லண்டனில் காமிக்ஸ் மார்கெட்

லண்டனில் காமிக்ஸ் மார்கெட்

லண்டனும் லயன் காமிக்ஸும்

லண்டனும் லயன் காமிக்ஸும்

Memories (2013) - Malayalam Movie Review

Memories (2013) - Malayalam Movie Review

காமிக்ஸ் புதையல் XX - Rani Comics Collection

காமிக்ஸ் புதையல் XX - Rani Comics Collection

பூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு

பூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு

Wednesday, September 19, 2012

Herlock Sholmes - Mini Lion - எழுந்து வந்த எலும்புக்கூடு




வணக்கம் நண்பர்களே,

வெகுநாளாக நான் நம்ம சௌந்தர் போல தனி பதிவு இட ஆசைப்பட்டேன்.அது இன்று தான் நிறைவேறி உள்ளது.
இது தான் எனது முதல் தனி புத்தக பதிவு.
இன்றைய பதிவில் நாம் காணபோவது மினி லயனில் வந்த  ஹெர்லக்   ஷோம்ஸ் முதல் கதை "எழுந்து வந்த எலும்புக்கூடு".
மிகவும் புகழ் வாய்ந்த ஷெர்க் ஹோம்ஸ் கதாபாத்திரத்தை கிண்டல் செய்து உருவாக்கப்பட்ட கத பாத்திரம் தான் இது.

அவர்களுக்கு நமது விஜயன் சார் அவர்களின் அறிமுகம் உங்களுக்காக.



கதை :

லண்டன் மாநகர்.
ஸ்காட்லான்ட் யார்ட் இற்கே சவால் விடும் புதிய பிரச்னை.
சமீபகாலமாக சுடுகாடில் இருந்து பிணங்கள் காணாமல் போகின்றன.
அதிகாரிகள் எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.சீப் அவர்கள் மிகவும் கோவப்படுகிறார்.

முடிவில் இந்த முடிச்சை அவிழ்க்க கூடியவர் ஒருவரே என கூறி நமது   ஹெர்லக்  ஷோம்ஸ் அவர்களை அழைகிறார்.
அவர் தனக்கு அந்த வழக்கை பற்றி அனைத்தும் தெரியும் என்றும் உங்கள் அதிகாரிகளில் ஒருவர் அதற்கு துணை போவதாக தான் சந்தேகபடுவதாகவும் கூறுகிறார்.ஆகையால் தான் இந்த வழக்கை எடுத்துகொள்வது யார்க்கும் தெரியவேண்டாம் என்றும் தான் மறுத்துவிட்டதாக அவர்களிடம் கூறவும் சொல்கிறார்.அதன் படியே சீப்பும் கூறுகிறார்.

பின்பு ஷோம்ஸ் சந்தித்து அந்த வழக்கு சம்பதமான தகல்வல்கள் அடங்கிய தொகுப்பை கொடுக்க பார்க் வருகிறார்.
அங்கிருக்கும் படகை கட்டும் முனை மேல் அமர்ந்து இன்னும்  ஷோம்ஸ்  வரவில்லையே என்று கூறும் போது அந்த முனை பேசுகிறது.
அதனை கண்டு அதிர்ச்சி அடையும் அவர் அது நமது ஷோம்ஸ் தான் என தெரிந்து அமைதி ஆகிறார்.பின்பு அவரிடம் தொகுப்பை கொடுத்துவிட்டு செல்கிறார்.






பின் வாஸ்டனிடம் காணாமல் போன பிணங்களின் உறவினர்களிடம் விசாரிக்கசொல்லிவிட்டு நூலகம் சென்று இந்தியா ஒரு புதிரான பூமி(ஆம் அது தான் அவர் படிக்கும் புத்தகத்தின் பெயர்) படிக்கிறார்.

இதற்கிடையில் மேலும் மூன்று பிணங்கள் பிணவறையில் இருந்து தானாக இரவு 12 மணிக்கு முழித்து கொண்டு ஒரு குதிரை வண்டியில் தப்பித்து செல்கிறார்கள்.மறைந்து இருக்கும் போலீசார் அது ஏதோ சாதாரண மனிதர்கள் என நினைத்து சந்தேகபடாமல் விட்டுவிடுகிறார்கள்.

காலையில் மீண்டும் மூன்று பிணங்கள் காணாமல் போனதை பற்றி படிக்கிறார்.அப்பொழுது வாஸ்டனும் காணாமல் போன பிணங்களின் உறவினர்கள் அனைவரும் மறைந்து  போனதாக கூறுகிறார். இதனால் ஷோம்ஸ் சந்தேகப்பட்டு காணாமல் போன அனைவருக்கும் ஏதோ ஒரு ஒற்றுமை இருக்கவேண்டும் என கூறி அதனை கண்டுபிடிக்கும் பொறுப்பை வாஸ்டனிடம் ஒப்படைகிறார்.பின் பிணவறை ஆராய்வதற்காக செல்கிறார்.

