Wednesday, September 19, 2012

Herlock Sholmes - Mini Lion - எழுந்து வந்த எலும்புக்கூடு




வணக்கம் நண்பர்களே,

வெகுநாளாக நான் நம்ம சௌந்தர் போல தனி பதிவு இட ஆசைப்பட்டேன்.அது இன்று தான் நிறைவேறி உள்ளது.
இது தான் எனது முதல் தனி புத்தக பதிவு.
இன்றைய பதிவில் நாம் காணபோவது மினி லயனில் வந்த  ஹெர்லக்   ஷோம்ஸ் முதல் கதை "எழுந்து வந்த எலும்புக்கூடு".
மிகவும் புகழ் வாய்ந்த ஷெர்க் ஹோம்ஸ் கதாபாத்திரத்தை கிண்டல் செய்து உருவாக்கப்பட்ட கத பாத்திரம் தான் இது.

அவர்களுக்கு நமது விஜயன் சார் அவர்களின் அறிமுகம் உங்களுக்காக.



கதை :

லண்டன் மாநகர்.
ஸ்காட்லான்ட் யார்ட் இற்கே சவால் விடும் புதிய பிரச்னை.
சமீபகாலமாக சுடுகாடில் இருந்து பிணங்கள் காணாமல் போகின்றன.
அதிகாரிகள் எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.சீப் அவர்கள் மிகவும் கோவப்படுகிறார்.

முடிவில் இந்த முடிச்சை அவிழ்க்க கூடியவர் ஒருவரே என கூறி நமது   ஹெர்லக்  ஷோம்ஸ் அவர்களை அழைகிறார்.
அவர் தனக்கு அந்த வழக்கை பற்றி அனைத்தும் தெரியும் என்றும் உங்கள் அதிகாரிகளில் ஒருவர் அதற்கு துணை போவதாக தான் சந்தேகபடுவதாகவும் கூறுகிறார்.ஆகையால் தான் இந்த வழக்கை எடுத்துகொள்வது யார்க்கும் தெரியவேண்டாம் என்றும் தான் மறுத்துவிட்டதாக அவர்களிடம் கூறவும் சொல்கிறார்.அதன் படியே சீப்பும் கூறுகிறார்.

பின்பு ஷோம்ஸ் சந்தித்து அந்த வழக்கு சம்பதமான தகல்வல்கள் அடங்கிய தொகுப்பை கொடுக்க பார்க் வருகிறார்.
அங்கிருக்கும் படகை கட்டும் முனை மேல் அமர்ந்து இன்னும்  ஷோம்ஸ்  வரவில்லையே என்று கூறும் போது அந்த முனை பேசுகிறது.
அதனை கண்டு அதிர்ச்சி அடையும் அவர் அது நமது ஷோம்ஸ் தான் என தெரிந்து அமைதி ஆகிறார்.பின்பு அவரிடம் தொகுப்பை கொடுத்துவிட்டு செல்கிறார்.






பின் வாஸ்டனிடம் காணாமல் போன பிணங்களின் உறவினர்களிடம் விசாரிக்கசொல்லிவிட்டு நூலகம் சென்று இந்தியா ஒரு புதிரான பூமி(ஆம் அது தான் அவர் படிக்கும் புத்தகத்தின் பெயர்) படிக்கிறார்.

இதற்கிடையில் மேலும் மூன்று பிணங்கள் பிணவறையில் இருந்து தானாக இரவு 12 மணிக்கு முழித்து கொண்டு ஒரு குதிரை வண்டியில் தப்பித்து செல்கிறார்கள்.மறைந்து இருக்கும் போலீசார் அது ஏதோ சாதாரண மனிதர்கள் என நினைத்து சந்தேகபடாமல் விட்டுவிடுகிறார்கள்.

காலையில் மீண்டும் மூன்று பிணங்கள் காணாமல் போனதை பற்றி படிக்கிறார்.அப்பொழுது வாஸ்டனும் காணாமல் போன பிணங்களின் உறவினர்கள் அனைவரும் மறைந்து  போனதாக கூறுகிறார். இதனால் ஷோம்ஸ் சந்தேகப்பட்டு காணாமல் போன அனைவருக்கும் ஏதோ ஒரு ஒற்றுமை இருக்கவேண்டும் என கூறி அதனை கண்டுபிடிக்கும் பொறுப்பை வாஸ்டனிடம் ஒப்படைகிறார்.பின் பிணவறை ஆராய்வதற்காக செல்கிறார்.

