வணக்கம் நண்பர்களே,
இந்த பதிவில் என்னிடம் உள்ள ராணி காமிக்ஸ்களின் தொகுப்புகளில் முதல் பாகத்தை அளித்துள்ளேன்.
எண்ணிக்கையில் அதிகம் உள்ளதால் பல பாகங்களாக அளிக்க உள்ளேன்
எனக்கு ராணி காமிக்ஸ் மிகவும் பிடித்ததற்கு இரண்டு காரணங்கள்.
1.அதிகமாக அளவில் கிடைத்தது(மாதம் இருமுறை)
2.அதிகமான கடைகளில் கிடைத்தது.
இதற்க்கு முக்கிய காரணம் அப்பொழுது ராணி syndicate வலிமையாக காலூன்றின்தது.
அக்குழுமத்தில் இருந்தது
பலபுத்தகங்கள் வந்தன அதோடு சேர்ந்து இந்த காமிக்ஸும் வந்து விடும்.
மற்றும் விலையும் குறைவாக இருக்கும்.நான் முதலில் வாங்கியபோது விலை இரண்டாக இருந்த்தது.
நான் முதல் முதலாக வாங்கியது வில்லாதி வில்லன் என நினைக்கிறன்.
மற்ற புத்தகங்கள் அனைத்தும் பழைய புதகடையில் வாங்கியதே.
பல புத்தகங்களின் முதல் பக்கத்தில் ஸ்ரீ ரங்கா புத்தக கடை என்ற அச்சை பார்க்கலாம்.
உண்மையில் என்னிடம் இருக்கும் 75 சதவீத புத்தகங்கள் அக்கடையில் வாங்கியதே.
பின்பு எனக்கு கல்கி,சாண்டில்யன்,ராஜேஷ்குமார்,சுபா என பலரை அறிமுகம் செய்தது அக்கடையின் உரிமையாளர் ரங்கநாதன் அண்ணாவையே சாரும்.
நமது லயன் குளுமதைவிட எனக்கு பல ஹீரோக்களை அறிமுகம் செய்தது ராணி காமிக்ஸ் தான்.
james bond,முகமூடி வீரர் பில்லி,சாட்டயடி வீரர், டைகர்,ஆசாத்,வெள்ளை விழி,bruce லீ,கிட் கார்சன், மாயாவி,காரத்,ராயன்,பக் ஜோன்ஸ்,தில்லான்,பீமா,விங் கமாண்டர் ஜான்,மாண்ட்ரேக் இப்படி பலர்.
அதற்கு பின் தான் பலர் நமது லயன் குழுமத்தில் வருவதே தெரியும்.
எனக்கு ராணி காமிக்ஸ் ஹீரோகளிலேயே மிகவும் பிடித்தவர்கள் பில்லி,டைகர்,சாட்டை அடி வீரர்.
அதற்க்கு பின் தான் மற்றவர்கள்.
நிறைய கௌபாய் கதைகளும் அதில் வந்துள்ளன.
பாலைவனத்தில் தண்ணீர் தண்ணீர் அருமையான கதை அம்சம் நிறைந்தது.
மின்னல் வீரன் எனக்கு மிகவும் பிடித்த கதை.
கிட் கார்சன் முதலில் அறிமுகமானது கூட இங்கே தான்.
அவ்வளவுதான் நண்பர்களே.மீண்டும் அடுத்த பாகத்தில் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வெ.
பதிவில் இருக்கும் ராணி காமிக்ஸ் பற்றிய ஒரு சிறு முன்னோட்டமே நமது நண்பர் steelclaw அவர்கள் காட்டியது
என்னை மிகவும் கவர்ந்தது.இது எனது பதவிலேயே இணைக்க வேண்டும் என்று தோன்றியது.ஆகையால் கீழே அவரது கருத்து
//
நண்பரே அன்று ராணி காமிக்ஸ் ஜேம்ஸ் பாண்ட்,கௌ பாய் என மாறி மாறி வரும்,கௌ பாய் கதைகள் கலக்கும்,அதுவும் அப்போது ஏனோ ஜேம்ஸ் பாண்ட் பிடிக்கவில்லை .அடுத்து வரும் வெளியீடுகள் அதாவது ஜேம்ஸ் பாண்ட்,கதையின் அடுத்த வெளியீடுகள் தூள் கிளப்பும் ,மாறு பட்ட கதைகள்.அதிலும் நீங்கள் வைத்துள்ள கதைகளில் என்னை பொறுத்தவரை தப்பி ஓடிய இளவரசி அடிக்க வேறு கதைகள் இப்போது வரை கிடையாது,என்பதே எனது எண்ணம்,முதன் முறையாக சிறு வயதில் அறிமுகமான வேற்று நாகரிகம் என வாய் பிளக்க வைத்த எகிப்து அரசர்,மதகுரு உடைகள் ,அந்த ஆற்றின் ஓரம் திருடன்,வேட்டை ஆடும் கெர்ப் ,அழகான இளவரசி என ஒவொரு ஓவியங்களும் ,ஏன் அனைத்து கட்டங்களும் தூள் கிளப்பும்,மீண்டும் ஒரு முறை படித்து பாருங்கள்.