பிணவறையை ஆராய்ந்து ஒன்றும் கிடைக்காமல் வெளியே வரும் போது இருவர் பேசிகொள்வதை கண்டு ஒரு செம்மறி ஆடாக மாறி கவனிக்கிறார்.
ஒரு பெண்ணும் ஒரு கிழவனும் பேசிகொள்கிரார்கள் கையில் ஒரு கடிதம் வைத்திருக்கிறார் அந்த கிழவன்.அது பறந்து வந்து நம்ம ஆடுகிட்ட வருது.அதனை தனது வாயில் கவ்விக்கொள்கிறது அதனை பறிக வரும் இருவரை பார்த்து முறைகிறது.அப்பொழுது அங்கு வரும் பராமரிப்பாளர் அந்த இருவரிடமும் யார் ஆட்டை கொண்டு வந்தது எனக்கூறி விசாரணை செய்கிறார்.அந்த சமயத்தில் தனது வேஷத்தை கலைத்து விட்டு கடிதத்துடன் தப்பித்துவிடுகிறார் ஷோம்ஸ்.

அக்கடிதத்தில் 

மிஸ்டர் டிரென்ட் நான் சாகவிரும்புகிறேன் உரிய தொகை தந்து விடுகிறேன் இப்படிக்கு மிஸ்டர் தாமஸ் போலந்து என இருக்கிறது.






அதில் இருக்கும் டிரென்ட் என்ற பெயர் எங்கோ கேள்விபட்டிருபதாக நினைத்த ஷோம்ஸ் ஸ்காட்லான்ட் யார்டின் பதிவேடு பராமரிப்பு பிரிவுக்கு சென்று பார்கிறார்.அங்கு அவருக்கு சீப், டாக்டர் சான்டேர்ஸ் என்பவரை அறிமுகம் செய்கிறார்.அவர் தான் பிணங்களை பிரேதப்பரிசோதனை செய்து உறுதிபடிதியதாக கூறுகிறார்.அங்கு பதிவேடுகளில் தேடிய ஷோம்ஸ் க்கு அதிர்ச்சி trend என்ற பெயர் சம்பந்தமான பக்கங்கள் கிழிக்கப்படிருகின்றன.
வெளியே வரும்போது அங்கு வரும் இன்ஸ்பெக்டரிடம் trend பற்றி கேட்கிறார்.அவரிடம் இருந்து trend தண்டனை காலம் முடிவதற்கு முன்பு விஷம் அருந்தி இறந்துவிட்டதை அறிகிறார்.
பின் வாஸ்டனை சந்தித்து விவரங்கள் அறிகிறார்.இறந்த அனைவருக்கு கடன் தொல்லை இருப்பதை கண்டுபிடிக்கிறார்..




பின் மீண்டும் சீப்பை சந்தித்து சாண்டர்ஸ் பற்றி கேட்கிறார் அவர் மிகவும் நம்பத்தகுந்தவர் என அறிகிறார். அவரிடம் விசாரிக்கிறார்.அவர் தான் நன்றாக சோதிததாகவும் அவர்கள் அனைவரும் கண்டிப்பாக இறந்துவிட்டதாகவும் கூறுகிறார்.அங்கிருந்து வெளியில் வரும்போது தான் பார்க்கில் கிழவனுடன் சந்தித்த பெண்ணை கண்டு பக்கத்தில் இருந்த போலீசிடம் விசாரிக்கிறார்.
அவர் தான் டாக்டர் சாண்டேர்சின் சகோதரி என்று அறிகிறார்.

பின் வாஸ்டனிடம் சென்று தான் குற்றவாளியை கண்டுபிடித்து விட்டதாகவும் அதற்கான ஆதாரத்தை கண்டுபிடிக்க அவரை கூடிக்கொண்டு மயானம் சென்று ஒரு சமாதியை தோண்டிபார்கிறார்.





அடுத்து மீண்டும் மூன்று பேர் இறந்து போனதை அறிந்து கண்டுபிடிபதர்காக எலும்புக்கூடு போல வேடம் அணிந்து மயானம்  மறைந்து கொள்கிறார்.

சிறுது நேரத்தில் அங்கு சீப்புடன் வரும் டாக்டர் சாண்டர்ஸ்  பிணங்களை மீண்டும் சோதிபதாக சொல்லி உள்ளே வந்து பிணங்களின் நெற்றியில் யாரும் பார்க்காத வண்ணம் ஏதோ ஒரு திரவத்தை தடவுகிறார்.ஆனால் இதனை மறைந்து இருந்த ஷோம்ஸ் பார்த்துவிடுகிறார்.