பிணவறையை ஆராய்ந்து ஒன்றும் கிடைக்காமல் வெளியே வரும் போது இருவர் பேசிகொள்வதை கண்டு ஒரு செம்மறி ஆடாக மாறி கவனிக்கிறார்.
ஒரு பெண்ணும் ஒரு கிழவனும் பேசிகொள்கிரார்கள் கையில் ஒரு கடிதம் வைத்திருக்கிறார் அந்த கிழவன்.அது பறந்து வந்து நம்ம ஆடுகிட்ட வருது.அதனை தனது வாயில் கவ்விக்கொள்கிறது அதனை பறிக வரும் இருவரை பார்த்து முறைகிறது.அப்பொழுது அங்கு வரும் பராமரிப்பாளர் அந்த இருவரிடமும் யார் ஆட்டை கொண்டு வந்தது எனக்கூறி விசாரணை செய்கிறார்.அந்த சமயத்தில் தனது வேஷத்தை கலைத்து விட்டு கடிதத்துடன் தப்பித்துவிடுகிறார் ஷோம்ஸ்.

அக்கடிதத்தில் 

மிஸ்டர் டிரென்ட் நான் சாகவிரும்புகிறேன் உரிய தொகை தந்து விடுகிறேன் இப்படிக்கு மிஸ்டர் தாமஸ் போலந்து என இருக்கிறது.






அதில் இருக்கும் டிரென்ட் என்ற பெயர் எங்கோ கேள்விபட்டிருபதாக நினைத்த ஷோம்ஸ் ஸ்காட்லான்ட் யார்டின் பதிவேடு பராமரிப்பு பிரிவுக்கு சென்று பார்கிறார்.அங்கு அவருக்கு சீப், டாக்டர் சான்டேர்ஸ் என்பவரை அறிமுகம் செய்கிறார்.அவர் தான் பிணங்களை பிரேதப்பரிசோதனை செய்து உறுதிபடிதியதாக கூறுகிறார்.அங்கு பதிவேடுகளில் தேடிய ஷோம்ஸ் க்கு அதிர்ச்சி trend என்ற பெயர் சம்பந்தமான பக்கங்கள் கிழிக்கப்படிருகின்றன.
வெளியே வரும்போது அங்கு வரும் இன்ஸ்பெக்டரிடம் trend பற்றி கேட்கிறார்.அவரிடம் இருந்து trend தண்டனை காலம் முடிவதற்கு முன்பு விஷம் அருந்தி இறந்துவிட்டதை அறிகிறார்.
பின் வாஸ்டனை சந்தித்து விவரங்கள் அறிகிறார்.இறந்த அனைவருக்கு கடன் தொல்லை இருப்பதை கண்டுபிடிக்கிறார்..




பின் மீண்டும் சீப்பை சந்தித்து சாண்டர்ஸ் பற்றி கேட்கிறார் அவர் மிகவும் நம்பத்தகுந்தவர் என அறிகிறார். அவரிடம் விசாரிக்கிறார்.அவர் தான் நன்றாக சோதிததாகவும் அவர்கள் அனைவரும் கண்டிப்பாக இறந்துவிட்டதாகவும் கூறுகிறார்.அங்கிருந்து வெளியில் வரும்போது தான் பார்க்கில் கிழவனுடன் சந்தித்த பெண்ணை கண்டு பக்கத்தில் இருந்த போலீசிடம் விசாரிக்கிறார்.
அவர் தான் டாக்டர் சாண்டேர்சின் சகோதரி என்று அறிகிறார்.

பின் வாஸ்டனிடம் சென்று தான் குற்றவாளியை கண்டுபிடித்து விட்டதாகவும் அதற்கான ஆதாரத்தை கண்டுபிடிக்க அவரை கூடிக்கொண்டு மயானம் சென்று ஒரு சமாதியை தோண்டிபார்கிறார்.





அடுத்து மீண்டும் மூன்று பேர் இறந்து போனதை அறிந்து கண்டுபிடிபதர்காக எலும்புக்கூடு போல வேடம் அணிந்து மயானம்  மறைந்து கொள்கிறார்.

சிறுது நேரத்தில் அங்கு சீப்புடன் வரும் டாக்டர் சாண்டர்ஸ்  பிணங்களை மீண்டும் சோதிபதாக சொல்லி உள்ளே வந்து பிணங்களின் நெற்றியில் யாரும் பார்க்காத வண்ணம் ஏதோ ஒரு திரவத்தை தடவுகிறார்.ஆனால் இதனை மறைந்து இருந்த ஷோம்ஸ் பார்த்துவிடுகிறார்.