மொழி பெயர்ப்பு சற்று தூக்கலாகவே இருக்கும்.நீங்கள் தனி பதிவே இடலாம் ,அவளவு அற்புதமான ,தரமான கதை அது.முக மூடி மாயாவியின் வருகைக்கு பின்பே சொதப்பலான மொழி பெயர்ப்பு என கீழ் நோக்கி சென்றது.அதற்க்கு முன்னர் மொழி பெயர்ப்பு நமது லயனுக்கு இணையே .மரணப்பரிசு,மாறு பட்ட அற்புதமான ராணுவ ரகசியம் சகோதரர்களின் சோக காவியம் ,நான் படித்த முதல் ராணி சுறாவேட்டை,புரூஸ் லீ வரவின் வைரச்சுரங்கம் (அப்போது புரூஸ் லீ யாரென்றே தெரியாது ,எனது தந்தையார் படம் பார்க்க பிறருடன் செல்ல அனுமதிக்க மாட்டார்,யாரிந்த புரூஸ் லீ என எகிற வைக்கும் எதிர் பார்ப்புகள்,நண்பர்களின் ஆஹா ஓகோவென்ற புகழாரம் ) எதிர் பார்ப்பு,பீரங்கி கோட்டை ,விசித்திர விமானம் வியக்க வைக்கும் கண்டு பிடிப்புகளும்,கால பயணம் செய்யும் எகிப்த்திய மம்மியோ சிறுவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்ட உதவின என்றால் மிகை ஆகாது .1 .50 க்கு வந்த கதைகள் அனைத்தும் தரமானவைகளே.லயனில் வந்தால் என ஏங்கியதும் உண்டு.ஆனால் தப்பி ஓடிய இளவரசியோ,பூனைத்தீவோ லயனுக்கு குறைந்ததல்ல.ஆனால் அனைவரை போல லயனில் வந்தால் என ஏங்கியதுண்டு .நமது டெக்ஸ் இன் அற்புதமான பவள சிலை மர்மம் வரும் பொது பூனைத்தீவு வெளியானது,டேவிட் என்பவர் பின்னியிருப்பார்.கொலை வாரன்ட் அந்த கனவு அற்புதம் என .................நமது லயனின் இரும்பு மனிதன் எதிர் பார்ப்பில் வாங்கி சொதப்பிய ராணியின் இரும்பு மனிதன்,அற்புதமான பலி வாங்கும் வெறியுடன் செவிந்தியர்களுடன் சேர்ந்து போராடும் அந்த மரக்கோட்டை ,புதிய அறிமுகம் மர்ம முகமூடி பில்லி ,ஜெயில் கைதி வுருக்கமான குற்றவாளிகளை கொல்லாதே என சகோதர பாசத்தை கண் முன் நிறுத்தும் அட்டகாசமான கதை ,என அற்புதமான கதை பூங்காவில் அதுவும் ஒன்றே,...................அற்புதமான் பொக்கிசங்கள் நண்பரே ,பாது காப்பாக வையுங்கள்.....பூட்டு போடவும்.......,அன்று லயன்(எ)முத்து ,ராணி,அசோக் (எ) மேத்தா இம்மூன்றும் மூவேந்தகள் என்றால் மிகை அல்ல .சேர ,சோழ ,பாண்டியரில் ..............ஆனால் லயன் பாக்கெட் சைசே இவற்றை பின்னுக்கு தள்ளியதுடன் இணை இல்லா ஆர்ச்சி ,வலை மன்னன் ,இரும்பு கை மாயாவி,லாரன்ஸ் ,டேவிட் ,ஜானி நீரோ ,டெக்ஸ் ,முன்னே அனைத்தும் தலை வணங்கி நின்றன ,லயனுக்கு உள்ள யாருக்கும் இல்லா சிறப்பு கோடை மலர்,தீபாவளி மலர் என்பதும் ஒன்று................//
இந்தப் புத்தகங்களின் அட்டைகள் என் பால்ய வயதை மீண்டும் தினைவுகூற வைக்கின்றன. பல அருமையான கதைகள் வந்திருந்தாலும், மட்டமான மொழிபெயர்ப்பினால் பிற்காலத்தில் எனக்கு ஏனோ பிடிக்காமல் போய்விட்டது. 'அடடா! இக்கதைகள் நம்ம லயனில் வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்' என்று பல முறை வருத்தப் பட்டிருக்கிறேன்.
ReplyDeleteஎனக்கு அத்தனையும் வேண்டும்
Deleteவருகைக்கும், பதிவிற்கும் நன்றி நண்பரே!
ReplyDelete(உங்க வேலையை மிச்சப்படுத்திட்டேன். ஹிஹி!)