இரவு பன்னிரண்டு மணி ஒவ்வொரு பிணங்களாக எளுந்தரித்து வெளியே வருகிறது வழக்கம் போல மறைந்து இருந்த போலிஸ் அவர்களை சந்தேக படவில்லை.அவர்கள் ஒரு குதிரை வண்டியில் ஏறி செல்கிறார்கள்.அவர்களை நமது ஷோம்ஸ் தடுத்து இக்குற்றங்களுகேல்லாம் காரணம் டாக்டர் சாண்டர்ஸ் என்று நிறுபிகிறார்.மற்றும் அவர் தான் எல்லோரும் இறந்துவிட்டதாக கருதும் குற்றவாளி trend என கூறுகிறார்.
தான் அவனது சமாதியை தோண்டி பார்த்ததாகவும் அதனுள் பிணம் எதுவும் இல்லை என்கிற ஆதாரத்தையும் கூறுகிறார்.




அனைவரும் ஒரு கஷாயத்தை குடித்தால் இறந்த பிணம் போல ஆகிவிடுவார்கள் என்றும் பின் ஒரு வித கொழுப்பை அவர்கள் நெற்றியில் தடவினால் பின் எழுந்துவிடுவார்கள் என்று தான் ஒரு புத்தகத்தில் படித்ததை விளக்குகிறார்.இவ்வாறு அவரது முதல் சாகசம் முடிந்தது. 


 உச்சகட்ட காமெடி .


விரைவில் எதிர்பாருங்கள்.


லயன் புக் கிளப் ஒரு பார்வை.



நண்பர்களே இது எனது முதல் தனிப்பதிவு.
எனது பதிவிடும் முறையில் ஏதாவது குறை இருந்தால் கூறுங்கள் திருத்திக்கொள்கிறேன்.கதை சொல்லும் விதத்தில் ஏதேனும் மாற்றம் தேவையா என்பதையும் கூறுங்கள்.

அவ்வளவு தான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வெ.

Friday, September 14, 2012

காமிக்ஸ் புதையல் XVI - Rani Comics Collection - Part 1

வணக்கம் நண்பர்களே,

இந்த பதிவில் என்னிடம் உள்ள ராணி காமிக்ஸ்களின் தொகுப்புகளில் முதல் பாகத்தை அளித்துள்ளேன்.
எண்ணிக்கையில் அதிகம் உள்ளதால் பல பாகங்களாக அளிக்க உள்ளேன்

எனக்கு ராணி காமிக்ஸ் மிகவும் பிடித்ததற்கு இரண்டு காரணங்கள்.

1.அதிகமாக அளவில் கிடைத்தது(மாதம் இருமுறை)
2.அதிகமான கடைகளில் கிடைத்தது.

இதற்க்கு முக்கிய காரணம் அப்பொழுது ராணி syndicate வலிமையாக காலூன்றின்தது.
அக்குழுமத்தில் இருந்தது  பலபுத்தகங்கள் வந்தன அதோடு சேர்ந்து இந்த காமிக்ஸும் வந்து விடும்.
மற்றும் விலையும் குறைவாக இருக்கும்.நான் முதலில் வாங்கியபோது விலை இரண்டாக இருந்த்தது. 
















நான் முதல் முதலாக வாங்கியது வில்லாதி வில்லன் என நினைக்கிறன்.
மற்ற புத்தகங்கள் அனைத்தும் பழைய புதகடையில் வாங்கியதே.

பல புத்தகங்களின் முதல் பக்கத்தில் ஸ்ரீ ரங்கா புத்தக கடை என்ற அச்சை பார்க்கலாம்.
உண்மையில் என்னிடம் இருக்கும் 75 சதவீத புத்தகங்கள் அக்கடையில் வாங்கியதே.

பின்பு எனக்கு கல்கி,சாண்டில்யன்,ராஜேஷ்குமார்,சுபா என பலரை அறிமுகம் செய்தது அக்கடையின் உரிமையாளர் ரங்கநாதன் அண்ணாவையே சாரும்.

நமது லயன் குளுமதைவிட எனக்கு பல ஹீரோக்களை அறிமுகம் செய்தது ராணி காமிக்ஸ் தான்.
james bond,முகமூடி வீரர் பில்லி,சாட்டயடி வீரர், டைகர்,ஆசாத்,வெள்ளை விழி,bruce லீ,கிட் கார்சன், மாயாவி,காரத்,ராயன்,பக் ஜோன்ஸ்,தில்லான்,பீமா,விங் கமாண்டர் ஜான்,மாண்ட்ரேக் இப்படி பலர்.

