Tuesday, May 22, 2012

நாடோடி சிறுவன் ரெமி...................
முதல் பதிவை முடித்த கையோடு அடுத்த பதிவு.
ஆர்வமும் நேரமும் இருக்கும் போதே முடிந்த அளவு பதிவுகளை இட்டு விடலாம் என்று இருக்கிறேன்.

நாடோடி ரெமி முத்துவில் வந்த பெரிய சைஸ் காமிக்ஸ்.
எனக்கு தெரிந்து இதுதான் மிகப்பெரிய சைஸ் காமிக்ஸ்.பிறகு லயனில் வந்த இரத்தப்படலம் கதைளை கூறலாம்இதன் மூலம் Nobody's Boy: ரெமி என்ற jappanise காமிக் Series.

இது நிச்சயம் விஜயன் அவர்களின் வித்தியாசமான தேர்வு.

அவனுடன் பல சாகசங்கள் செய்யும் அவனது நாயும்.இறுதில் அவன் அம்மாவுடன் சேருவதில் முடியும் இந்த கதை.

இந்த காமிக்ஸை படித்திரு தால் உங்கள் கருத்தை கூறுங்கள்.நன்றியுடன்,
கிருஷ்ணா வ வெ

14 comments:

 1. நண்பரே,

  அடுத்தடுத்த பதிவுகளால் அசத்துகிறீர்கள்.

  இந்த நாடோடி ரெமி பற்றிய பின்னணி தகவல்களை சொல்வதெனில் ஒரு முழு பதிவே இடலாம்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே,

   எல்லாம் நமது நண்பர்களின் காமிக்ஸ் ஆர்வம் தான் என்னை தூண்டியது.
   பல நாட்களா நினைத்து இம்முறை நான் எனது ஊருக்கு சென்று இருந்த போது அனைத்து புத்தகங்களையும் படம் பிடித்து வந்துள்ளேன்.
   ஆகையால் சரக்கு இருக்கும் வரை பதிவுகள் தொடரும்.
   Scanner இல்லாததால் எனது N8 மொபைலில் எடுத்த புகைப்படங்கள்.

   Delete
 2. நான் கேள்வியே பட்டிராத இதழ் இது! வண்ண சித்திரங்கள் அபாரம்! :)

  ReplyDelete
 3. I have read it, and infact one of my early comics experience. I can not forget the smell come from the paper. Awesome

  Gajan from Sri Lanka

  ReplyDelete
 4. இது நான் படித்து மிகவும் ரசித்த கதை. ரெமியும், அவனது நண்பன் மாச்சாவும் இன்றுவரை மறக்க முடியாத பாத்திரங்கள். இப்புத்தகம் எங்காவது கிடைக்குமா நண்பர்களே. என் மகனுக்கு பரிசளிக்க விரும்புகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி நண்பரே.
   இன்றைய நிலைமையில் இப்புத்தகம் வெளி கடைகளில் கிடைப்பது கஷ்டம்.
   யாரவது நண்பர்கள் இரண்டு பிரதிகள் வைதிருந்து தந்தால் தான் உண்டு.

   Delete
 5. ம்ம்ம், மறுபதிப்புக்காக காத்திருக்க வேண்டியதுதான், முத்து காமிக்ஸ் மனது வைத்தால் தான் உண்டு. :-)

  ReplyDelete
  Replies
  1. உண்மை.ஆசிரியரின் வலைப்பூவில் உங்கள் தேவையை கூறுங்கள்.
   அடுத்த ஆண்டு வரிசையில் கொண்டு வரலாம்.

   Delete
 6. அவரது யாஹூ ID க்கு எழுதியிருக்கிறேன், பதில் வந்தால், இங்கு தெரிவிக்கிறேன்.
  ரெமி வீடியோக்கள் நிறைய உள்ளன, ஆனால், எதுவும் தமிழில் வந்த புத்தகத்திற்கு இணையாகாது. 7 அல்லது 8 வயதில் அதைப்படித்தபோது, அனாதைச்சிறுவர்களை நினைத்து மிகுந்த மனவருத்தம் உண்டானது உண்மை, அதனாலேயே இக்கதை என்னை மிகவும் பாதித்த ஒன்று.

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக காத்திருக்கிறேன்.Fingers Crossed.

   Delete
 7. பதில் கிடைத்தது.
  //நாடோடி ரெமி பிரதிகள் 1983 -ல் விற்றுத் தீர்ந்து போனவை. அவற்றை இப்போது (எங்களிடம்) வாங்கிட வாய்ப்பு இல்லை// :-)

  மறுபதிப்பு விருப்பத்ட்தைத் தெரிவித்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அருமை அவர்களது Prompt பதிலளிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.
   நமது காத்திருப்பு தொடர்கிறது.