உண்மையில் எனக்கு அதன் மோசமான மொழிபெயர்ப்பு நமது சௌந்தரின் வேதாளர் பதிவை பார்க்கும் வரை வித்தியாசம் தெரியவில்லை.
Deleteஆகையால் எனக்கு அது பிடித்திருந்தது,
மற்றும் நான் பதிவில் கூறியது போல டைகர் போன்ற ஹீரோக்கள் லயனில் வராதது வருத்தமே.
எப்படி //வருகைக்கும், பதிவிற்கும் நன்றி நண்பரே!// தவிர்த்துவிட்டோம் அல்லவா.
நண்பரே அன்று ராணி காமிக்ஸ் ஜேம்ஸ் பாண்ட்,கௌ பாய் என மாறி மாறி வரும்,கௌ பாய் கதைகள் கலக்கும்,அதுவும் அப்போது ஏனோ ஜேம்ஸ் பாண்ட் பிடிக்கவில்லை .அடுத்து வரும் வெளியீடுகள் அதாவது ஜேம்ஸ் பாண்ட்,கதையின் அடுத்த வெளியீடுகள் தூள் கிளப்பும் ,மாறு பட்ட கதைகள்.அதிலும் நீங்கள் வைத்துள்ள கதைகளில் என்னை பொறுத்தவரை தப்பி ஓடிய இளவரசி அடிக்க வேறு கதைகள் இப்போது வரை கிடையாது,என்பதே எனது எண்ணம்,முதன் முறையாக சிறு வயதில் அறிமுகமான வேற்று நாகரிகம் என வாய் பிளக்க வைத்த எகிப்து அரசர்,மதகுரு உடைகள் ,அந்த ஆற்றின் ஓரம் திருடன்,வேட்டை ஆடும் கெர்ப் ,அழகான இளவரசி என ஒவொரு ஓவியங்களும் ,ஏன் அனைத்து கட்டங்களும் தூள் கிளப்பும்,மீண்டும் ஒரு முறை படித்து பாருங்கள்.மொழி பெயர்ப்பு சற்று தூக்கலாகவே இருக்கும்.நீங்கள் தனி பதிவே இடலாம் ,அவளவு அற்புதமான ,தரமான கதை அது.முக மூடி மாயாவியின் வருகைக்கு பின்பே சொதப்பலான மொழி பெயர்ப்பு என கீழ் நோக்கி சென்றது.அதற்க்கு முன்னர் மொழி பெயர்ப்பு நமது லயனுக்கு இணையே .மரணப்பரிசு,மாறு பட்ட அற்புதமான ராணுவ ரகசியம் சகோதரர்களின் சோக காவியம் ,நான் படித்த முதல் ராணி சுறாவேட்டை,புரூஸ் லீ வரவின் வைரச்சுரங்கம் (அப்போது புரூஸ் லீ யாரென்றே தெரியாது ,எனது தந்தையார் படம் பார்க்க பிறருடன் செல்ல அனுமதிக்க மாட்டார்,யாரிந்த புரூஸ் லீ என எகிற வைக்கும் எதிர் பார்ப்புகள்,நண்பர்களின் ஆஹா ஓகோவென்ற புகழாரம் ) எதிர் பார்ப்பு,பீரங்கி கோட்டை ,விசித்திர விமானம் வியக்க வைக்கும் கண்டு பிடிப்புகளும்,கால பயணம் செய்யும் எகிப்த்திய மம்மியோ சிறுவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்ட உதவின என்றால் மிகை ஆகாது .1 .50 க்கு வந்த கதைகள் அனைத்தும் தரமானவைகளே.லயனில் வந்தால் என ஏங்கியதும் உண்டு.ஆனால் தப்பி ஓடிய இளவரசியோ,பூனைத்தீவோ லயனுக்கு குறைந்ததல்ல.ஆனால் அனைவரை போல லயனில் வந்தால் என ஏங்கியதுண்டு .நமது டெக்ஸ் இன் அற்புதமான பவள சிலை மர்மம் வரும் பொது பூனைத்தீவு வெளியானது,டேவிட் என்பவர் பின்னியிருப்பார்.கொலை வாரன்ட் அந்த கனவு அற்புதம் என .................நமது லயனின் இரும்பு மனிதன் எதிர் பார்ப்பில் வாங்கி சொதப்பிய ராணியின் இரும்பு மனிதன்,அற்புதமான பலி வாங்கும் வெறியுடன் செவிந்தியர்களுடன் சேர்ந்து போராடும் அந்த மரக்கோட்டை ,புதிய அறிமுகம் மர்ம முகமூடி பில்லி ,ஜெயில் கைதி வுருக்கமான குற்றவாளிகளை கொல்லாதே என சகோதர பாசத்தை கண் முன் நிறுத்தும் அட்டகாசமான கதை ,என அற்புதமான கதை பூங்காவில் அதுவும் ஒன்றே,...................அற்புதமான் பொக்கிசங்கள் நண்பரே ,பாது காப்பாக வையுங்கள்.....பூட்டு போடவும்.......,அன்று லயன்(எ)முத்து ,ராணி,அசோக் (எ) மேத்தா இம்மூன்றும் மூவேந்தகள் என்றால் மிகை அல்ல .சேர ,சோழ ,பாண்டியரில் ..............ஆனால் லயன் பாக்கெட் சைசே இவற்றை பின்னுக்கு தள்ளியதுடன் இணை இல்லா ஆர்ச்சி ,வலை மன்னன் ,இரும்பு கை மாயாவி,லாரன்ஸ் ,டேவிட் ,ஜானி நீரோ ,டெக்ஸ் ,முன்னே அனைத்தும் தலை வணங்கி நின்றன ,லயனுக்கு உள்ள யாருக்கும் இல்லா சிறப்பு கோடை மலர்,தீபாவளி மலர் என்பதும் ஒன்று................