அதற்கு பின் தான் பலர் நமது லயன் குழுமத்தில் வருவதே தெரியும்.
எனக்கு ராணி காமிக்ஸ் ஹீரோகளிலேயே மிகவும் பிடித்தவர்கள் பில்லி,டைகர்,சாட்டை அடி வீரர்.
அதற்க்கு பின் தான் மற்றவர்கள். 
நிறைய கௌபாய் கதைகளும் அதில் வந்துள்ளன.
பாலைவனத்தில் தண்ணீர் தண்ணீர் அருமையான கதை அம்சம் நிறைந்தது.
மின்னல் வீரன் எனக்கு மிகவும் பிடித்த கதை.
கிட் கார்சன் முதலில் அறிமுகமானது கூட இங்கே தான். 

அவ்வளவுதான் நண்பர்களே.மீண்டும் அடுத்த பாகத்தில் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வெ.


பதிவில் இருக்கும் ராணி காமிக்ஸ் பற்றிய ஒரு சிறு முன்னோட்டமே நமது நண்பர் steelclaw அவர்கள் காட்டியது
என்னை மிகவும் கவர்ந்தது.இது எனது பதவிலேயே இணைக்க வேண்டும் என்று தோன்றியது.ஆகையால் கீழே அவரது கருத்து


//

நண்பரே அன்று ராணி காமிக்ஸ் ஜேம்ஸ் பாண்ட்,கௌ பாய் என மாறி மாறி வரும்,கௌ பாய் கதைகள் கலக்கும்,அதுவும் அப்போது ஏனோ ஜேம்ஸ் பாண்ட் பிடிக்கவில்லை .அடுத்து வரும் வெளியீடுகள் அதாவது ஜேம்ஸ் பாண்ட்,கதையின் அடுத்த வெளியீடுகள் தூள் கிளப்பும் ,மாறு பட்ட கதைகள்.அதிலும் நீங்கள் வைத்துள்ள கதைகளில் என்னை பொறுத்தவரை தப்பி ஓடிய இளவரசி அடிக்க வேறு கதைகள் இப்போது வரை கிடையாது,என்பதே எனது எண்ணம்,முதன் முறையாக சிறு வயதில் அறிமுகமான வேற்று நாகரிகம் என வாய் பிளக்க வைத்த எகிப்து அரசர்,மதகுரு உடைகள் ,அந்த ஆற்றின் ஓரம் திருடன்,வேட்டை ஆடும் கெர்ப் ,அழகான இளவரசி என ஒவொரு ஓவியங்களும் ,ஏன் அனைத்து கட்டங்களும் தூள் கிளப்பும்,மீண்டும் ஒரு முறை படித்து பாருங்கள்.மொழி பெயர்ப்பு சற்று தூக்கலாகவே இருக்கும்.நீங்கள் தனி பதிவே இடலாம் ,அவளவு அற்புதமான ,தரமான கதை அது.முக மூடி மாயாவியின் வருகைக்கு பின்பே சொதப்பலான மொழி பெயர்ப்பு என கீழ் நோக்கி சென்றது.அதற்க்கு முன்னர் மொழி பெயர்ப்பு நமது லயனுக்கு இணையே .மரணப்பரிசு,மாறு பட்ட அற்புதமான ராணுவ ரகசியம் சகோதரர்களின் சோக காவியம் ,நான் படித்த முதல் ராணி சுறாவேட்டை,புரூஸ் லீ வரவின் வைரச்சுரங்கம் (அப்போது புரூஸ் லீ யாரென்றே தெரியாது ,எனது தந்தையார் படம் பார்க்க பிறருடன் செல்ல அனுமதிக்க மாட்டார்,யாரிந்த புரூஸ் லீ என எகிற வைக்கும் எதிர் பார்ப்புகள்,நண்பர்களின் ஆஹா ஓகோவென்ற புகழாரம் ) எதிர் பார்ப்பு,பீரங்கி கோட்டை ,விசித்திர விமானம் வியக்க வைக்கும் கண்டு பிடிப்புகளும்,கால பயணம் செய்யும் எகிப்த்திய மம்மியோ சிறுவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்ட உதவின என்றால் மிகை ஆகாது .1 .50 க்கு வந்த கதைகள் அனைத்தும் தரமானவைகளே.லயனில் வந்தால் என ஏங்கியதும் உண்டு.ஆனால் தப்பி ஓடிய இளவரசியோ,பூனைத்தீவோ லயனுக்கு குறைந்ததல்ல.ஆனால் அனைவரை போல லயனில் வந்தால் என ஏங்கியதுண்டு .நமது டெக்ஸ் இன் அற்புதமான பவள சிலை மர்மம் வரும் பொது பூனைத்தீவு வெளியானது,டேவிட் என்பவர் பின்னியிருப்பார்.கொலை வாரன்ட் அந்த கனவு அற்புதம் என .................நமது லயனின் இரும்பு மனிதன் எதிர் பார்ப்பில் வாங்கி சொதப்பிய ராணியின் இரும்பு மனிதன்,அற்புதமான பலி வாங்கும் வெறியுடன் செவிந்தியர்களுடன் சேர்ந்து போராடும் அந்த மரக்கோட்டை ,புதிய அறிமுகம் மர்ம முகமூடி பில்லி ,ஜெயில் கைதி வுருக்கமான குற்றவாளிகளை கொல்லாதே என சகோதர பாசத்தை கண் முன் நிறுத்தும் அட்டகாசமான கதை ,என அற்புதமான கதை பூங்காவில் அதுவும் ஒன்றே,...................அற்புதமான் பொக்கிசங்கள் நண்பரே ,பாது காப்பாக வையுங்கள்.....பூட்டு போடவும்.......,அன்று லயன்(எ)முத்து ,ராணி,அசோக் (எ) மேத்தா இம்மூன்றும் மூவேந்தகள் என்றால் மிகை அல்ல .சேர ,சோழ ,பாண்டியரில் ..............ஆனால் லயன் பாக்கெட் சைசே இவற்றை பின்னுக்கு தள்ளியதுடன் இணை இல்லா ஆர்ச்சி ,வலை மன்னன் ,இரும்பு கை மாயாவி,லாரன்ஸ் ,டேவிட் ,ஜானி நீரோ ,டெக்ஸ் ,முன்னே அனைத்தும் தலை வணங்கி நின்றன ,லயனுக்கு உள்ள யாருக்கும் இல்லா சிறப்பு கோடை மலர்,தீபாவளி மலர் என்பதும் ஒன்று................//