   Delete
 8. அருமையான பதிவு. ஆனால், இது விஜயன் அவர்களின் கதைத் தெரிவு அல்லவாம்.

  'நாடோடி ரெமி' பற்றி ஆசிரியர் திரு.எஸ்.விஜயன் புதிய பதிவில் சொல்லியிருக்கும் விடயம்:

  "நாடோடி ரெமி" எனக்கும் ரொம்பவே நேசமானதொரு இதழ் ....கதைக்காக அல்ல - ஆனால் அதில் எனக்கிருந்த தொடர்பின் பொருட்டு !

  ஒன்பதாம் வகுப்போ ; பத்தாம் வகுப்போ படிக்கும் சமயம் அதுவென்று நினைவு ; விடுமுறைகளின் போது என்னை சென்னையில் இருந்த உறவினர் ஒருவர் வரச் சொல்லி என் தந்தையிடம் கோரிட, என்னைப் பொட்டலம் போட்டு அனுப்பினார்கள் அந்தக் காலத்து மெட்ராஸ்-க்கு ! தேவி தியேடர்ஸ் நிறுவனம் "ரெமி" என்ற அந்த animated movie -இன் இந்திய விநியோக உரிமைகளைப் பெற்று இருந்ததாகவும் ; தமிழில் dub செய்து படத்தை ரிலீஸ் செய்யும் சமயத்தில் அதனை ஒரு காமிக்ஸ் புக்காகவும் வெளியிட்டால் சிறப்பாக இருக்குமென்று அவர்கள் எண்ணியதால் அந்தக் காலகட்டத்தில் தமிழில் இருந்திட்ட ஒரே காமிக்ஸான முத்து காமிக்ஸ் உடன் ஒரு tie -up செய்திட அவர்கள் பிரியப்பட்டதாகவும் மெட்ராஸ் வந்த பின்னே தெரிந்து கொண்டேன். இதில் நான் என்ன செய்வதென்று எனக்குத் துளியும் புரியவில்லை என்ற போதிலும், அந்த வயதில் எனக்குத் தரப்பட்டதொரு மரியாதையாக அதை எடுத்துக் கொண்டு பந்தாவாக preview show -க்கெல்லாம் சென்று படத்தின் முதல் screening -ஐ பார்த்திட்டேன்.

  படம் பார்த்த போதே எனக்கு பெரிதாய் ஒரு அபிமானம் ஏற்படவில்லை ; அற்புதமான கிராபிக்ஸ்களைத் தாண்டி படத்தில் பெரிதாய் ஏதும் இருந்த மாதிரி எனக்குத் தோன்றவில்லை ! ஆனால் சென்னையில் இருந்த உறவினர் தேவி நிறுவனத்திடம் ஏற்கனவே வாக்குக் கொடுத்து வைத்திருந்தார் ; என் தந்தையும் இது போன்ற புது முயற்சிகளில் தயங்காது புகுந்திடும் ஆர்வலர் என்பதால், "நாடோடி ரெமி" எக்கச்சக்கமான செலவில் காமிக்ஸ் ஆனது ! அந்தக் காலங்களில் இன்றைய கம்ப்யூட்டர் தொழில் நுட்பங்கள் ஏதும் கிடையாதென்பதால் ; திரைபடத்தின் நெகடிவ்களில் இருந்தே கலர் பிரிண்ட்கள் போட்டு அவற்றிலிருந்து processing செய்து இதழ் தயாரிக்கப்பட்டது. எனக்கு இந்தப் பணிகளின் தொழில் நுட்பம் துளியும் அப்போது புரியாதது என்றாலும் அந்தப் பணிகளின் பெரும்பான்மையில் நானும் பராக்குப் பார்க்கும் பார்வையாளனாக உடனிருந்தேன் !

  நிறைய publicity சகிதம் திரைப்படமும், காமிக்ஸும் வெளிவந்தன...வந்த வேகத்திலேயே திரைப்படம் அடங்கிப் போனது ! "நாடோடி ரெமி" காமிக்ஸ் இதழும் விற்பனையில் நாக்குத் தள்ளிப் போனது. 1986 -ல் என் தந்தைக்கும், அவர்தம் சகோதரர்களுக்குமிடையே பாகப் பிரிவு நடந்திட்ட போது கிட்டங்கிகள் காலி செய்யப் பட்ட போது "நாடோடி ரெமி" எக்கச்சக்கமாய் பழைய பேப்பர் விலைக்குப் போடப்பட்டது இன்றும் எனக்கு நினைவில் உள்ளது ! Phew !

  http://lion-muthucomics.blogspot.com/2012/11/blog-post_17.html

  ReplyDelete
 9. Thanks For the Information.I have also read it in Edi's Blog.
  Thanks again for visiting my blog.

  ReplyDelete