ReplyDeleteஎனது நினைவுகளை பிழிந்து விட்டது இந்த தங்களது பதிவு என்றால் மிகை அல்ல ....,
உங்களது பின்னுடம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
Deleteஉண்மையில் நான் பதிவ்டுவது இது போல நண்பர்களின் நினைவுகளை தூண்டவே.
அனைத்து புத்தகங்களுக்கு ஒரு trailer காட்டிவிட்டீர்கள்.
அப்பா ஒரு பதிவே இட்டிருக்கலாம்.
நண்பரே இந்த உங்களது பின்னுட்டத்தை எனது பதிவுடன் இணைகபோகிறேன்.
உங்களுக்கு எதாவது மாற்றுக்கருத்து இருந்தால் தெரியபடுத்துங்கள் நீக்கிவிடுகிறேன்.
நன்றி நண்பரே,உங்கள் ஸ்டைலில் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்,நண்பர் பாலாஜி சுந்தர் இன்னும் பட்டய கிளப்புவார் பொறுத்திருங்கள்............
ReplyDeleteஇரண்டு நாட்களாக என்னை திகைப்பில் ஆழ்த்தி விட்டீர்கள்,தங்களது பதிவு நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை என .......................
Deleteமிகவும் மகிழ்ச்சி நண்பரே.
Deleteமிக அழகான பதிவு / கலெக்சன்
ReplyDeleteஹ்ம்ம்ம் கலக்குங்கள் நண்பரே உங்கள் அடுத்த பதிவை எதிர் பார்க்கிறோம் :))
.
நன்றி நண்பரே.
Deleteஉங்களுடைய புத்தகங்களின் ஒரு சிறு முன்னோட்டம் நம்ம பாலாஜி அவர்களின் வலை பூவில் பார்த்தேன்.
மேலும் உங்களிடம் இருந்து எதிர்பார்கிறேன்.
உங்களின் கலெக்ஷன் மற்றும் ஸ்டீல் கிளாவின் பின்னூட்டமும் நம்மை மறுபடியும் சிறுவயதிற்கு கொண்டு செல்லும் கால இயந்திரங்கள் என்றால் மிகை ஆகாது.
ReplyDeleteஎன்னிடம் இருந்த ஒரு சில ராணி காமிக்ஸ்களும் தற்போது என்னிடம் இல்லை. ராணி காமிக்ஸ்ல் மட்டுமே வந்த ஹீரோ டைகர் அவர்களின் பஞ்ச் டயலாக்கான டொட்டடொய்ங் கை மறக்க முடியுமா? பழைய நினைவுகளை கிளறி விட்டு விட்டடீர்கள்.
அருமை இப்படிப் படங்களைப் போட்டு என் போன்ற காமிக்ஸ் வெறியர்களின் வயித்த்தெரிச்சலை ஏனய்யா வளர்கிறீர்? உண்மையிலே பழைய பால்ய நினைவுகள் வட்டமிட்டு பறக்கின்றன.
ReplyDelete@COMICPRIYAN & MANI
ReplyDeleteஉண்மையில் நான் வலை பூ ஆரபிததன் பயன் இன்று தான் அடைந்தேன்.
நான் ஆரம்பித்தான் காரணம் இது போல நண்பர்களது நினைவை தூண்டவே.
இன்று அது நடந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
சூப்பரான பதிவு. நான் ஏற்கெனவே சொன்னதுதான். ஒவ்வொரு முறையும் வீடு மாற்றும் போது, எனது புத்தக மூட்டைகளை தூக்கிக் கொண்டு வீடு மாறுவது என்பது சிரமத்திலும் சிரமமான விஷயம். இதை சரியாக விளக்க வேண்டும் என்றால், இரண்டு நாடுகளுக்கு நடுவே நடக்கும் தீவிரமான போர்க்களத்தின் நடுவே சிவிலியன் ஒருவன் தன் மூட்டைகளை தூக்கிக் கொண்டு இரு தரப்புக்க்கு நடுவே சென்ற கதைதான். Caught in between the crossfire.
