Tuesday, July 31, 2012

காமிக்ஸ் புதையல் XI - Modesty Blaise Collections



வணக்கம் நண்பர்களே,

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு பதிவு.
நான் முந்தய பதிவில் கூறியது போல இப்பதிவில் என்னிடம் இருக்கும் மாடஸ்டி புத்தகங்களின் தொகுப்பையே அளித்துள்ளேன்.
அதனுடன் எனக்கு மிகவும் பிடித்த ஷெர்லோக் ஹோல்மேஸ்  புத்தகங்களையும் அளித்துள்ளேன்.

மாடஸ்டி புத்தகங்களில் மிகவும் முக்கியமான முதல் மூன்று புத்தகங்கள் என்னிடம் உள்ளன.அதற்க்கு மற்றும் ஒரு சிறப்பு அது லயன் காமிக்ஸில் வந்த முதல் புத்தகம் என்பதும் தான்.

நான் மிகவும் அதிர்ஷ்டசாலி.என்னிடம் லயன் காமிக்ஸின் முதல் இதழான கத்தி முனையில் மாடஸ்டி மற்றும் முத்து காமிக்ஸின் இரும்புக்கை மாயாவி மற்றும் ராணி காமிக்ஸின் அழகியை தேடி ஆகிய மூன்று புத்தகங்களும் உள்ளன.அவைகளை பற்றிய தனி பதிவுகள் மற்றொரு சமயத்தில்.

மாடஸ்டி பற்றிய அறிமுகம் எதுவும் தேவையில்லை.
எனக்கு வில்லிக்கும் மாடஸ்டி க்கும் இடையில் இருக்கும் காதல் மிகவும் பிடிக்கும்.அது மிக சிறப்பாக காமிக்கப்பட்டிருக்கும் பல தருணங்களில்.

எனக்கு மிகவும் பிடித்தது மாடஸ்டி இன் முதல் மூன்று கதைகள் தான்.மற்றவையும் நன்றாகவே இருக்கும் ஆனால் அவைகள் தான் எனது favourite.










எவ்வளவோ ஷெர்லோக் ஹோல்மேஸ் பற்றிய காமிக்ஸ் புத்தகங்கள் வந்துள்ளன.ஆனால் எனக்கு மிகவும் பிடித்தது மினி லயனில் வந்த புத்தகங்களே.அதில் அவரை காமித்திருகிற விதம் மிகவும் நன்றாக இருக்கும்.
அதுவும் அவர் போடும் ஒவ்வொரு வேஷங்களும் அப்பப்பபா அட அட அடா.






எனக்கு அவைகளின் ஆதி மூலம் பற்றி தெரியவில்லை.
மற்றும் எத்தனை புத்தகங்கள் வந்தன என்றும் தெரியவில்லை.
நண்பர்களுக்கு தெரிந்தால் பின்னுட்டம் மூலம் கூறுங்கள்.

அவ்வளவு தான் நண்பர்களே.
இன்னும் ஒரு காமிக்ஸ் பதிவுக்கான புகைப்படங்கள் உள்ளன.

அப்பொழுது மீண்டும் சந்திப்போம் நண்பர்களே.
கிருஷ்ணா வ வே.

30 comments:

  1. ME THE FIRST! U R THE LUCKIEST PERSON! HAPPY BLOGGING NANBA!!

    ReplyDelete
  2. நிறைய புத்தகங்களை பாதுகாத்து வைத்து இருக்கீங்க நண்பா வாழ்த்துக்கள்! ஆமா நீங்க எந்த ஊரு?

    ReplyDelete
    Replies
    1. அது மட்டும் ரகசியம் நண்பா

      Delete
    2. ரகசியத்தை எனக்கு மட்டும் சொல்லுங்களேன் நண்பரே ;-)
      .

      Delete
    3. ரகசியம் எனபது ஒருவருக்கு மட்டும் தெரிந்தது நண்பரே.

      Delete
    4. அது ரகசியமல்ல !!

      கிருஷ்ணா ஜாக்கிரதை. ஜான் சைமன் அவருக்கு தெரிந்த ஆளை யாராவது அனுப்பி விட போகிறார்.

      Delete
  3. பகிர்வுக்கு நன்றி நண்பரே

    // இன்னும் ஒரு காமிக்ஸ் பதிவுக்கான புகைப்படங்கள் உள்ளன. //
    ஆவலுடன் காத்திருக்கிறோம் நண்பரே :))
    .

    ReplyDelete
    Replies
    1. அது மீதமுள்ள முத்து மற்றும் லயன் பற்றியது நண்பரே.