இரவு பன்னிரண்டு மணி ஒவ்வொரு பிணங்களாக எளுந்தரித்து வெளியே வருகிறது வழக்கம் போல மறைந்து இருந்த போலிஸ் அவர்களை சந்தேக படவில்லை.அவர்கள் ஒரு குதிரை வண்டியில் ஏறி செல்கிறார்கள்.அவர்களை நமது ஷோம்ஸ் தடுத்து இக்குற்றங்களுகேல்லாம் காரணம் டாக்டர் சாண்டர்ஸ் என்று நிறுபிகிறார்.மற்றும் அவர் தான் எல்லோரும் இறந்துவிட்டதாக கருதும் குற்றவாளி trend என கூறுகிறார்.
தான் அவனது சமாதியை தோண்டி பார்த்ததாகவும் அதனுள் பிணம் எதுவும் இல்லை என்கிற ஆதாரத்தையும் கூறுகிறார்.




அனைவரும் ஒரு கஷாயத்தை குடித்தால் இறந்த பிணம் போல ஆகிவிடுவார்கள் என்றும் பின் ஒரு வித கொழுப்பை அவர்கள் நெற்றியில் தடவினால் பின் எழுந்துவிடுவார்கள் என்று தான் ஒரு புத்தகத்தில் படித்ததை விளக்குகிறார்.இவ்வாறு அவரது முதல் சாகசம் முடிந்தது. 


 உச்சகட்ட காமெடி .


விரைவில் எதிர்பாருங்கள்.


லயன் புக் கிளப் ஒரு பார்வை.



நண்பர்களே இது எனது முதல் தனிப்பதிவு.
எனது பதிவிடும் முறையில் ஏதாவது குறை இருந்தால் கூறுங்கள் திருத்திக்கொள்கிறேன்.கதை சொல்லும் விதத்தில் ஏதேனும் மாற்றம் தேவையா என்பதையும் கூறுங்கள்.

அவ்வளவு தான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வெ.

33 comments:

  1. ரொம்பவே சீரியஸான ஷெர்லக் கதைகளை அப்படியே காமெடியாக்கி வயிறு குலுங்க சிரிக்க வைத்த மினிலயனில் வந்த இந்தக் கதையை என் சிறுவயதில் வெகுவாக ரசித்துச் சிரித்திருக்கிறேன். குறிப்பாக அந்த உச்ச கட்ட காமெடி.

    காமெடிக்கு லாஜிக் எல்லாம் பெரிதாகத் தேவைப்படுவதில்லை எனும்போது, இக்கதைகளை மறுபதிப்பாக வெளியிட்டால் இக்காலத்துக்கும் நன்றாகவே பொருந்தும்.
    ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    சில நிமிடங்களாவது என்னைப் பல வருடங்கள் பின்னோக்கிச் செல்லவைத்த நண்பர் கிருஷ்ணாவுக்கு நன்றிகள் பல!

    ReplyDelete
    Replies
    1. உண்மை நண்பரே.அதுவும் நமது இப்பொழுதைய தரத்தில் வந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.
      எனக்கு ஹெர்லோக் சாகசம் எத்தனை வந்தது என்று தெரியவில்லை.
      நண்பர்கள் தெரிந்தால் கூறலாம்.

      Delete
  2. நல்ல முயற்சி கிருஷ்ணா, வித்தியாசமான கதைதான் அது!

    கருத்தைக் கேட்டதால் சொல்கிறேன், குறை சொல்வதாக நினைக்க வேண்டாம்! ;) "ஹெர்லக் ஷோம்ஸ்" என்ற பெயரை பதிவில் வித விதமாய் மாற்றியிருக்கிறீர்கள்! அந்த ஒரிஜினல் ஷெர்லக் ஹோல்ம்ஸ் வந்துதான் எத்தனை வகையாக மாற்றி இருக்கிறீர்கள் என்பதை கண்டு பிடிக்க வேண்டும்! :D

    எழுத்துப் பிழைகளை தவிர்க்க முயற்சியுங்கள் கிருஷ்ணா, உதாரணத்திற்கு சில:
    //சம்பதமான தகல்வல்கள்//
    //எளுந்தரித்து//
    //நிறுபிகிறார்//

    "திருத்திக் கொள்கிறேன்" என்பதிலேயே பிழை இருக்கிறதே?! :)
    //குறை இருந்தால் கூறுங்கள் திருத்திக்கொள்கிறேன்//

    ReplyDelete
    Replies
    1. நன்றி கார்த்திக்.
      நான் கூகுள் transliterate பயன் படுத்துகிறேன்.
      சில வார்த்தைகள் நான் எதிர்பார்ப்பது போல வருவதில்லை.
      மற்றும் சில இடங்களை கவனிக்காமல் விட்டுவிட்டேன்.
      இதே கருத்தை மற்றும் ஒரு நண்பர் கைபேசியில் அழைத்தே கூறிவிட்டார்.
      கண்டிப்பாக அடுத்த பதிவில் தவிர்க்க முயற்சி செய்கிறேன்.