Thursday, September 13, 2012

காமிக்ஸ் புதையல் XV - Mayajaal Stories Collection

வணக்கம் நண்பர்களே,

இந்த பதிவில் நாம் காண போவது பல பதிப்பகத்தில் இருந்து வந்த மாயாஜால கதைகளின் தொகுப்புகளை பற்றி தான்.
சிறு வயதில் என்னை ஒரு கற்பனை உலகத்திற்கு அழைத்து சென்றதில் பெரும் பங்கு இந்த புத்தகங்களுக்கு உண்டு.

ராஜா,ராணி,மந்திரவாதிகள்,ஏழு கடல்,அரக்கர்கள்,குள்ளர்கள்,மின்னல் அம்பு,மந்திரவாதியின் உயிர் அடங்கிய கிளி
அப்பப்பா கேட்கவே சுகமாக உள்ளது.

இப்பொழுது சக்கை போடு போடும் ஹாரி பாட்டருக்கேல்லாம் அரிசுவடி இக்கதைகள் தான்.
அக்கதையில் வரும் வில்லன் வால்டமொடின் உயிர் எல்லோ பொருட்களில் இருக்கும் அதனை கண்டுபிடித்து எப்படி அளிக்கிறான் என்பதை ஏழு புத்தகங்களாக எழுதி அம்மணி பல  கோடிகளை  சம்பாதித்து விட்டார்.

ஆனால் இக்கதைகளை எழுதிய எழுத்தாளர்களின் நிலை என்ன என்று யாருக்கும் தெரியாது.















எத்தனை எழுத்தாளர்கள் யுவராஜா,அணில் அண்ணா,தங்க ராஜா,இன்ப ராணி,வி ஆர் ஜெய லட்சுமி,மாயராஜா,ஜெயகுமார்,பீ கே மூர்த்தி,இன்பராஜா,மனோகரன்,அனுராதா.


அக்காலத்தில் சென்னையில் இருந்தும் மதுரையில் இருந்தும் என பல பதிபகதார்கள்.
அந்த பொற்காலம் மீண்டும் வர எனது மனது ஏங்குகிறது.

எனக்கு தெரிந்து 90 கள் வரை மதுரை கலைபோன்னியில் இருந்து யுவராஜா எழுத பல கதைகள் வந்துள்ளன,

அனைத்து கதைகளும் எனக்கு பிடிக்கும் என்றாலும் மிகவும் பிடித்தது அணில் அண்ணா கதைகள் தான்.
அவர் அறிமுகபடுத்திய வீர பிரதாபன் எனக்கு மிகவும் பிடிக்கும்.

அவனுடம் இருக்கும் குள்ளன் தம்பி செய்யும் காமெடிகள்,பிறர் கண்களுக்கு தெரியாத மின்னல் அம்புகள். 2000 வருடங்கள் வாழும் சக்தி,பூலோகத்தில் ஆறு மாதங்கள்,மேலோகத்தில் ஆறுமாதங்கள்.
அருமையாக இருக்கும்.   

