Tuesday, September 4, 2012

காமிக்ஸ் புதையல் XIII - Indrajaal Comics Collection

வணக்கம் நண்பர்களே,

ஒரு வழியாக ஊருக்கு சென்று வந்து விட்டேன்.
எனது தங்கையின் கல்யாணம் இருந்ததால் நேர குறைவு காரணமாக ஒரு சில புகைப்படங்கள் மட்டுமே கொண்டு வந்துள்ளேன்.

எனது முதல் come back பதிவு இந்த்ரஜால் காமிக்ஸ் தொகுப்பு.
என்னிடம் மொத்தம் 11 புத்தகங்களே உள்ளன.

கதைகள் எனக்கு நினைவு இல்லை.
வேதளரின் பேய் குலம் மட்டும் நினைவு இருக்கிறது.
ஒரு போலி வேதளரின் பிடியில் இருந்து எப்படி காப்பாற்றுகிறார் என்பதே கதை.
இதில் அவரது குதிரையின் பெயர் கேசரி.

ஆனால் படங்கள் கலரில் அருமையாக இருக்கும்.








அடக்குவாரற மந்தையும் நன்றாக இருக்கும்.
இந்த புத்தகங்களை பற்றி என்னுடைய பொதுவான கருத்து இதன் மொழிபெயர்ப்பின் தரம் மிக குறைவே.


இக்கதைகளை பற்றி உங்களது கருத்தையும் கூறுங்கள் நண்பரே.

அவ்வளவு தான் நண்பர்களே.
மீண்டும் விரைவில் சந்திப்போம்.

கிருஷ்ணா வ வெ.


26 comments:

  1. //இக்கதைகளை பற்றி உங்களது கருத்தையும் கூறுங்கள் நண்பரே.//
    இந்த அரிய இதழ்கள் எல்லாம் பதிவில் பார்ப்பதே பெரிய விஷயம் ...

    ReplyDelete
  2. உண்மையில் நான் இந்த இதழ்களை வாங்கிய காலத்தில் எனக்கு இந்த இதழ்கள் மீது அவ்வளவு நாட்டம் கிடையாது.
    நான் விரும்பி வாங்கியது லயன்,முத்து மற்றும் ராணி தான்.

    ReplyDelete
  3. //இதில் அவரது குதிரையின் பெயர் கேசரி//

    //நான் இந்த இதழ்களை வாங்கிய காலத்தில் எனக்கு இந்த இதழ்கள் மீது அவ்வளவு நாட்டம் கிடையாது. நான் விரும்பி வாங்கியது லயன்,முத்து மற்றும் ராணி தான்//

    நான் என்னுடைய தி ஃபேண்டம் 2009 படத்தைப் பற்றிய பதிவில் முடிவில், அந்த படத்தில் என்னென்ன விஷயங்கள் இல்லை என்று ஒரு பட்டியல் இட்டிருப்பேன். அந்த பட்டியலில் 2 மற்றும் 3ம் பாயிண்டுகளில், வெள்ளைக் குதிரை கேசரி இல்லை, ஓநாய் வாலி இல்லை என்று இந்திரஜால் பெயரில் குறிப்பிட்டிருப்பேன். அந்த பதிவிற்கான உங்களது பின்னூட்டத்தில் நீங்கள் அதையே ஹீரே மற்றும் டெவில் என்று முத்து-லயன் பெயரில் குறிப்பிட்டிருப்பீர்கள். இதிலிருந்து தெரிய வருவது, என் ஆழ்மனதில் இந்திரஜால் ஃபேண்டமும், உங்கள் ஆழ்மனதில் முத்து-லயன் ஃபேண்டமும் பதிந்திருக்கிறார்கள்.

    தமிழில் ஃபேண்டம் முதலில் குமுதம் பத்திரிகையில் வார ஸ்டிப்புகளாக வெளிவந்தது. முதல் கதை வனக்காவல் படையைப் பற்றியது என்று ஞாபகம். குமுதத்தில் ஃபேண்டமின் பெயர் முகமூடி என்று நினைக்கின்றேன். உங்களுக்கு முதலில் அறிமுகமான ஃபேண்டம் முத்து-லயன் மூலம் அறிமுகமாகி இருப்பார். அதன் பின்புதான் நீங்கள் இந்திரஜாலை வாங்கி இருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.