      Delete
  4. //எவ்வளவோ ஷெர்லோக் ஹோல்மேஸ் பற்றிய காமிக்ஸ் புத்தகங்கள் வந்துள்ளன.ஆனால் எனக்கு மிகவும் பிடித்தது மினி லயனில் வந்த புத்தகங்களே.அதில் அவரை காமித்திருகிற விதம் மிகவும் நன்றாக இருக்கும்.
    அதுவும் அவர் போடும் ஒவ்வொரு வேஷங்களும் அப்பப்பபா அட அட அடா.//

    ஜூலியோ ரேடியோலோவிச் (ஓவியம்) மற்றும் ஜ்வோநிமிர் ஃபர்டிங்கர் (கதை) என்கிற பெல்ஜிய கூட்டணியில் உருவான ஷெர்லக் ஹோம்ஸ்'ஐ கிண்டல் அடித்து (பரோடி) ஹெர்லக் ஷோம்ஸ் என்று வெளியான கதைகளே நீங்கள் முதல் இரண்டு அட்டைப்படங்கலாக இந்த பதிவில் நீங்கள் வெளியிட்டு இருக்கிறீர்கள்.

    ஹெர்லக் ஷோம்ஸ் முதல் தமிழ் கதை முதன் முதலில் ஆனந்த விகடனில் வெளிவந்தது என்பது குறிப்பிட தக்கது.

    நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. இந்த கதையில் இருக்கும் நகைச்சுவைக்கு மயங்காதவர்கள் வேறெந்த நகைச்சுவைக்கும் சிரிக்க தெரியாதவர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பின்னுட்டதிர்க்கும் விளக்கங்களுக்கும் நன்றி நண்பரே.
      மொத்தம் எத்தனை புத்தகங்கள் வந்தன என்பது தெரியுமா நண்பரே.

      Delete
    2. Dear King Viswa,
      Can you tell me in which year ananda viktan this came, and how many stories of ஹெர்லக் ஷோம்ஸ் are available.

      I enjoy this book so much I want to know total how many books were available.

      Thanks
      Suresh

      Delete
  5. NICE POST & AS USUAL NICE COLLECTION NANBAA.

    //நான் மிகவும் அதிர்ஷ்டசாலி.என்னிடம் லயன் காமிக்ஸின் முதல் இதழான கத்தி முனையில் மாடஸ்டி மற்றும் முத்து காமிக்ஸின் இரும்புக்கை மாயாவி மற்றும் ராணி காமிக்ஸின் அழகியை தேடி ஆகிய மூன்று புத்தகங்களும் உள்ளன.// 10000000% FACT.

    VERY VERY LUCKY U ARE.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பின்னுட்டதிர்க்கும் நன்றி நண்பரே

      Delete
  6. NANBAA, FOR YOUR KIND INFORMATION:

    I HAVE CHANGED MY BLOG NAME TO

    "http://tamilcomics-soundarss.blogspot.in/"

    FROM TODAY.

    ReplyDelete
  7. பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே. உண்மையில் நீங்கள் அதிர்ஷ்டசாலி தான், லயன், முத்து, மற்றும் ராணி காமிக்ஸ் முதல் புத்தகங்களை வைத்து உள்ளீர்கள்.
    மாடஸ்டியின் ராணி காமிக்ஸ் கதைகள் நிறைய படித்து உள்ளேன். எனது மலரும் நினைவுகளை மீட்டி விட்டீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பின்னுட்டதிர்க்கும் நன்றி நண்பரே.

      Delete
  8. நான் வங்கி படிக்காமலே நண்பரிடம் இழந்த புத்தகம் கத்தி முனையில் மாடஸ்டி ,மரணக்கோட்டையும்,எழுந்து வந்த எலும்புக்கூடும் என்னிடம் உள்ளன,மாடஸ்டி இன் இஸ்தான்புல் பற்றியும் சிறிது விவரியுங்களேன் நண்பரே........................

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பின்னுட்டதிர்க்கும் நன்றி நண்பரே.
      கண்டிப்பாக அப்புத்தகத்தை பற்றி பின்னொரு நாளில் பதிவிடுகிறேன் நண்பரே.

      Delete
  9. ஹலோ கிருஷ்ணா,

    சூப்பர், செம கலக்‌ஷன். சினிமாவிலிருந்து மறுபடியும் காமிக்ஸ் பதிவை துவங்கி இருக்கிறீர்கள். ஐயர்ன் மேன் ஆக நடித்த ராபர்ட் டௌனி ஜூனியர் நடித்த ஷெர்லக் ஹோம்ஸ் இரண்டு படங்கள் வந்துள்ளன. இந்த இரண்டு படங்களையும் பார்த்துவிட்டீர்களா? இல்லையென்றால் பார்க்கவும்.