      Delete
    2. இயலாத எழுத்துக்களை காப்பி பேஸ்ட் செய்து விடுங்கள் எளிதாக வரும்..............

      Delete
    3. ல எனில் தனியாக எழுதி இதனை பேஸ்ட் செய்யலாம் உரிய இடத்தில் ............முன்னேரே தங்களது பதிவில் உள்ள எழுத்துக்களையும் இம்முறையில் பயன் படுத்தினால் இலகுவாக இருக்கும்........

      Delete
    4. அடுத்த பதிவில் உங்களது யோசனையை கண்டிப்பாக பயன் படுத்துகிறேன் நண்பரே.

      Delete
    5. ஸ்பெல்லிங் மாற்றி அடிப்பதன் மூலம் வேண்டியதை வர வைக்கலாம்! உதாரணம்:
      Herlock - ஹெர்லோக்
      Herlak - ஹெர்லக்

      muthu - முது
      muththu - முத்து

      Delete
    6. நன்றி நண்பரே.பதிவிலும் மாத்திவிட்டேன்.

      Delete
  3. நண்பரே தங்கள் வரவு நல்வரவாகுக .........இந்த கதை படித்துள்ளேன்..............ஆனால் நினைவில் இல்லை.................முழு கதையையும் அற்புதமாக விவரித்துள்ளீர்கள்...................நன்றி ....தங்களது பிற கதைகளையும் இது போல விரிவாக எதிர்நோக்கும்.......................

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே.

      //தங்களது பிற கதைகளையும் இது போல விரிவாக எதிர்நோக்கும்//

      கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்.

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. உங்கள் முதல் முயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பா. முழுதும் படித்து விட்டு என் கருத்துக்களை சீக்கிரமே பதிவு செய்கிறேன்.

    ReplyDelete
  6. நண்பா உங்கள் முதல் முயற்சி அருமை. சிறுவயதில் படித்த கதை. மீண்டும் நினைவுபடுத்தியதற்கு நன்றி. நன்றாகவே கதையை விளக்கியுள்ளீர்கள். போக போக எழுத்து நடை இன்னமும் மெருகேறும். வாழ்த்துக்கள் தொடருங்கள்...

    குறைகள் பற்றிய என் கருத்துக்கள்:

    நண்பா நான் கூற நினைத்த அனைத்து கருத்துக்களையும் மேலே நண்பர்கள் ஸ்டீல் க்ளாவும், கார்த்திக்கும் சொல்லிவிட்டார்கள். நானும் அதேதான் நினைத்தேன். இந்தப் பிரச்சனைகள் போக போக சரியாகிவிடும். ஆரம்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள்தான் இவை. எழுதி முடித்த பின் ஒருமுறை முழுவதும் வாசித்து பார்த்துவிட்டு "Publish" செய்தால் பிரச்சனையை ஏற்படாது. ஆனால் இவ்வளவும் எழுதி முடித்து விட்டு, நாம் எழுதியதை நாமே மீண்டும் வாசித்து பார்ப்பது மிகவும் சிரமமான வேலை (நான் ரொம்ப சோம்பேறி செய்ய மாட்டேன் :-). அறிவுரை நண்பர்களுக்கு மட்டுமே :-) ). இருந்தாலும் இதை பின்பற்றினால் எளிதில் இந்தப் பிரச்சனைகளை தவிர்த்து விடலாம்.

    ReplyDelete
    Replies
    1. படித்து விட்டு தான் பகிர்ந்தேன் இருந்தும் பல பிழைகள்.
      அடுத்த பதிவில் மேலும் சிரத்தை எடுப்பேன்.

      கருத்துக்கு நன்றி நண்பா.

      Delete
  7. நண்பரே, தங்களது தனிப்பதிவுகள் தொடரட்டும். டெக்ஸின் பழிவாங்கும் புயல் இதழின் பின் அட்டையில் இந்த கதையின் விளம்பரம் பார்த்துள்ளேன்.
    இந்த இதழ் கைகளில் கிடைப்பதற்கோ, அல்லது மறுபதிப்பில் வெளிவருவதற்கோ இருக்கும் வாய்ப்புகள் மிக குறைவே என்பதால் உங்கள் கதையயையே முழுவது படித்துவிட வேண்டியதுதான்.