    ஊருக்கு சென்று அவசர அவசரமாக போட்டோ எடுத்து வந்திருக்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன். அதனால் நினைவில் இருக்கும் பேய்க்குலம் கதையை மட்டும் ஒரு வரியில் சொல்லி இருக்கின்றீர்கள். ஒவ்வொரு கதைக்கும் ஒரு சிறிய பாரா அளவில் கதை விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்.

    தங்கைக்கு திருமணம் என்று செய்தி தந்துள்ளீர்கள், வாழ்த்துக்கள். தங்கையின் திருமண சமயத்தில், கிடைத்த நேரத்தில் உங்கள் பொக்கிஷ அறையை குடைந்துள்ளீர்கள். காமிக்ஸ் புதையல் I,II,III...என்று போடுவதன் காரணமாக நிறைய பேர்கள் (காமிக்ஸ்) புதையல் வேட்டைக்கு கிளம்ப ரெடியாகி தயாராக இருக்கின்றார்கள்.

    முத்து, லயன், வாண்டுமாமா, டின் டின், லக்கி லூக் என்று வந்து இப்போது இந்திரஜாலுக்கு வந்திருக்கின்றீர்கள். இந்திரஜால் உண்மையிலேயே புதையல்தான். பத்திரம்.

    //இக்கதைகளை பற்றி உங்களது கருத்தையும் கூறுங்கள் நண்பரே//

    இந்திரஜாலின் கடைசிக் காலத்தில் அதன் மொழிபெயர்ப்பும், தலைப்புகளும் ரெம்ப ரெம்ப கொடுமை. இதற்கு மேல் சொல்ல வேண்டும் என்றால் மீண்டும் கதைகளை படித்து ரெஃப்ரெஷ் செய்துதான் சொல்ல வேண்டும். அதற்கு இப்போது வாய்பும் இல்லை.

    வாழ்த்துக்கள் கிருஷ்ணா. தொடருங்கள் பதிவுகளை. என் பின்னூட்டத்தின் அளவைப் பார்த்தேன், மீண்டும் கொடும் பாவத்திற்கு ஆளாகிவிட்டேனோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. தகவல்களுக்கு நன்றி நண்பரே.
      குமுதத்தில் வந்தது நான் அறியாத ஒரு தகவல்.
      எனக்கு மார்யாவி அறிமுகமானது ராணி காமிக்ஸில் தான்.
      பின்னர் முத்து அதற்கு பின்பு தான் இந்த்ரஜால்.
      அனைத்து கதைகளை பற்றியும் கூற எனக்கும் ஆசை தான்.
      மீண்டும் படிக்க நேரம் இல்லை அதனால் தான் கூற முடியவில்லை.
      அடுத்த முறை முயற்சிக்கிறேன் நண்பரே.

      Delete
    2. ஓ.. ராணி காமிக்ஸை மறந்துவிட்டேன். உங்களது நிலைமையை புரிந்து கொண்டேன் நண்பரே. நன்றி.

      Delete
  4. சூப்பர் கலெக்சன் நண்பா.

    இந்திரஜாலின் அட்டைப் படங்களைப் பார்த்தாலே ஒரு தனி பீலிங் ஏற்படும்.

    இந்திரஜாலின் அட்டைப்படங்களில் வழக்கத்தைவிட ஹீரோக்களின் (அனைத்து உருவங்களிலுமே) உருவங்களில் வழக்கத்துக்கு மாறான ஒரு முரட்டு தன்மை தென்படும். பகதூருக்கு வரைந்த ஓவியரே அனைத்து அட்டைப்படங்களையும் வரைந்திருப்பார் போலும்.

    பீமா மற்றும் வேதாளரின் சிக்ஸ் பேக் சூப்பர் :)

    இந்திரஜாலுக்கே உரிய ஸ்டைல் தலைப்புகள் கலக்கல் :)

    ReplyDelete
  5. அற்புதமான என் நினைவில் மட்டுமே புதைந்துள்ள புதையல்கள்,மொழி பெயர்ப்பு ?மொழி தகர்ப்பே.தமிழை விளையாண்டிருப்பார்கள்.நண்பரே பூதப்பிறவி நமது ராணி காமிக்ஸாரின் பீமாவா ?