ReplyDeleteஒவ்வொரு முறை வீடு மாறும் போதும், உனது குப்பையை ஒழி என்று அனைவரும் கையை நீட்டுவது என்னை நோக்கியே. அது போன்ற ஒரு சந்தர்ப்பத்தில், சூழ்நிலையின் கடுமையினால் பெரும்பலான ராணி காமிக்ஸ்களை எடைக்கு போட்டுவிட்டேன். இன்று உங்களது பதிவை பார்க்கும் போது, எனது செயலுக்கு மனம் வருந்துகிறேன்.
ராணி காமிக்ஸில் செவ்வாய் கிரகத்திற்கு போகும் ஒரு ராக்கெட்டில் இந்திரஜித் (என்று நினைக்கின்றேன்) என்ற ஒருவரின் கதை வெளிவந்தது. அந்த புத்தகம் விஞ்ஞான புதினம் என்பதால் எனக்கு மிகவும் பிடித்த புத்தகம். அது உங்களிடம் இருக்கின்றதா?.
உங்களது இந்த பதிவை பார்க்கும் போது, எனது பழைய நினைவுகள் சிறகுகளை சிலுப்பிக் கொண்டு உயர உயர பறக்க ஆரம்பித்துவிட்டது.
”எண்ணப் பறவை சிறகடித்து விண்ணில் பறக்கின்றதா...
உன் இமைகளிலே உறக்கம்வர கண்கள் மறுக்கின்றதா...”
ஸ்டீல் க்ளா ஒரு பதிவை போட்டு எனக்கும் ஒரு இன்விடேஷன் வைத்திருக்கிறார். மேலேயுள்ள பாடல் வரிகள் அவருக்காகவே.
பதிவு போடும் அளவுக்கு மேட்டர் இருந்தும் பதிவிடாமல், கமெண்ட்டுகளாக இட்டுக்கொண்டிருக்கிறார். எல்லாக் கூடும் எல்லாருக்கும் சொந்தம் என்ற சித்தாந்தத்தை எனக்கு அறிமுகம் செய்தார். அவருடைய பின்னூட்டத்தில் ராணி காமிக்ஸ் பற்றிய தகவல்கள் நிறைந்திருக்கிறது. அவருடைய பின்னூட்டத்தை பிரதான பதிவில் சேர்த்தது நல்ல ஒரு சிறப்பான செயல்.
பல பின்னூட்டங்களில் கவித்தனத்தை தூவியிருக்கின்றார். அது போன்ற பின்னூட்டங்களை பார்க்கும் போது இவரை குயிலுக்கு ஒப்பிடத் தோன்றுகிறது. குயிலுக்கும் எல்லா கூடும் அதன் கூடே. உண்மையில் பார்க்கப் போனால், பதிவுகளை தயாரித்தால், பின்னூட்டம் போட முடியாது. பின்னூட்டம் போட ஆரம்பித்தால் பதிவுகளை தயாரிக்க முடியாது. என்னைப் பொருத்தவரை பின்னூட்டத்திற்கும், பதிவிற்கும் தேவைப்படும் நேரம் சரிசமமே.
பதிவிற்கு வாழ்த்துக்கள்.
ஏன்தான் எல்லோரும் இப்படி பின்னூட்டதிலேயே பிண்ணி எடுக்கறீங்களோ, எனக்கு ஒரு எளவும் புரியலை!
Deleteதூள் பண்றீங்க பாலாஜி!
என்னமோ போங்க!
நண்பரே அந்த கதை இரும்பு மனிதன்தான் ................மேலும் பதிவிடுபவர்கள் சூரியனென்றால்,பின்னூட்டமிடுபவர்கள் நிலவுதான்.......
Deleteபந்தயத்தில் கலந்து கொள்வதை விட கை தட்டி பாரட்டுவதொன்றும் பெரிய செயல் அல்ல,எனினும் தங்களை போன்றவர்களை உற்ச்சாகபடுத்தும் செயல் அவ்வளவே ......
மேலும் இதில் எனது சுய நலமில்லாமலில்லை ,உங்களை கேட்டு பயன் பெறுகிறோமே .............
Deleteமேலும் நண்பர் கிருஷ்ணாவின் பெருந்தன்மையை கணக்கில் கொள்ளாமல் இருக்க முடியாது,குயில் முட்டையை கூட்டில் சேர்த்துல்லாறே .....
Delete//நண்பர் கிருஷ்ணாவின் பெருந்தன்மையை கணக்கில் கொள்ளாமல் இருக்க முடியாது,குயில் முட்டையை கூட்டில் சேர்த்துல்லாறே .....//
Delete@ ஸ்டீல் க்ளா, குயில் முட்டையை வைப்பது காக்கையின் கூட்டிலால்லவா? நீங்கள் குயில் என்றால் கிருஷ்ணா காக்கை என்றாகிறதே? இந்த கமெண்ட்டைப்பார்த்து கிருஷ்ணா வருத்தப் படப் போகிறார். அடடா... மறந்துவிட்டேன். கிருஷ்ணாவுக்கு வருத்தம் வராது. ஏனென்றால், ஸ்டீல் க்ளா குயில் முட்டை வைத்தது கழுகின் கூட்டில் அல்லவா! அவர்தான் இரவுக் கழுகாயிற்றே!!!!