கதையின் போக்கும் நாம் அதனுடன் பயணம் செய்வது போல இருக்கும்.
சித்திரங்கள் இல்லாவிட்டாலும் கற்பனையை தூண்டும் விதமாக இருக்கும்.








நண்பர்களே இக்கதைகள் மூலம் உங்களுக்கு கிடைத்த அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வெ.

Tuesday, September 11, 2012

Mugamoodi - A Super Hero??????



வணக்கம் நண்பர்களே,

வேறு வழியே இல்லாமல் முகமூடி திரைப்படம் நானும் பார்த்துவிட்டேன்.
இருந்தாலும் மிகவும் நான் எதிர்பார்த்த படம் அதுவும் ஒரு காமிக்ஸ் ரசிகர் எடுத்த படம் இவ்வளவு மொக்கையாக ஆனது வருத்தமே.

கதை.

ஆரம்பம் ஒரு படு மொக்கை.
ஒரு வீட்டில் கொள்ளை நடக்கிறது.வில்லன் எலும்புக்கூடு முகமூடி அணிந்து வீட்டில் இருக்கும் ஒரு வயதான பாட்டியை ஓடி வந்து சுத்தியில் அடித்து கொள்கிறார்.
ஒரு பாட்டியை எதுக்குப இப்படி கொல்லனும் விட்டுருந்தா அடுத்தநாள் அதுவே செத்து போயிருக்கும்.
அப்படி ஒரு பயங்கர வில்லனாம்.

இவரை பிடிக்க சிறப்பு அதிகாரி நாசர் வருகிறார்.(பாவம்)

ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஹீரோ ஜீவா.அன்பான அம்மா,எப்பொழுதும் திட்டும் அப்பா,
வீட்டின் மாடியில் அவரது தாத்தா வழக்கம் போல அவருக்கு வழிகாட்டி.
மற்றும் ஒரு தாத்தா மாடியில் இருக்கிறார் அவர் துணிகள் மூலம் பொம்மைகள் செய்பவர்.
இப்பொழுதே தெரிந்து கொள்ளலாம் இவர் தான் நம்ம முகமூடிக்கு உடை தெய்த்து தரபோகிறார்.

நமது ஹீரோ ஒரு குங்க்பூ பிரியராம்.
அவரது ஆசிரியர் செல்வா.அவர் எல்லாரிடமும் காசு வாங்காமல் குங்க்பூ சொல்லி தருவாராம்.
அதுனால அவர் பரம ஏழையாம்.ஒரு பாடாவதி வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியலேன்னு வீடு ஓனர் வேற மிரடுராரம்.

அப்பா இப்பவே முடியல பேசாம அப்பொழுதே எழுந்து வந்திருக்க வேண்டும் விதி என்ன செய்வது 500 செலவு செய்தாகிவிட்டது முழுவதும் பார்த்துவிட்டு தான் வந்தேன்.
  
நம்ம ஏழை ஆசிரியருக்கு ஆள்  தெரடுகிறாராம்  எப்படி ஒரு மீன் மார்கெட் பொய் அங்க மீன் விகிரவங்க கூட சண்ட போட்டு அவங்கள 1000 கொடுத்து கத்துக்க சொல்கிறார்.
அப்ப நம்ம ஹீரோயின் intro வேற.

வழக்கம் போல நம்ம ஹீரோ விற்கு  ஹீரோயின்  மேல காதல் வர.
அவரை கவுக்க முகமூடி அணிந்து சென்று இதய பலூன் விடுகிறாராம்.
இதனை பார்த்த உடனே நம்ம ஹீரோயின் காதல் வய படுகிறார்.

இடை பட்ட சமயத்தில் நம்ம ஹீரோ வில்லன் களின் மற்றொரு கொள்ளையின் நடுவில் மாட்டிக்கொண்டு வில்லன்களில்  ஒருவரை போலீசிடம் மாட்டிவிடுகிறார்.

ஆகையால் நம்ம வில்லன் நம்ம ஹீரோவை ஒரு கொலை கேசில் மாட்டிவிட்டு ஒரு குற்றவாளி ஆக்குகிறான்.
இதில் இருந்து நம்ம ஹீரோ தப்பித்து வில்லனை கொன்று நம்ம ஹீரோயின் காதலை எப்படி அடைகிறார் என்பதே மீதிகதை.

இடையில் ஒரு பிளாஷ் பாக் வேற நம்ம செல்வாவும் வில்லன் நரேனும் ஒரே ஆசிரியரிடம் குங்க்பூ கற்றுக்கொண்டார்கலாம்.