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய வரவு என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது நண்பரே.
      உங்களுடைய நினைவுகளை எனது பதிவு தூண்டி இருந்தால் சந்தோசம் நண்பரே.
      // பூதப்பிறவி // எனக்கு நினைவு தெரிந்து அது பீமா கிடையாது நண்பரே.அது ஒரு மாண்ட்ரேக் சாகசம்.

      Delete
  6. அடக்குவாரற்ற மந்தையா? ஹா ஹா ஹா நல்லா வெச்சங்கயா தலைப்பு. அட்டகாசமான பதிவு நண்பா!

    ReplyDelete
    Replies
    1. வரவிற்கு நன்றி நண்பரே.
      தங்களுடைய பதிவில் நான் கூறியது போல தொடருவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் நண்பரே.

      Delete
  7. தங்கைக்கு இந்த அண்ணனின் அட்வான்ஸ் வாழ்த்துக்கள். மறக்காம சொல்லிடுங்க நண்பா!

    ReplyDelete
  8. அந்த கேட்ஜெட் இணைப்பதை சொல்லி கொடுங்க நண்பா.

    ReplyDelete
    Replies
    1. My Blogs->Layout->Add Gadget->Followers

      இது தான் வழி நண்பரே.
      உங்களுடைய மெயில் id கொடுங்கள் நண்பரே.
      நான் மெயிலில் புகைப்படங்கள் அனுப்புகிறேன் நண்பரே.

      Delete
  9. மறுமொழி எழுத மறந்து விட்டேன், மன்னிக்கவும் கிருஷ்ணா! :)

    இந்திரஜால் காமிக்ஸ்களை பார்க்கும் போதெல்லாம் 20 - 25 வருடங்களுக்கு முன் அவை குவியல் குவியல்களாக பழைய பேப்பர் கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததும், நான் அலட்சியப் பார்வை வீசி அவைகளை புறக்கணித்ததுமே ஞாபகத்திற்கு வருகிறது! :D

    ReplyDelete
    Replies
    1. பின்னுடம் இடுவதெல்லாம் நமது சிறு வட்டத்தில் இருக்கும் நண்பர்கள் தான்,
      ஆகையால் யார் தவறினாலும் ஒரு சிறு வருத்தம் ஏற்படுகிறது.

      என்னாகும் அதே நிலை தான் நண்பரே.
      ஏதோ போனால் போகிறது என்று நான் வாங்கிய இதழ்கள் இவை.

      Delete
    2. //ஒரு சிறு வருத்தம் ஏற்படுகிறது//
      உங்கள் நட்புணர்வுக்கு நன்றி கிருஷ்ணா! :) இனி தவறாது!

      Delete
    3. நமது காமிக்ஸ் நண்பர்களின் வலைப்பூக்கள் இந்த சிறு வட்டத்தை தாண்டி பிறராலும் படிக்கப்பட வேண்டும் என்பதே என் ஆசை! அதற்கு முதல் படியாக அனைவரும் தத்தம் வலைபூக்களை தமிழ்மணத்தில் இணைத்தால் நன்றாக இருக்கும்!

      http://www.tamilmanam.net/login/register.php

      Delete
    4. நான் தங்களது லயன் ப்ளாக் பின்னுடம் பார்த்து இணைக்க முயற்சி செய்தேன் நண்பரே.
      ஆனால் இரண்டு முறையும் நிராகரித்து விட்டார்கள்,
      காரணம் தெரியவில்லை நண்பரே.

      Delete
    5. அடப்பாவிகளா!! எடிட்டரின் வலைப்பூவை நிராகரித்தாலும் அதில் ஒரு காரணம் இருக்கலாம்! (தொழில் சார்ந்த, வியாபார நோக்கமுடைய வலைப்பூ என அவர்கள் கருதி இருந்திருக்கலாம்!) ஆனால் உங்களின் வலைப்பூவை நிராகரிக்க என்ன காரணம் இருக்க முடியும்? அவர்களிடம் கேட்டீர்களா?!

      Delete
    6. இல்லை நண்பரே.அது ஒரு donot reply மெயிலில் இருந்தே வந்தது.

      Delete