This comment has been removed by the author.
Delete@ vijay Erode நீங்கள் இங்கே இருந்து கொஞ்சம் என் கூட்டிற்கு ஒரு விசிட் பண்ணுங்கள். ஈரோட்டார் உங்களிடம் ஒரு கேள்வி கேட்டு இருக்கிறார். தயவு செய்து வந்து, கொஞ்சம் பதில் சொல்லுங்கள்.
Delete//கை தட்டி பாரட்டுவதொன்றும் பெரிய செயல் அல்ல,எனினும் தங்களை போன்றவர்களை உற்சாகப்படுத்தும் செயல்//
Delete@ ஸ்டீல் க்ளா, கார்களுக்கு ரேடியல் டயர் போடுவதைப் பற்றி கார் சர்வீஸ் செண்டர் வைத்திருப்பரிடம் விசாரித்த போது போது அவர் தெரிவித்த கருத்து கீழே;
“காருக்கு அல்லாய் வீல் போட்டால் கார் மிகவும் அழகாக இருக்கும், நமது காரில் அல்லாய் வீல் இருக்கிறது என்று பெருமைபட்டுக் கொள்ளலாம். அந்த அழகை நாம்மால் ரசிக்க முடியாது. ஏனென்றால் நாம் வண்டியை ஓட்டிக் கொண்டு இருப்போம்.
அல்லாய் வீலின் அழகை அடுத்த காரில் இருப்பவர்களும், மற்றவர்களும் மட்டுமே ரசிக்க முடியும். அப்படியே நாம் ரசிக்க வேண்டும் என்றால் அடுத்த கார்களிலுள்ள அல்லாய் வீலைப் பார்த்துதான் ரசிக்கவேண்டும், அல்லது நமது வண்டியின் ஸ்டெப்னியை நமது கண்ணுக்கு தெரியும் படி வைத்து வண்டியை ஓட்ட வேண்டும். அப்படி செய்தால் வீடு போய் சேர்வது சந்தேகமே. அதனால் அடுத்தவர்கள் நமது காரின் அல்லாய் டயரை பார்த்து ரசிப்பதற்காகவென்று அவ்வளவு அதிகமாக நாம் பணம் செலவு செய்யவேண்டுமா”
ஒரு பதிவு என்பதே அடுத்தவருக்காகத்தான். ஒரு பதிவு முழுமை பெறுவது, அது கமெண்ட்டுகளை பெறும் போதுதான். ஸ்டீல் க்ளா நிறைய முட்டைகளை வைக்க இறைவன் பலம் தரட்டும்.;-)))
அது காக்கை கூடு அல்ல ,மயிலின் வண்ணக்கூடு ,தாங்கள் கூறியது போல வலிய கழுகின் கூடு .............நான் குயில் என கூறியது விருந்தாளி எனும் கருத்தில்தான்...........நன்றி நண்பர்களே ....
Deleteஎனது வலை பூ இரு நண்பர்களின் பெஸ்ட் கொண்டுவருவதற்கு உதவியது மகிழ்ச்சி அழிகிறது.
Deleteநன்றி பாலாஜி மற்றும் steelclaw
This comment has been removed by the author.
ReplyDeleteநினைவுகளை கிளரும் அட்டைகள்! நன்றி! :)
ReplyDeletehellow guys this is ahmad again. When I met my master Mr.Vijayan sir first time I went sleepless that night. There are no words to praise him for his teachings to me through his words since several years. At no stretch of imagination it could be believed that a person like Vijayan is existed and is god's gift. He is master because I could able to learn the characters from a small boy chewing lalipup and caramal (BHAYANKARA PUDIAN) to the richest character of multimillionior LARGOWINCH. I am relocated from Thirupattur to Bangalore, but still I continue to read all his creativity. I lost childhood curiosity about festivals and other functions everything but whenever I get his books on hand I will be thrilled and remember childhood and virtually become child. I promise I will be there with you till my last breath. INSHA ALLAH. love you PARANI, SRIRAM, KHALEEL AND PRASANNA AND ANNACHI. I am closely watching IRAVUKKAZHU.
ReplyDeletehellow guys this is ahmad again. When I met my master Mr.Vijayan sir first time I went sleepless that night. There are no words to praise him for his teachings to me through his words since several years. At no stretch of imagination it could be believed that a person like Vijayan is existed and is god's gift. He is master because I could able to learn the characters from a small boy chewing lalipup and caramal (BHAYANKARA PUDIAN) to the richest character of multimillionior LARGOWINCH. I am relocated from Thirupattur to Bangalore, but still I continue to read all his creativity. I lost childhood curiosity about festivals and other functions everything but whenever I get his books on hand I will be thrilled and remember childhood and virtually become child. I promise I will be there with you till my last breath. INSHA ALLAH. love you PARANI, SRIRAM, KHALEEL AND PRASANNA AND ANNACHI. I am closely watching IRAVUKKAZHU.