    கை ரிட்ச்சி டைரக்ட் செய்துள்ள இந்த இரண்டு படங்களும் ஆர்தர் கொனன் டோயல் எழுதிய ஷெர்லக் ஹோம்ஸ் கதைகளை ஆதாரமாகக் கொண்டு எடுக்கப் பட்டிருந்தாலும், புதிய படங்கள் ஷெர்லெக் ஹோம்ஸ் கேரக்டரை வித்யாசமான கோணத்தில் காட்டி இருக்கிறார்கள். இந்த இரு சினிமா படங்களும் துவக்கம் முதல் முடிவுவரை விறுவிறுப்பான, மூளைக்கு வேலை வைக்கும் படங்கள். இந்த இரண்டு படங்களிலும், ஷெர்லக்கின் மேக்கப் திறனை நன்கு காட்டி இருப்பார்கள். வழக்கமாக, குற்றம் நடந்த இடத்திற்கு ஷெர்லக் வந்த உடன், அங்கிருக்கும் தடயங்களை வைத்து, குற்றவாளி எப்படி குற்றத்தைச் செய்தான் என்று ஷெர்லக் வரிசையாக விளக்குவதுபோல் கதைகளில் வரும். ஆனால் இந்த இரு சினிமாவிலும், ஷெர்லக் ஒரு முக்காலமும் உணர்ந்த மகானையொத்த திறமைகளை வெளிப்படுதுவதாக அமைந்திருக்கும்.

    அடுத்து, மேலே ராஜ் என்ற ஒரு நண்பர் நுழைந்திருக்கிறார். நமது காமிக்ஸ் என்ற இன்ப வெள்ளத்தில் நீந்த ஓடோடி வந்திருக்கிறார். அவருக்கு ஒரு “ஓ” போடுவோம்.

    கடைசியாக ஒரு விஷயம். வயதுக்கு மீறிய காமிக்ஸ் கலெக்‌ஷனை வைத்திருக்கிறீர்கள், உங்கள் விக்ரமாதித்ய கம் கஜினி முகமது முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்.

    உங்களால் தான் என் பதிவு தாமதமாகிக் கொண்டே வந்தது. காரணம் ஏன் என்று பிறகு சொல்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பின்னுட்டதிர்க்கும் நன்றி நண்பரே.
      நான் அவ்விரு படங்களையும் பார்த்திருக்கிறேன் நண்பரே.
      அதிலும் இரண்டாவது படம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.
      அதிலும் இறுதில் ஆடும் சதுரங்கம் அருமை.
      பின் படம் முடியும் சமயம் அவர் போடும் சோபா மாறுவேடம் கச்சிதமாக இருக்கும்.
      நண்பர் ராஜ் bladepedia மூலம் அறிமுகம் ஆனார்.அவருக்கு நமது லயன் வெப்சைட் கொடுத்துள்ளேன்.

      Delete
  10. Nice and enviable collection buddy! Keep them safe ;)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பின்னுட்டதிர்க்கும் நன்றி நண்பரே.

      Delete
  11. Replies
    1. வருகைக்கும் பின்னுட்டதிர்க்கும் நன்றி நண்பரே.

      Delete
  12. //வில்லிக்கும் மாடஸ்டி க்கும் இடையில் இருக்கும் காதல் மிகவும் பிடிக்கும்//
    நட்பை எப்படி காதலாக மாற்றினீர்கள்?

    ReplyDelete
    Replies
    1. நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
      நான் காதல் என்றே இதுவரை நினைத்திருந்தேன் நண்பரே.
      அவர் வேறு அடி கடி இளவரசி என அழைப்பாரா.
      அதனால் அப்படி நினதுவிடேன்.

      Delete
  13. உங்களின் காமிக்ஸ் கலெகஷன் மிக மிக அருமை. என்னிடம் எழுந்து வந்த எலும்புக்கூடு இல்லை. தயவுசெய்து கதை என்ன என்று கூறுங்கள். (முடிந்தால் எல்லா பக்கங்களையும் ஸ்கேன் செய்து விளக்கவும்) ஹிஹிஹி.

    ReplyDelete
    Replies
    1. முதல் முறையாக பின்னுடமிடுலீர்கள்.
      தொடர்து உங்கள் ஆதரவை நல்குங்கள்.

      //தயவுசெய்து கதை என்ன என்று கூறுங்கள்.//

      கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் நண்பரே.

      Delete