இறுதிகாட்சியில் நம்ம ஹீரோ சாய்க்கும் வில்லன்கள் எண்ணிகையை விட அவரது ஷெர்லோக் தாத்தா அடித்துபோடும் ஆட்கள் அதிகம்.(என்ன கொடுமை சார் இது)   

பாடல்கள் எதுவுமே எனக்கு பிடிக்கவில்லை.
நம்ம மிஸ்கினிடம் இருந்து இப்படி ஒரு திரைப்படம் எதிர்பார்கவில்லை.

எனது எண்ணங்கள்:
ஒரு சூப்பர் ஹீரோ படம் என்றால் ஒரு அழுத்தமான வில்லன் வேண்டும்.
ஆனால் இங்கு சாதாரண நகை கொள்ளையடிக்கும் வில்லன்.
அதுவும் அவரால் வயதானவர்கள் மட்டுமே கொல்லபடுகிறார்கள்.
இது ஒரு மிக பெரிய மைனஸ்.

காதல் காட்சிகள் எதுவுமே அழுத்தமாக இல்லை.
அவருக்கு ஏன் முகமூடி மேல் காதல் வருகிறது என்பதற்கு ஒரு அழுத்தமான காரணம் இல்லை.

இறுதியில் நம்ம ஹீரோ முகமூடி அணிவதற்கு நல்ல காரணம் இல்லை.
சும்மா ஹீரோயினிடம் முகம் காட்டக்கூடாது என்றால் அவரை வெளிபடுதிக்கொள்ளாமலே வேறு ஏதாவது செய்திருக்கலாம்.

சண்டை காட்சிகள் சில நன்றாக இருந்தாலும் அவை வீணாக்க பட்டிருகின்றன.

நான் எதிர்பார்க்கும் மாற்றங்கள்:

ஹீரோ தனது குங்க்பூ திறமையை வெளிபடுத்த ஒரு நல்ல அறிமுக காட்சி வைத்திருக்கலாம்.
ஒரு மொக்கையான மீன் மார்கெட் சண்டைக்கு பதில்,அவரது நல்ல மனதை காண்பிக்க எதாவது ஒரு கடத்தல் அல்லது ஒரு விபத்து அதில் இருந்து அவர் காப்பாற்றுகிறார்.
(க்ரிஷ் படத்தில் வரும் சர்கஸ் தீ விபத்து போல)

அடுத்து நம்ம வில்லன் சாதாரண நகை கொள்ளையனாக இல்லாமல் வேறு பெரிதாக ஏதாவது வைத்திருக்கலாம்.
பல தொடர்பே இல்லாத பல குற்றங்களை இறுதில் ஒன்றாக்கி ஒரு suspense வைத்து வேறு ஏதாவது பெரிய காரணம் சொல்லி இருக்கலாம்.

ஹீரோ ஹீரோயின் காதலை இன்னும் சற்று நல்ல காட்சி அமைப்புடன் கூறி இருக்கலாம்.

பார்க்கலாம் இந்த மாற்றங்களை தனது இரண்டாம் பாகத்தில் கொண்டு வருவாரா என்று.

அவ்வளவு தான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வெ.

Thursday, September 6, 2012

காமிக்ஸ் புதையல் XIV - Parvathi Chithira Kathai - Vandumama


வணக்கம் நண்பர்களே,

இந்த பதிவில் நான் என்னிடம் இருக்கும் பார்வதி சித்திர கதைகளின் தொகுப்பை அளித்துள்ளேன்.
அனைத்து கதைகளுமே அருமையாக இருக்கும்.
என்னை மிகவும் கவர்ந்த வாண்டுமாமா அவர்களின் கதைகள்.
எதனை முறை படித்தாலும் திகட்டாது.
எனது கருத்தை நீங்கள் அனைவரும் ஒத்துக்கொள்வீர்கள் என நினைக்கிறன்.


நான் இந்த முறை ஊரிற்கு சென்று புகைப்படம் எடுத்த போது எனக்கு ஒரு அதிர்ச்சி காத்து இருந்தது.
பலே பாலுவும் பாட்டில் பூதமும்,கனவா நிஜமா கழுகு மனிதன் ஜடாயு மற்றும் டயல் 100 ஆகிய புத்தகங்களை காணவில்லை.
எங்கே சென்றது என்றும் தெரியவில்லை.கனத்த இதயத்தோடு மீதம் புத்தகங்களை புகைப்படம் எடுத்து வந்தேன். 

1.பவளத் தீவு 
2.ஓநாய் கோட்டை
3.மூன்று மந்திரவாதிகள்
4.சிலையை தேடி
5.நந்து சுந்து மந்து
6.அறிவின் விலை ஒரு கோடி
7.பலே பாலு
8.சிறுத்தை சிறுவன்
9.பலே பாலுவும் பாட்டில் பூதமும்
10.வீர விஜயன்
11.பூதத் தீவு
12.குஷிவாலி ஹரிஷ்
13.வீராதி வீரன்
14.திகில் தோட்டம்
15.சர்கஸ் சங்கர் 

மற்றும் இடையில் கனவா நிஜமா மற்றும் டயல் 100 வேறு வரும்.
அனைத்துமே வாண்டுமாமாவின் பொக்கிஷங்கள்.