ReplyDeleteஉண்மை ,சிறு வயதில் தூங்கும் போது கதைகளை கூறி ஆர்வத்தை வளர்த்த எனது தந்தை,பின்னர் படிக்க கற்று கொடுத்த ஆசிரியர்கள்,அதன் பின்னர் எனது ஆர்வத்தை அதிக படுத்திய,தமிழை ரசிக்க வைத்த ,எதோ எழுதும் திறனை ஊக்குவித்த அனைத்தும் எனது அற்புதமான ஆசிரியர் விஜயன் அவர்களையே சாரும்.....இன்னும் அவரை நான் ஆசிரியரே என அழைப்பதே அதன் காரணமும்.....மூன்று ஆசிரியர்கள் எனக்கு எப்போதும் என பெருமித படும் எண்ணங்கள் எப்போதும் என்னுள்ளே உண்டு ......
Deleteமுற்றிலும் உண்மை அஹ்மத்.
Deleteநாம் அனைவருமே அவரது புத்தகங்களுக்கு மற்றும் அவரது மொழிபெயர்ப்புக்கு அடிமை.
நம்மை எல்லாம் இணைக்கும் ஒரு மையப்புள்ளி அவர்.
எனது கருத்தை நண்பர்கள் அனைவரும் ஒத்துக்கொள்வார்கள் என நம்புகிறேன்.
அழகிய ,மிகைபடுத்த படாத உண்மை.......
Deleteநண்பா! அட்டகாசமான கதை வரிசை! பாதுகாப்பாக வைத்து இருக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்! கொடுங்க கையை! நான் ராணி காமிக்ஸ் ல ஆரம்பிச்சுதான் லயன்க்கு தாவியவன். அப்போ எங்க மணலூர்பேட்டையில்(விழுப்புரம் மாவட்டம்) ராணி காமிக்ஸ் கிடைக்கும். லயன் வேண்டுமானால் திருக்கோவிலூர் தான் போகணும். அதற்கான வாய்ப்பு சிறு வயதில் எனக்கு கிடைக்கவில்லை. எங்க ஊரில் இயங்கிய வாடகை புத்தக நிலையங்கள்தான் தாகத்தை தீர்த்து வைத்தன. ராணியின் பொன்னாலான காலம் அது. ஒவ்வொரு புத்தகத்தையும் விரிவாக (ஸ்கான் இணைப்புகளை நிறைய இணைத்து ஹி ஹி) எழுதுங்களேன். என்றும் அன்புடன் ஜானி. bye!
ReplyDeleteநன்றி ஜானி.உங்களுடைய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டதற்கு.
Deleteநண்பர்களே,அனைவருக்கு ஒரு பொதுவான விண்ணப்பம்.
ReplyDeleteநண்பர்கள் அனைவரும் எனது முந்தய பதிவை கவனிக்க வில்லை என்று நினைக்கிறன்.
இரண்டு நாட்களில் இரண்டு பதிவு இட்டதால் இந்த நிலைமை என நினைக்கிறன்.
http://www.kittz.info/2012/09/xv-mayajaal-stories-collection.html
நண்பா வழக்கம் போல் (வேறு வார்த்தை தெரியவில்லை) அருமையான பதிவு மற்றும் COLLECTION :-).
ReplyDeleteஒவ்வொரு அட்டைப்படத்தைப் பார்க்கும் போதும் ஒரு பழைய நினைவு மனதில் ஓடுகிறது.
நண்பர் ஸ்டீல் CLAW அவர்கள் பின்னூட்டத்திலேயே கலக்கிவிட்டார். நண்பர் ஸ்டீல் CLAW அவர்களே உங்களுக்கு என் சார்பாகவும், நண்பர் இரவுக் கழுகு சார்பாகவும் (நண்பா கேட்காமலேயே கூட்டணி சேர்த்து கொண்டேன்) ஒரு வேண்டுகோள் இவ்வளவு நீள பின்னூட்டமிட்டு எங்களை உற்சாகப் படுத்தும் நீங்கள் ஒரு வலைப்பூ ஆரம்பித்து எங்களுக்கு மேலும் சந்தோசத்தைக் கொடுக்கலாமே? (நண்பர் ஸ்டீல் CLAW அவர்கள் தவறாக எண்ண மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.)
நானும் கேட்க ஆசையாக தான் இருக்கிறேன் நண்பா.
ReplyDeleteஆனால் அவர் இன்னும் ஆரம்பிகாததால் தான் நம்ம வலை பூக்களில் அவரது முழு திறமையும் காண முடிகிறது.
நமது வலை பூக்களும் அவருடையது தான்.
இரும்பு கையரே! அதான் ஆசையா கேக்கிறோம் இல்லை வாங்க ப்ளாக் ஆரம்பிங்க நானும் கேப்ல கூட்டணியில் இணைஞ்சிட்டேன்! வாரும் அய்யா உங்க பொக்கிஷத்தை கொட்டுங்க!