    நான் e-kalppai - Keyman Thamizha என்ற மென்பொருள் உபயோகபடுத்துகிறேன். முயற்சி செய்து பாருங்கள். நெட்டில் இல்லாத போதும் இதை உபயோகப்படுத்தி கொள்ளலாம்

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக தனிப்பதிவுகள் தொடரும்.
      மென்பொருள் பற்றிய தகவலுக்கு நன்றி நண்பரே.
      கண்டிப்பாக முயற்சி செய்து பார்கிறேன்.

      Delete
  8. விரிவான தங்களது பதிவுக்கு நன்றி நண்பரே
    தொடருங்கள் உங்கள் பதிவுகளை இதுபோலவே
    நமது நண்பர்கள் கூறியது போல போகப்போக சரியாகிவிடும்
    இனிய நினைவுகளை கொணர்ந்தமைக்கு நன்றி நண்பரே :))
    .

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே.
      எல்லாம் நமது நண்பர்களின் ஊக்குவிப்பு தான் என்னை மேலும் தொடர வைக்கிறது.
      அதற்காக எல்லா நண்பர்களுக்கும் நன்றி.

      Delete
  9. நண்பரே, பதிவிற்கு நன்றி .என்னிடமும் இந்த புத்தகம் உள்ளது.அருமையான கதை.மேலும் உங்கள் பதிவை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.நன்றி.

    ReplyDelete
  10. நண்பரே, பதிவிற்கு நன்றி .என்னிடமும் இந்த புத்தகம் உள்ளது.அருமையான கதை.மேலும் உங்கள் பதிவை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வரவிற்கும் பின்னுடதிர்க்கும் நன்றி பரணி.

      Delete
  11. முடிந்தால் BARANIWITHCOMICS .blogspot .com .வாருங்கள் நண்பரே.

    ReplyDelete
  12. அழகான பதிவு நண்பா இதே மாதிரி நிறைய பதிவுகள் போட்டு கலக்க என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். கில்லி கில்லியா இருக்கும்மா! க்ரிஷ் னா சும்மாவா!

    ReplyDelete
    Replies
    1. நண்பரே ஏதோ உங்களால் முடிதளவு எல்லோரையும் ஊக்குவிக்கிறீர்கள் (அடி வாங்கறது யாரோ).
      உண்மையில் நமது நண்பர்களின் ஊக்குவிப்பு தான் நம்மை மேலும் சிறக்க செய்கிறது.

      Delete
  13. தனி பதிவு நல்லா இருக்கு. இந்த கதை நான் படிக்கவில்லை. உங்கள் பதிவு முழு கதையை படித்த திருப்தி கொடுத்தது.

    போட்டோ இருளில் எடுத்திருக்கிறீர்கள். நடுவில் மட்டும் நன்றாகவும் மற்ற இடங்கள் இருளாகவும் தெரிகிறது.
    காலையில் 8 மணிக்குள் வீட்டிற்க்கு வெளியே வந்து எடுத்தால் நன்றாக வரும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜ்.அடுத்த பதிவிற்கு நீங்கள் கூறிய முறையில் புகைப்படம் எடுக்கிறேன்.

      Delete
  14. இந்த கதையை நான் படித்த ஞாபகம் இல்லை, புத்தகமும் இல்லை . உங்கள் பதிவின் மூலம் தெரிந்துகொண்டேன். நன்றி கிருஷ்ணா

    ReplyDelete
    Replies
    1. நன்றி கார்த்திகேயன்.எங்கே வெகு நாட்களாக நமது வலைபூ பக்கம் காணோம்.

      Delete
  15. இந்த புத்தகம் படிச்சதில்லை .., Sherlock Tv Series - ம் படம் பாத்து இருக்கேன்.. ரொம்ப பிடிக்கும் வாய்ப்பு கிடைச்சால் படிக்கிறேன்.. அறிமுக படுத்தியமைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆனந்த.தொடர்ந்து நமது வலை பூவிற்கு வாருங்கள்.

      Delete
  16. ஹெர்லக் ஹோம்ஸ் கதைகள் இந்த இரண்டு மட்டும் தானா? இந்த கதை புத்தகம்என்னிடம் இல்லை . உங்கள் பதிவின் மூலம் தெரிந்துகொண்டேன். முழு புத்தகத்தை படித்த திருப்தி. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வரவிற்கு நன்றி நண்பரே.தொடர்ந்து வாருங்கள்.

      Delete