பவளத் தீவு,ஓநாய் கோட்டை,மூன்று மந்திரவாதிகள்,வீர விஜயன்,பூதத் தீவு ஆகிய 5 புத்தகங்களும் மாயாஜாலங்கள் நிறைந்த  ராஜா  ராணி கதைகள்.

சிலையை தேடி,சிறுத்தை சிறுவன்,வீராதி வீரன் மூன்றும் சிறுவர்கள் செய்யும் சாகசக் கதைகள்.என்னை மிகவும் கவர்ந்த கதைகள்.

அறிவின் விலை ஒரு கோடி - கௌசிகன் பெயரில் அவர் எழுதிய சமூகக் கதை.

பலே பாலு,பலே பாலுவும் பாட்டில் பூதமும்,குஷிவாலி ஹரிஷ்,சர்கஸ் சங்கர் இவை அனைத்தும் சிறுவர் செய்யும் குறும்புக் கதைகள்.

இவை தவிர அவர் பூந்தளிரில் எழுதிய பலே பாலுவும் பறக்கும் டிராயரும்,தருமு வளர்த்த தவளை,மல்லன் மாரப்பன் ஆகிய கதைகள் என்னை மிகவும் ஈர்த்தவை.











நான் மிகவும் ரசித்த நந்து சுந்து மந்து நான் முன்பு ஒருமுறை படித்ததற்கு பிறகு படிக்க முடியாமல் போனது.நான் அந்த கதைக்காக மிகவும் ஏங்குகிறேன்.

டயல் 100 அருமையான துப்பறியும் கதைகள் நிறைந்தவை. 

பின் இறுதியில் பூந்தளிரில் வந்த சிறு கதைகளின்  தொகுப்புகளை வெளியிட ஆரம்பித்தனர்.வாண்டுமாமா வின்  புகழை பயன்படுத்தி பாண்டுமாமாவின் கதை வேறு வந்தது.

இவை தவிர சமதுச் சாரு,அழுக்கு  அண்ணாசாமி  போன்ற கதாபாத்திரங்களையும் அவர் அறிமுகபடுதியுள்ளார்.

நண்பர்களே இனி வரும் நாட்களில் இக்கதைகளின் தனி பதிவுகளையும் மற்றும் பூந்தளிர் புத்தகங்களின் தனிபதிவுகளையும் இட இருக்கிறேன்.
என்னுடன் சேர்ந்து உங்களையும் ஒரு கற்பனை உலகத்திற்கு அழைத்துச் செல்ல உள்ளேன்.

அடுத்தபதிவில் உங்களை எல்லாம் ஒரு மாய உலகதிக்கு அழைத்து செல்ல போகிறேன் நண்பர்களே.

அவ்வளவு தான் நண்பர்களே.

மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வெ

Tuesday, September 4, 2012

காமிக்ஸ் புதையல் XIII - Indrajaal Comics Collection

வணக்கம் நண்பர்களே,

ஒரு வழியாக ஊருக்கு சென்று வந்து விட்டேன்.
எனது தங்கையின் கல்யாணம் இருந்ததால் நேர குறைவு காரணமாக ஒரு சில புகைப்படங்கள் மட்டுமே கொண்டு வந்துள்ளேன்.

எனது முதல் come back பதிவு இந்த்ரஜால் காமிக்ஸ் தொகுப்பு.
என்னிடம் மொத்தம் 11 புத்தகங்களே உள்ளன.

கதைகள் எனக்கு நினைவு இல்லை.
வேதளரின் பேய் குலம் மட்டும் நினைவு இருக்கிறது.
ஒரு போலி வேதளரின் பிடியில் இருந்து எப்படி காப்பாற்றுகிறார் என்பதே கதை.
இதில் அவரது குதிரையின் பெயர் கேசரி.

ஆனால் படங்கள் கலரில் அருமையாக இருக்கும்.








அடக்குவாரற மந்தையும் நன்றாக இருக்கும்.
இந்த புத்தகங்களை பற்றி என்னுடைய பொதுவான கருத்து இதன் மொழிபெயர்ப்பின் தரம் மிக குறைவே.


இக்கதைகளை பற்றி உங்களது கருத்தையும் கூறுங்கள் நண்பரே.

அவ்வளவு தான் நண்பர்களே.
மீண்டும் விரைவில் சந்திப்போம்.

கிருஷ்ணா வ வெ.