ReplyDeleteகூட்டணியில் சேர்த்ததற்காக வாழ்த்துக்கள்.
Deleteஇரும்புக்கையார் மனம் இறங்கி வருவாராக.
நல்ல collection ...அருமையாக உள்ளது ...
ReplyDeleteஎனது வலைத்தளம்... மறக்காமல் வாருங்கள்.
வருகைக்கு நன்றி நண்பரே.
Deleteதல..கிரேட்...இதுல சில காமிக்ஸ் படிச்சு இருக்கேன்...சமீபத்தில் பதிவர் சந்திப்பிற்கு சென்னை போயிருந்த பொழுது, லையன் காமிக்ஸ் ஸ்பெஷல் எடிஷன் வாங்கி வந்தேன்..ரொம்ப வருஷம் கழித்து காமிக்ஸ் படித்த அனுபவம் மறக்க முடியாதது....உங்கள் பதிவு ஸ்வீட் மெமரீஸ்...
ReplyDeleteஅப்புறம் தமிழ்மணத்தில் இனைதமைக்கு வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்களுக்கு நன்றி ராஜ்,
Deleteஉங்கள் நினைவுகளை எனது பத்தி தூடியது அறிந்து மகிழ்கிறேன்.
எனது பதிவின் நோக்கமும் அதுவே.
I had lots of them Raj... But lost them.. Ippo oru 50 mattumthaan irukku.. Comic paddippavargal kurainthu vittanar enalaam.. TV,Films thaakkaththaal... In Srilanka there are few shops to sell ...Any way nice share boss...
ReplyDeleteஉங்களது கூற்று மிகவும் உண்மை.
Deleteஆனால் இப்பொழுது அது மீண்டும் புத்துயிர்பெறுகிறது எனலாம்.
அதற்க்கு முக்கிய காரணம் இப்பொழுது லயன் மற்றும் முத்து காமிக்ஸ் கலரில் உலக தரத்தில் வருகிறது.
உங்கள் collection i பார்க்க பார்க்க எனது இளம் வயது நினைவுகளை கிளற செய்கிறது நண்பா ...நன்றி ...நன்றி....
ReplyDeleteவருகைக்கு நன்றி நண்பரே.
Deleteஉங்கள் நினைவுகளை எனது பதிவு தூண்டியது அறிந்து மகிழ்கிறேன்.எனது பதிவின் நோக்கமும் அதுவே.
நண்பர்களே நன்றிகள்................உண்மைதனை பாலாஜி சுந்தரும் (சித்தாந்தம் ஹ ஹா ஹா ...............),கிருஷ்ணாவும் கூறி விட்டனர் .கிருஷ்ணாவின் தெளிவான புதையல்களை கொண்டு வரும் ஆர்வமும்,சௌந்தரின் கதை சொல்லும்,விரிவான திறனும்,சைமன் அவர்களின் சுய சரிதை போன்ற படைப்பாற்றலும் ,நண்பர் கார்த்திக்கின் பன்முக கலக்கல்களும்,மற்றும் நம் ஆசிரியர் கூறியது போன்ற நமது வலை தல முன்னோடிகளின் எழுத்துக்களும் ,இவைகளே என்னை பதிலிடும் ஆர்வத்தை தந்ததெனில் மிகை அல்ல.......உண்மையாக வெறும் வார்த்தைகள் அல்ல ........நீங்கள் எப்போதும் கலக்குபவர்கள்.......நான் எப்போதாவது,அதுவும் உங்களது எழுத்துக்களின் தூண்டலே.....நீங்கள் ஒரு சூரியன் எனில் நான் உங்களால் ஒளி பெறுகிறேன் அவளவுதான்..........ஆகவே தயவு செய்து ,என் மேல் கருணை கொண்டு ......................
ReplyDeleteஉங்கள் தன்னடக்கம் தான் உங்களை மேலும் உயர்த்துகிறது,
ReplyDeleteஎப்படியோ உங்கள் முடிவை கூறிவிட்டீர்கள்.
அருமையான collection! பழைய நினைவுகளை திரும்பக் கொண்டு வருகின்றன.
ReplyDeleteMissed all those collection while growing up.
உங்களது முயற்சிக்கு மிக்க நன்றி
நன்றி நண்பரே.உங்களது நினைவுகளை எனது பதிவு தூண்டியது மகிழ்ச்சி அளிக்கிறது.
ReplyDeleteஆஹா... சொல்ல வார்த்தைகள் இல்லை.. ஒரு இரண்டு நிமிடம் அப்படியே கடந்த காலத்திற்கு சென்று விட்டேன்... ராணிகாமிக்ஸ் நான் வாங்கும் போது 1:50. முதலில் அறிமுகப்படுத்தியது சிரில் அண்ணன். முதல் கதை சுறா வேட்டை.
ReplyDelete