகளில் வில்லர் என்ற பெயரைக் கேட்டவுடன் வில்லன்கள் பிரபல ரேஞ்சர் என்பதை நினைவுகூர்ந்து விடுவர்.) - இது எனக்குத் தெரிந்த காரணம்.
வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பா.
Deleteஉங்களுடைய காரணம் சரியாக இருக்கும் என நினைக்கிறன்.
50வது பதிவிற்கு வாழ்த்துகள் கிருஷ்ணா. டிராகன் நகரம் வெளிவந்த காலத்தில், அதை கடைகளில் ஆசையுடன் பார்த்து விட்டு, ரூ.5 என்று தெரிந்தவுடன், பையுக்குள் உள்ள காசை எண்ணியபடியே நகர்ந்தது இன்றும் நியாபகம் இருக்கிறது.
ReplyDeleteபிற்காலத்தில், புத்தகம் மட்டும் கிடைத்தாலும், அந்த தாய விளையாட்டை நண்பர்கள் கலெக்ஷனிலும் மட்டுமே பார்க்க முடிந்தது. டெக்ஸ் கதை இவ்வளவு பெரிதாக வெளிவந்தது இது தான் முதல்முறை என்று நினைக்கிறேன்... சரிதானா ?
உங்களுடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ரபிக்.
Delete50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே.
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே.
Deleteஅய்ம்ப்பது பதிவால பட்டையை கிளப்பின மாதிரியே அய்ய்ந்நூறு பதிவுகளை இட்டு எம்மை சிலிர்க்க செய்க! கலக்கு நண்பா!
ReplyDeleteஅப்புறம் மறந்துட்டேன் "டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!டுமீல்!" ஒன்னும் இல்லை சந்தோசம் தாங்கலை வெடி சுட்டு கொண்டாடுறேன்!
ReplyDeleteஉங்களுக்கென்ன சைமன்ஜி; நீங்க நெனச்சா ஒரிஜினல் துப்பாக்கியிலேயே சுட்டு சுட்டு விளையாடலாம். எங்களுக்கு வெறும் தீபாவளி துப்பாக்கிதானே! :-( டுமீல் டுமீல் டுமீல் அடடா, அதுக்குள்ள கேப்பு தீர்ந்துபோச்சே!
Deleteஈரோடு விஜய், பார்த்து பேசுங்கள் ... உங்களைச் சுட்டு விடப் போகிறார் :) :)
Deleteநமது இரவுக்கழுகின் நால்வர் குழு நமது சைமன் இணைந்ததும் ஐவர் குழு ஆகிவிட்டது.
Deleteஅவர்களுக்கு துப்பாக்கி சுடுவதில் நம்ம சைமன்
எந்த விதத்திலும் குறைந்தவர் இல்லை என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே.
கிருஷ்ணா வ வெ :
ReplyDelete50 பதிவுகள் என்பது எந்த subject ஆக இருந்தாலும் கடினமான இலக்கே. Congrats for the milestone! தொடரட்டும் உங்கள் காமிக்ஸ் ஆர்வம்.
முதல் முறை எனது வலைப்பூவில் பின்னுட்டம் இடுகிறேர்கள் என நினைக்கிறேன்.
Deleteநன்றி ராகவன் சார்.
congrats நண்பா
ReplyDeleteநன்றி நண்பா
Deleteஅமர்களமான 50வது பதிவு. வாழ்த்துக்கள் நண்பரே!
ReplyDeleteபதிவின் எழுத்துக்களை சற்று பெரிதாக்கினால் நன்று
நன்றி நண்பரே.
Deleteகண்டிப்பாக சரி செய்து விடுகிறேன்.
உங்கள் 50வது பதிவில், லயனின் 50வது இதழ்! வாழ்த்துக்கள் கிருஷ்ணா! காமிக்ஸ் ப்ளாக் தொடங்குவது பெரிதல்ல, அர்ப்பணிப்புடன் அதை தொடர்ந்து நடத்துவது பெரிய விஷயம்! இதை விடாமல் தொடருங்கள்! டிராகன் நகரம் எனக்கும் மிகவும் பிடித்தமான கதை, கடைசியாக படித்து ஒரு 15 வருடங்களாவது இருக்கும். நேரம் கிடைத்தால் அந்தப் புத்தகத்தை மீண்டும் ஒரு தடவை படித்து விட்டு பிறகு உங்கள் (இரு பாக) பதிவை முழுதாக படிக்கிறேன்! :)
ReplyDeleteகண்டிப்பாக படித்துவிட்டு கருத்து கூறுங்கள் கார்த்திக்.
Deleteஜி அடிச்சு தூள் கிளப்பிட்டிங்க.
ReplyDelete